அறிவியல் அறிவோம்
இந்த ஆண்டில் ஒரு புதிய பகுதி
இன்றைய வினாக்கள் ( மிக எளியவை )
2520
3. 14
180
இந்த எண்களின் சிறப்பு என்ன ?
இறைவன் நாடினால் இன்றிரவு விடைகளுடன் சிந்திப்போம்
விடை
2520
1 முதல் 10 வரை உள்ள பத்து எண்களாலும் மீதமில்லாமல் வகுபடும் மிகச் சிறிய எண்
2520 is the smallest number divisible by all integers from 1 to 10, i.e., it is their least common multiple.
இதுவும் இராமானுஜம் எண் என்று சொல்லப்படுகிறது
இன்னொரு இராமானுஜம் எண் படிக்க எளிதாக இருக்காது
நபி பெருமான் உறவினராகிய அலி (ரலி) இந்த எண் பற்றி
ஒரு ஆண்டின் நாட்களை ஒரு வாரத்தின் நாட்களால் பெருக்கினால் வரும் என்று சொன்னதாகப் படித்திருக்கிறேன்
அரபு ஆண்டுக்கு 360 நாட்கள்
அடுத்து 3.14
Π பை எனும் கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படும் இந்த எண் வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவைக் காண உதவும்
பை யை வட்டத்தின் விட்டத்தால் பெருக்கினால்
வட்டத்தின் சுற்றளவு வரும்
பை x விட்டம் = சுற்றளவு
விட்டம் *டயமீட்டர் (d= diameter) வட்டத்தின் நடுபுள்ளி வழியே வட்டத்தின் இரு முனைகளைத்தொடும் நேர்கோடு ( பார்க்க படம் )
பண்டைத் தமிழ் நாட்டில் தேர் , வண்டி சக்கரங்கள் செய்யவும் ,சக்கரங்களுக்கு இரும்புப் பட்டை பொருத்தவும் பை பயன் பட்டதாகச் சொல்கிறார்கள்
விட்டத்தில் பாதி ஆரம் radius(r) எனப்படும்
வட்டத்தின் பரப்பளவு பை x ஆரம் x ஆரம்
A=πr2
மூன்றாவதாக
180
ஒரு முக்கோணத்தில் உள்ள 3 கோணங்களின் மொத்த பாகை அளவு (DEGREE)
சகோ தல்லத்
180
அதிக எண்களால் வகுபடக் கூடிய சிறிய எண்
என்று சொன்னது
சரியான விடையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
மிக எளிய வினாவைத் தேர்வு செய்து போட்டேன்
ஆனால் மூன்றுக்கும் முழுமையாக் சரியான விடை அனுப்பியவர்
ஒரே ஒருவர் :
சகோ
கீதாவுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்து பகுதி விடை அனுப்பியவர்கள்
சகோ
முத்து ரவி 1, 2
ஆரா விஸ்வநாதன் 1. 2 இல் பகுதி
ஹசன் அலி 1, ௨இல் பகுதி
கணேச சுப்பிரமணியம் 1, 2
தல்லத் 1, 2 இல் பகுதி
ஷிரின பாருக் 1
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
20012023 வெள்ளி
சர்புதீன் பீ -
No comments:
Post a Comment