மூலிகை அறிமுகம்
புடலங்காய்
07012023
நல்ல உணவுப் பொருளாக தெரிந்த இந்த காயின் மருத்துவப் பயன்களை அறிந்தால் வியப்பு மேலிடுகிறது
நன்கு தெரிந்த , அன்றாடம் பயன் படும் காய் என்பாதால் தயக்கம் இன்றி அளவறிந்து உண்டால் நல்ல பலன் பெறலாம்
புடலங்காயின் மருத்துவப் பயன்களாய் சொல்லப்படுபவை
செரிமானப் பிரச்சனைகள் , மலச் சிக்கல் , மூல நோய் குணமாகும்
வயிற்றுப் புண், குடல் புண் , தொண்டைப்புண் குணமாகும்
உயிர்ச்சத்து,(வைட்டமின் ) A, B, C அதோடு
இரும்புச் சத்து , கால்ஷியம் எனும் சுண்ணாம்புச் சத்து . மக்னீசியம்,, பொட்டாசியம், அயோடின், , மாங்கனீசு போன்ற உடல் நலத்துக்கு தேவையான பல அரிதான சத்துக்கள் இருக்கின்றன
பொதுவாக பச்சைக் காய்கள் எல்லாம் புற்று நோயைத் தவிர்க்கும் antioxidants ஆக செயல்ப டுகின்றன
இவ்வளவு சிறப்பு இருக்கிறதே இப்போதே போய் நிறைய புடலங்காய் வாங்கி வருகிறேன் என்று புறப்பட்டு விட்டீர்களா !?
வேண்டாம்
இறைவன் அருளால் சந்தையில் புதிய காய் கறிகள் பழங்கள் நிறைய கிடைக்கின்றன
புடலங்காய் போல பெரும்பாலான காய்கறிகள் , கனிகள்
எல்லாமே மிக அற்புதமான மருத்துவ குணங்கள்
நிறைந்தவை
அந்தந்த கால நிலைக்கேற்ப கிடைக்கும் காய் கனிகளை புதிதாக உண்டு பயன் பெறலாம்
சுருக்கமாக சொல்வதென்றால் நமது பரம்பரை உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தால் போதும்
கூடிய வரை குளிர் பெட்டி (Fridge) பயன் பாட்டைத் தவிர்த்தல் நலம்
Snake gourd என்ற பெயருக்கேற்ப புடலங்காய் பச்சை நிறத்தில் பாம்பு போல் நீளமாக இருக்கும்
காய் சுருண்டு விடாமல் இருக்க பிஞ்சாக இருக்கும்போது நுனியில் கல்லைக் கட்டி விடுவார்கள்
கிள்ளிப் பார்த்தால் நகம் பதியும் அளவுக்கு மென்மையாக இருப்பது பக்குவமான காய் என்பார்கள்
மேலும் காயில் வெள்ளைத் தழும்புகள் போல் தெரிந்தால் அது பாம்பு போன தடம், அந்தக் காயை வாங்கக் கூடாது என்று சொல்வார்கள்
கால மாற்றத்தில் தக்காளி கல்லுப்போல் ஆகி விட்டது
பச்சை மிளகாய் வெண்டைக் காய்க்கு மேல் நீளாமாகி விட்டது
அந்த வரிசையில் இப்போது குட்டைப் புடலங்காய்கள்
வழக்கமான எச்சரிக்கை புடலுக்குத் தேவை இல்லை என விட்டு விட்டேன்
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சந்திபோம்
07012023சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment