தமிழ் (மொழி ) அறிவோம்
வசந்த முல்லை
11 01 2023
இப்படி காதல் என்றாலே கோடைத் தென்றல் வருடும் இனிமை அளவுக்கு கற்பனை விரியும்
இவ்வளவு உயர்வான ஒரு உணர்வை அடுப்போடு தொடர்பு படுததினால் ?
அப்படி ஒரு நினைவே கசக்கிறது
ஆனால்
தொடர்பு படுத்தி பாடல் எழுதியிருக்கிறார் ஒரு கவிஞர்
அது என்ன பாட்டு ?
இதுதான் நேற்றைய வினா
விடை,விளக்கம் :
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் வங்கிப் பணியில் பயனித்துக் கொண்டிருக்கும்போது ஒரு திரைப்பாடல் காதில் விழுந்தது
30 ஆண்டுகள் கடந்தும் அந்த வரிகள் நினைவில் நிற்பதற்கு காரணம் இசை இனிமையோ பொருள் வளமோ இல்லை
இப்படி அபத்தமாக ஒரு பாட்டை எழுத ஒரு (தமிழ்) நாடறிந்த திரைப்பாடல் கவிஞருக்கு மனம்எப்படி ஒப்பியது என்ற வியப்பு கலந்த எரிச்சல்தான் காரணம்
“லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு “
இவைதான் அந்த தங்க நிகர் வரிகள்
என் போன்ற பலருக்கு இலக்கியத்தில் ஒரு சுவையை ஏற்படுத்தியதில் திரைப்பாடல்களின் பங்கு மறுக்க ,மறக்க முடியாத ஓன்று
காலம் மாற மாற காட்சிகள் களங்கள் மாறுகின்றன
திரைக்காட்சிகள் , தொலைக்காட்சிகள் , பாடல்கள் வசனங்கள் எல்லாவற்றிலும் வழி வழி வந்த மரபுகள் உடைத்து நொறுக்கப்பட்டன
சொற்கள் புரியாத பாடல்கள் , சொல்லே இல்லாத பாடல்கள், பொருளற்ற சொற்கள் உள்ள பாடல்கள் கட்டாயமாகிவிட்டன
காதலர் கூடும்போது அங்கே உப்புக் கருவாடும் ஊற வச்ச சோறும் எப்படி வந்தது !
கேட்டால் யதார்த்தம் , மரபுவழுவமைதி என்று விளக்கம் சொல்வார்கள்
தேனே கனியே என்று பெண்ணை வர்ணித்த இடத்தில்
கருவாட்டுக் கொழம்பாக ருசிக்கிறார்
காதலி
காதலியை பொட்ட மயிலே
என்று அழகாக அழைக்கிறார் காதலன்
“கோலி சோடாவே கறிக் கொழம்பே “
என்ற காதல் பாட்டுக்கு 140 கோடி பார்வைகள்
இது தமிழ் பாட்டில் ஒரு சாதனை
இதை எல்லாம் தூக்கி தடிக்கும் ஒரு காதல் பாடல்
காதல் என்பது
ஆந்தைய போலே
கம்பன் வீட்டு
நாயை போலே
என்னவொரு அழகான உவமை
இதில் எனக்கு இரண்டு எரிச்சலகுள்
ஒன்று
இதை எழுதியவர் எனக்கு மிகவும் பிடித்த திரைக் கவிஞர்
பல அருமையான சொல்நயமிக்க பாடல்கள் இயற்றியவர்
அடுத்த எரிச்சல்
இந்தப்பாடல்
சாரங்கதார பட
வசந்த முல்லை போலே வந்து
என்ற இனிய பாடலின் சிதைவு
என் உணர்வுகளை தலை முறை இடைவெளி என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்
திரைப்படப் பாடல் என்பதால் நிறைய சரியான விடைகள் எதிர்பார்த்தேன்
ஆனால் வந்த மூன்றில் ஓன்று கூட ஸ்டவ் இல்லை
ஒரு அடுப்பு மட்டும் இருந்தது
அது காதல் பற்றிய பாடல் எனபதால் அதை சரியான விடையாக எடுத்துக்கொண்டேன்
சகோ தல்லத்துக்கு வாழ்துகள் பாராட்டுகள்
அவர் அனுப்பிய விடை
புன்னகை மன்னன் படத்தில்
கவிதை கேளுங்கள் என்ற பாடல்
காதல் கைகூடுமா என்ற ஏக்கத்தில் காதலன் பாடுவது
“அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்து விட்டது யாரு “
முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
மூன்றவது விடை மிகவும் பொருத்தம் இல்லாத ஓன்று
இறைவன் நாடினால் நாளை சந்திப்போம்
௧௧ ௦௧ ௨௦௨௩
11012023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment