திருமறை குரான்
இத்ரீஸ்1
19012023
இத்ரிஸ் (அலை) பற்றி குர்ஆனில் இரண்டு இடங்களில் சொல்லப்படுகிறது
மற்றது எது ? என்ன சொல்லப்படுகிறது
விடை
சுராஹ் மரியம் (19) வசனம் 56,57
“நபியே இப்புனித நூலில் இத்ரீஸை நினைவு கொள்ளுங்கள் .அவர் மிகவும் உண்மையாளராக ( சிதீக்காக)வும் நபியாகவும் இருந்தார்
நாம் அவரை மிக்க மேன்மையான இடத்துக்கு உயர்த்தி விட்டோம் “
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத்
முதல் சரியான விடை –( வினா முழுமையாகப் போடுமுன்னே இவருடைய விடை வந்து விட்டது )
சிராஜுதீன் ஹசன் அலி
ஷர்மதா ஷிரீன் பாருக்
விளக்கம்
அதிகமாக அறியப்படாத நபிகளில் இத்ரிஸ் (அலை) அவர்களும் ஒருவர்
மறை நூல்களை நன்கு கற்று மக்களுக்குக் கொடுத்ததனால் கற்றுக் கொடுப்பவர என்ற பொருளில் இத்ரீஸ் என பெயர் பெற்றவர்
எநாக் Enoch நபி என்பதும் இவர்தான் என்று சொல்லப்படுகிறது
சூராஹ் 19 மர்யம் – இதன் சிறப்புகள் சில :
ஒரு பெண்ணின் பெயரில் அமைந்த ஒரே சூராஹ்
குர்ஆனில் வரும் ஒரே பெண் பெயரும் இதுதான்
ஈசா (இயேசு) நபியின் புனிதப் பிறப்பு , அவர் தொட்டில் குழந்தப் பருவத்தில் பேசியது என பல செய்திகள் வருகின்றன
இஸ்ஹாக் ,யாகூப், மூஸா ஹாருன் ,இஸ்மாயில் எனாக் (இத்ரீஸ் ) ஆதம் சக்கரியாஹ் , நுஹ்
என பல நபிமார்கள் பற்றிய குறிப்புகள் இந்த சூராவில் வருகின்றன
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
1444ஜமாத்தில் ஆகிர் (6)26
19012௦23 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment