Sunday, 29 January 2023

சிறப்பான காவல் பணி நினைவுகள்: By சகோ சிராஜுதீன் பணி நிறைவுற்ற காவல் துறை உதவி ஆணையர் )

 சிறப்பான காவல் பணி நினைவுகள்:

By சகோ சிராஜுதீன் பணி நிறைவுற்ற காவல் துறை உதவி ஆணையர் Asst Commissioner of Police Retd)
30012023
“முரட்டுப்பலா உள்ளே இனிப்புச் சுளை “
ஒரு காவல் துறை அதிகாரியைப் பார்த்து கதை நாயகன் சொல்வது ( பாலாகுமாரனின் புதினம் தாயுமானவன் என நினைவு )
முரட்டுப்பலா அல்ல இந்தப்பதிவை அனுப்பிய சகோ சிராஜுதீன்
காக்கிச் சட்டைக்குள் மறைந்திருக்கும் கனிந்த இதய்த்தை வெளிகொணர்கிறார்
தொடர்ந்து அவருடைய மொழியில் :
நாட்டு மக்களை பாதுகாக்கும் அரசுத்துறைகளில் முதன்மையானது ராணுவம் அடுத்த நிலையாக உணரப்படுவது காவல்துறை. இராணுவப்பணி என்பது பொது மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதில்லை. ஆனால் காவல்துறை பொதுமக்களின் நேரடி தொடர்பில் இருந்து சேவை செய்கின்றது.
நேர்மையாக செயல்படும் ஒரு காவல் அதிகாரி பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு எளிமையான தீர்வு/நன்மை செய்வதற்கு உகந்ததுறை வரிசையில் காவல்துறைப் பணி முதன்மையானது.
நான் 1987ல் காவல் பணியில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்ததில் இருந்து 2019ல் மூத்த உதவி ஆணையாளராக பணி நிறைவு பெற்றது வரையிலான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு பல நிலைகளில் நல்லது செய்து முழுமையான மன நிறைவினை அடைந்திருக்கின்றேன்.
அவ்வகையில் இப்போதும் என் நினைவில் நெருடலையும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்திய நிகழ்வாக, 1994 ஆண்டில் அன்றைய திருச்சி மாவட்டம் சின்னத்தாராபுரம் என்ற ஊர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் இருந்த பொழுது நடந்த நிகழ்வினை தங்களிடம் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்றைய ஒருநாள் காலை 9 மணியளவில், சின்னதாரபுரம் காவல் நிலையத்தில் அலுவலில் இருந்த நான், அங்கிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரூருக்கு கோர்ட்டு அலுவலாக புறப்பட்டென். நான் பஸ் ஏறுவதற்காக நடை தூரத்தில் உள்ள 'பஸ் ஸ்டாப்பிற்கு' செல்ல காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். அப்போது காவல் நிலையத்திற்கு எதிரே சற்று தூரத்தில் ஒரு வயதான ஏழை பெண்மணி கையில் எதோ துணிப்பையை வைத்துக்கொண்டு ஒரு சுவரின் அருகில் நின்று கொண்டிருப்பதை கண்ணுற்றேன். ஆனால் கோர்ட்டுக்கு செல்லும் அவசரத்தில் அதனை கருத்தில் கொள்ளாமல் சென்று விட்டேன்.
அன்று பிற்பகல் 3 மணி அளவில் கோர்ட் அலுவல் முடித்து மீண்டும் சின்னத்தாராபுரம் திரும்பிய நான் பஸ்ஸிலிருந்து இறங்கி காவல் நிலையத்தை நோக்கி வந்தபோது அந்த வயதான பெண் அதே இடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு ஏதேனும் புகார் அளிக்கத்தான் வந்திருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தவனாய் ஒரு காவலரை அனுப்பி அவரை அழைத்து வரச்செய்து விபரம் கேட்க தலைப்பட்டேன்.
அப்போது அந்த வயதான பெண்மணி எதுவும் பேசாமல் தன் கையில் மடக்கி வைத்திருந்த கசங்கிய சில ரூபாய் நோட்டுகளையும் ஒரு சீட்டையும் என் முன்னர் இருந்த மேஜை மீது அப்படியே வைத்துவிட்டு என்னை கும்பிட்டார். இதனை பார்த்து சற்று அதிர்ச்சியடைந்தவனாய் என்னம்மா உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர் ஐயா, நான் நடுப்பாளையம் கிராமத்திலிருந்து வருகிறேன் என் கணவர் இறந்துவிட்டார், ஒரே ஒரு மகன் மட்டும் இருகின்றான் அவனுக்கு 30 வயதாகிறது, இன்னும் திருமணமாகவில்லை அவன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி வேலைக்கும் செல்வதில்லை. கிராமத்தில் எனக்கு ஒரு சிறு குடிசை வீடு உள்ளது, அதில் இருந்து கொண்டுதான் கூலி வேலை செய்து சாப்பிடுகிறேன், என் மகனுக்கும் சாப்பாடு போடுகிறேன். இந்த நிலையில் என்மகன் குடிப்பதற்கு பணம் வேண்டும் என்பதற்காக அந்த வீட்டை விற்று அந்த பணத்தை தனக்கு தருமாறு தினமும் குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்து வந்தான், நான் அதற்கு சம்மதிக்கவில்லை. நேற்று மாலை அவன் நன்றாக குடித்துவிட்டு வீட்டில் இருந்த என்னிடம் அந்த வீட்டை தனக்கு எழுதி தருமாறு சண்டையிட்டான். அதற்கு நான் மறுக்கவே சற்றும் தாமதிக்காமல் என்னை தர தரவென்று வீட்டில் இருந்து வெளியில் இழுத்துபோட்டு கதவை பூட்டி விட்டு சென்று விட்டான். நேற்று இரவு முழுவதும் வீட்டிற்கு வெளியே பொழுதை கழித்துவிட்டு இன்று காலையில் அவன் மீது புகார் கொடுக்க இங்கு வந்ததாகவும் சொல்லி முடித்தார்.
பசியாலும் மனத்தளர்வாலும் வாடிப்போய் இருந்த அவரை ஆறுதல் படுத்தினேன். தொடந்து அவரிடம், முதலில் இங்கு வந்தவுடன் ஏன் மேஜையில் பணத்தை வைத்தீர்கள் ? என்று கேட்டேன் அதற்கு அவர்சொல்லிய பதில்தான் மனதை சங்கடப்படுத்தியது. தனது குடிசையை பிடுங்கிக்கொண்ட அவரது மகன் மீது போலீஸில் புகார் கொடுக்குமாறு ஊர்க்காரர் ஒருவர் சொல்லியதாகவும் மேலும் அவரே அங்கு சும்மா போனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் பணம் கொடுத்தால்தான் விசாரிப்பார்கள் என்றும் சொன்னார். தன்னிடம் போலீசுக்கு கொடுக்க பணம் இல்லாததால், தான் அணிந்திருந்த சிறிய காதணிகளை அடகுக்கடையில் வைத்ததில் ரூபாய் 350 கிடைத்ததாவும், அந்த பணத்தில் பசிக்கு சாப்பிடக்கூட செலவழிக்காமல் அப்படியே இங்கு கொண்டு வந்ததாகவும் கூறினார்.
அவரது அந்த கூற்று அவர் மேஜையில் போட்ட பணத்துடன் இருந்த அடகு சீட்டு உறுதிப்படுத்தியது. இது எனக்கு மன சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண்மணியிடம் புகார் அளிக்க பணம் ஏதும் கொடுக்கவேண்டியதில்லை என்று அழுத்தமாக கூறி புரியவைத்தேன். பின்னர் உடனடியாக அவருக்கு சாப்பிட உணவு வரவழைத்து கொடுத்து அதனை அவர் வயிறார உண்டு முடிப்பததற்குள், உரிய நடவடிக்கையாக அடகு
பணத்தை கடைக்காரரிடம் திருப்பியளித்து நகையினை மீட்டு அவரிடம் ஒப்படைக்க ப்பட்டது.
தொடர்ந்து அப்பெண்மணியின் புகாரில் அவரது மகனை காவலர்கள் மூலம் கூட்டி வரச்செய்து அவனுக்கு 'நல்ல முறையில்' புத்தி சொல்லி அவன் அபகரித்த வீட்டை அவனது தாயாரிடமே திரும்ப அளிக்கச்செய்தேன். இந்த நிலையிலும் மகனை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார் , அந்த பெண்மணி. தொடர்ந்து அந்த நபர் மீண்டும் பிரட்சனை ஏதும் செய்ய முடியாத வகையில் உள்ளூர் பொது நபர்களை முன்னிறுத்தி உறுதியளிப்பு பெற்று, அவர்களது பொறுப்பில் அந்த பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்தேன்.
இந்த செயலால் அந்த வயதான ஏழை தாயின் மனம் குளிர்ந்தது. இதில் எனக்கு பகல் உணவு விடுபட்டது ஆனால் வேலை திருப்தியால் (job satisfaction) மனம் நிறைந்தது.
💕🙏💕
Profile sent by him shortened.
M. Sirajudeen (cell: ‪9884408890‬)‬‬
Assistant Commissioner of Police,
(Retired) Greater Chennai Police
I was appointed as a direct Sub Inspector (category 1) for the year 1987 and retired as Assistant Commissioner of Ploce, Greter Chennai City.
Qualification. : BSc., MA.,
Schooling and Batchelor's degree course at my native place, Tiruppathur ( Sivagangai District)
Master's degree course at Alagappa College, Karaikudi as a day scholar
Awards:
1. Chief Minister's Anna Medal for
Outstanding Devotion to theduty in 2013
2. The President’s Police Medal for
Meritorious Service in 2016
Working details:
The following are the Police Stations in Chennai which I served.
As a Sub Inspector:
J5 Sastri Nagar, J1. Saidapet.
As an Inspector:
P3 Vyasarpadi, N1 Royapuram, J1 Saidapet, D3 Ice House, F3 Nungambakkam, F4 Thousands light, Central Crime Branch, D1 Trippicane and N3 Muthialpet.
As a DSP/ an Assistant Commissioner of Police:
1. OCIU (Intelligence wing)
O/o the DGP campus, Chennai (as a DSP)
1. Washermanpet Range, 2. Ayanavaram Range and
3. Ambattur range in Greater Chennai Police ( as an ACP)
மதிப்புமிக்க மச்சான் அவர்கள் அளித்த தொடர் ஊக்கத்தினால் முதலில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்
தன் அனுபவத்தை இனிய தமிழில் பகிர்ந்த சகோ
சிராசுதீனுக்கு நன்றி
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சிந்திப்போம்
30012023திங்கள்
சர்புதீன் பீ
…‬
May be an image of fruit
Like
Comment
Share

No comments:

Post a Comment