பிறை 1 துல்ஹஜ் (12) ,1444
20062023
பிறை தெரிந்தது
புனித ஹஜ் மாதம் பிறந்தது
சென்ற சில ஆண்டுகள் போல இந்த ஆண்டும் பத்து நாட்களும் மற்ற பதிவுகளைத் தவிர்த்து புனித ஹஜ் பயணம் , புனித காபா
நபி இப்ராஹீம் அவர்கள் பற்றி எழுதஎண்ணம்
எண்ணம் நிறைவேற இறைவன் அருள் புரிய வேண்டும்
இதெல்லாம் பற்றி விரிவாக நிறைய எழுதி இருக்கிறேன்
இப்போது சில செய்திகளை சுருக்கமாகப் பார்ப்போம்
முதலில் ஹஜ் புனிதப் பயணம்
வசதி வாய்ப்பும் உடல் நலமும் இருப்பவர்களுக்கு ஹஜ் கட்டாயக் கடமை ஆகும்
மற்ற நான்கு கடமைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு ஹஜ்ஜுக்கு இருக்கிறது
வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்து விட்டால் அந்தக் கடமை நிறைவடைந்து விடுகிறது
உம்ரா செய்வது நல்லதுதான்
ஆனால் ஹஜ் செய்தால் மட்டுமே கட்டாயக் கடமை நிறைவேறும்
இல்லாவிட்டால் இறைவன் ஆணைக்கு மாறு செய்தவர்கள் , கடமை தவறியவர்கள் ஆவோம்
. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).( குரான் 22:27)
ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கடமைகள், அமல்கள் பற்றி விரிவாக விளக்கும் கையேடுகள், நூல்கள் எல்லாம் கொடுப்பார்கள்
எனவே அவற்றைத் தவிர்த்து விட்டு சில நடை முறைக் குறிப்புகளை சொல்கிறேன்
வசதி வாய்ப்பு உள்ளவர்கள் முடிந்த வரை விரைவில் as early as possible ஹஜ் செய்வது நல்லது
ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரசு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறது ,அந்த வசதிகள் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே போகின்றன
இதையெல்லாம் மீறி ஹஜ் என்பது உடல், மனம், ஆன்மாவுக்கு ஒரு கடுமையான பயிற்சி
சொற்களால் சரியாக விளக்க முடியாது
எனவே உடல் மனம் வலுவாக இருக்குபோதே , வாழ்க்கைத் துணை இருக்குபோதே இந்தக் கடமையை நிறைவேற்றி விட்டால் நல்லது
மனதில் உறுதி கொண்டு கேட்கும் கடமை நம்முடையது
அதை நிறைவேற்றும் உரிமை எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு மட்டுமே
பணியில் இருந்து ஒய்வு பெற வேண்டும் , வணிகம் செழித்து வரும் இந்த நிலையில் போனால் சரியாக வராது ,வீடு வாசல் கட்ட வேண்டும் என்றெல்லாம் தள்ளிப்போட வேண்டாம்
எலாவற்றையும் வாரி வழங்குபவன் இறைவன் மட்டுமே . அவன் கட்டளையை நிறைவேற்றுவதை விட முக்கியமான ஓன்று இருக்க முடியாது
மேலும் ஆண்டுக்கு ஆண்டு செலவும் கூடிக்கொண்டே போகிறது
எனவே as early as possible
அடுத்து எனக்கு அது தெரியாது இது தெரியாது , அதிகம் குரான் ஓதியதில்லை அமல்கள் பற்றி தெளிவில்லை என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம்
நல்ல உள்ளத்தோடு ,மன உறுதியோடு புண்ணிய பூமியில் போய் இறங்கியவுடனே இறைவன் அருளால் தெளிவு பிறந்து எல்லா அமல்கள் , கடமைகளை நிறைவேற்றும் மனப்பாங்கு வந்து விடும்
எனக்குத் தெரிந்ததை, உணர்ந்ததை , பிறர் சொல்லக் கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
பிழைகள் இருந்தால் ஏக இறைவன் மன்னிப்பான்
இதுவரை ஹஜ் செய்யாதவர்கள் விரைவில் செய்யவும், செய்தவரகள் , திரும்ப செய்ய விரும்பவர்கள் செய்யவும்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானக
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 1 துல்ஹஜ் (12) ,1444
சர்புதீன் பீ
No comments:
Post a Comment