Friday, 27 January 2023

தமிழ்( மொழி )அறிவோம் நெற்குஞ்சம்

 தமிழ்( மொழி )அறிவோம்

நெற்குஞ்சம்
28012023
படத்தில் காண்பது என்ன ? பயன் என்ன ?
விடை
நெற்குஞ்சம் – நெல் குஞ்சம்
விளக்கம்
நன்கு விளைந்த நெற்கதிரை இறை பக்தியோடு
அறுவடை செய்து
அறுத்த நெல்கதிரைத் தலைப்பு மாற்றிக் கட்டி கோயிலுக்கு எடுத்துச் சென்று வைத்து இறைவனை வணங்குவார்கள்
அனுபவம் வாய்ந்த மூத்த குடிமக்கள் நெற்தாள் குறுகியும் நெல்மணிகள் விரிந்தும் இருக்கும்படி தலை கீழாக வைத்து நூலால் பின்னி வட்ட வடிவில் பம்பரம் போல் உருவாக்குவார்கள்
இது நெற்குஞ்சம் என்றும் கதிற்குஞ்சம் என்றும் அழைக்கப்படும்
நீளமாகவும் உறுதியாகவும் இருக்கும் ஆறுமாதப் பயிரான சம்பா நெல் தாள்களைக் கொண்டே பெரும்பாலும் இந்தக் குஞ்சங்கள் செய்யப்படும்
ஐந்து படிகள் அளவில் நெல் மணிகள் இருக்கும் இந்தக்குஞ்சங்களை கோயிலின் மையப் பகுதியிலும் வீட்டு வாசலிலும் தொங்க விடுவார்கள்
பயன்கள்
ஓன்று வீட்டுக்கு அழகு கூட்டுகிறது
அடுத்து சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்கு உணவாகிறது
பகுத்துண்டு பல்லுயி ர் ஓம்பும் நம் பண்பாட்டுக்கு இது ஒரு சான்று
முக்கூடற்பள்ளு , இன்னும் சிலபள்ளுப்பாடல்களில் நெற்குஞ்சம் பற்றிய செய்திகள் இருக்கின்றன
( Source )முனைவர் கரும்பாயிரம் தினமணி 22012023 இதழில் வெளியிட்ட
“குருவிக்கு இரையாகும் நெற்குஞ்சம் எனும் பதிவு )
சரியானவிடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ ராஜேந்திரன்
“நெற்குஞ்சம்” எனும் சரியான பெயரை எழுதிய அதே நேரத்தில்
சகோ செங்கை A சண்முகம் அதன் பயன்கள் பற்றி எழுதினார்
எனவே இருவருக்கும் முதல் சரியான விடைக்கான வாழ்த்துகள் பாராட்டுகள்
குஞ்சம் ,என்று பகுதிப் பெயர் சொன்ன சகோ
தல்லத்
பயன் பற்றி எழுதிய சகோ
ஹசனலி
இருவருக்கும் பகுதிப் பாராட்டுகள் வாழ்த்துகள்
முயற்சித்த சகோ
ஷர்மதா , பாப்டி இருவருக்கும் நன்றி
முன்பு எப்போதோ காதில் விழுந்த செய்தி ஓன்று
சீனாவில் சிட்டுக் குருவிகள் எண்ணிக்கை பெருத்துப் போக , அவை நெற்கதிர்களை கொத்தித் தின்றன
அதனால் சிட்டுக் குருவிகள் சுட்டுக் கொல்லப் பட்டன
ஆனால் அந்த ஆண்டு விளைச்சல் எதிர் பார்ப்புக்கு மாறாக மிகவும் குறைந்து விட்டது
காரணம்
சிட்டுக்குருவிக்கு இரையாகும் புழுக்கள் குருவிகள் இல்லாததால் பெருமளவில் பயிரின் வேர்ப் பகுதியை அழித்து விட்டன
இன்று காலை தொலைகாட்சி செய்தியில்
கென்யா நாட்டில் பயிரக்ளுக்கு சேதம் விளைவிக்கும் பறவைகள் லட்சக் கணக்கில் அழிப்பு
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சிந்திப்போம்
௨௮௦௧௨௦௨௩
28012023 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No photo description available.

No comments:

Post a Comment