Monday, 23 January 2023

தமிழ் (மொழி) அறிவோம் குயம்

 தமிழ் (மொழி) அறிவோம்

24.012023
குயம்
ஒரு சிறிய சொல்
பொருளோ பல பல
அவற்றில் ஒரு சில:
நிலம், இலை
அரிவாள் புல்
இளமை
என்ன அந்த மூன்றெழுத்துச் சொல் ?
விடை
குயம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெரும் அறிஞர்கள்
சகோ
சோம சேகர்
முதல் சரியான விடை
சிராஜுதீன்
தல்லத்
முயற்சித்த சகோ செங்கை A சண்முகத்துக்கு நன்றி
விளக்கம்
நிகண்டுவில் எதோ தேடப்போய் கண்ணில் பட்டது குயம்
இந்த ஒரு சொல் பற்றி இணையத்தில் பல பக்கங்கள் இருப்பதைக் காணலாம்
குயம் = அரிவாள், , இளமை, தருப்பைப்புல், நிலம், இலை,
இவை போக பெண்களின் அவயங்களும் குயம் என்று குறிப்பிடப் படுகிறது என்பதை சங்கத் தமிழ் ஆர்வலர்கள் மனதில் கொள்ள வேண்டும்
குயம் =நிலம் - இது குழைக்கப்பட்ட மண் என்ற பொருளில் ஆகுபெயராய் நிலத்தையும் குறித்தது.
குயம் = இளமை - இது குழைதல், வளைதல், மென்மையாதல் ஆகிய மூன்று பண்புகளையும் உடைய பெயராகும்.
குயம் = இலை - இதுவும் புல்லைப் போலவே வளைந்து தொங்குவதால் தோன்றிய பெயராம்.
குச்சிலியமாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190).
kuyam n. perh. கொய்-. 1. Sickle,reaping-hook, curved knife, அரிவாள் கொடுவாய்க்குயத்து (சிலப். 16, 30). 2. Razor; நாவிதன் கத்தி அருங்குயந் தான்களைந்து (சீவக. 2500). 3
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்
௨௪௦௧௨௦௨௩
24012023செவ்வாய்
சர்புதீன் பீ
No photo description available.

0 comments

All reactions:
1



No comments:

Post a Comment