திருமறை குரான்
சூராஹ் 12 யூசுப்
13012023
சுராஹ் 12 யூசுப்
இதில் யூசுப் நபி அவர்களின் வரலாறு முழுமையாக கால வரிசைப்படி சொல்லப்படுகிறது
மற்ற எல்லா நபிமார்களின் வரலாறுகளும் குரானில் பல இடங்களில் வருகிறது
ஒரு ஸுராஹ் முழுதும் ஒரு நபி பற்றிய செய்தி முழுமையாகசொல்லப்படுவது இதன் தனி சிறப்பு
மேலும் ஒரே நேரத்தில் முழுமையாக அருளப்பட்ட ஒரு சுராஹ் என்ற சிறப்பும் இதற்கு உண்டு
கனவுகள், நபி மார்கள் வரலாறுகளில் இருந்து மக்கள் கற்க வேண்டிய பாடங்கள் பற்றித் தெளிவு படுத்துகிறது
அடிமையாக விற்கப்பட்டு ஒரு நாட்டுக்கு வந்தவர் , பிற்காலத்தில் ஒரு நபியாகி, அந்த நாட்டில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகிறார்
இறைவன் நாடினால் எதையும் நடத்திக் காட்டுவான் என்பதை இது தெளிவாக்குகிறது
நபி ஸல் அவர்கள் மிகத் துயரமான ஒரு நிலையில்
இருந்தபோது அவருக்கு ஆறுதல் சொல்லும் முகமாக இந்த சூராஹ் அருளப்பட்டதாம்
நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய ஒரே தந்தை வழி உறவு – அபு தாலிப்,
அதைத் தொடர்ந்து இஸ்லாத்தில் முதன் முதலில் இணைந்து நபிக்கு பெரிதும் ஆதரவாக விளங்கிய அருமைத் துணைவி அன்னை கதீஜா
இருவரும் காலமானர்கள்
இந்தக் காலம் நபி வாழ்வில்
['am al huzun' (the year of Sorrow or Despair)].
என குறிப்பிடப்படுகிறது
மேலும் அபு தாலிப் மறைவுக்குப்பின் நபி ஸல் அவர்கள் மேல் குறைஷிகள் தொடுத்த பன்முகத் தாக்குதல் பொறுக்க முடியாமல் ஆறுதல் தேடி தாயிப் நகர் சென்ற நபி அவர்கள் அங்கும் கல்லாலும் சொல்லாலும் அடிக்கப்பட்டு குருதி வடியத் திரும்பி வந்தார்கள்
இந்த நிலையில் நபி பெருமானுக்கு இறைவன் இந்த சூராவின் மூலம் ஆறுதல் கூறுகிறான்
மேலும்
“இஸ்ரவேலர்கள் எகிப்துக்கு போகக் காரணம் என்ன ?”
என்ற வினாவை நபியிடம் கேட்டு அவருக்கு விடை தெரிய வாய்பில்லை
அதனால் அவர் நபியல்ல , பொய்யர்
என்று தெளிவாகி விடும் என்ற எதிரிகள் எண்ணமும் மண்ணாகும் படி இறைவன் இந்த சூராவின் மூலம் நபிக்கு தெளிவு படுத்துகிறான்
(நபியே!) நாம்----- உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.12:3)
“அழகின் ஈர்ப்பு”
என்ற தலைப்பில் நபி யூசுப் அவர்கள் கதையை விரிவாக முன்பே சொல்லியிருக்கிறேன்
வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் முதல் சரியான விடை
சிராஜுதீன், ஹசன் அலி
ஓரளவு சரியான் விடை அனுப்பிய
சகோ ஷிரீன் பாருக்
ஷர்மதாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
20 ஜமாத்துல் ஆஹிர் (6) 1444
13012023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment