விவசாயத் துறையில் புதிய கிளை
அக்ரிவோல்டைக்ஸ் (agrivoltaics)
14062023 புதன்
தோட்டக்கலை (Horticulture)பட்டுப்புழு வளர்த்தல் ( sericulture
)
என 20க்கும்
மேற்பட்ட கிளைகள் கொண்ட விவசாயத் துறையில் இன்னுமொரு புதிய கிளைதான் அக்ரிவோல்டைக்ஸ் (agrivoltaics)
சூரிய ஒளியில் இருந்து மின்உற்பத்தி
செய்வதில் மிக முக்கியமான பகுதி சூரியப் பலகங்கள் (solar panel) ஆகும்
மிகப்பெரிய
அளவில் மின் உற்பத்தி செய்ய இந்தப் பலகங்கள் பாலை வனம் போன்ற வெட்ட வெளிகளில்
நிறுவப் படுகின்றன
இவற்றின்
மேல் தூசி படிந்தால் மின் உற்பத்தி குறையும்
எனவே நிறைய தண்ணீர்
ஊற்றி இவற்றைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்
அந்தத் தண்ணீரை
வீணாக்காமல் அதை வைத்து விவசாயம் செய்யும் முறைதான் (agrivoltaics)
நம் நாட்டில் ஜோதபூர் போன்ற வறண்ட
பகுதிகளில் இந்த முறை ஓரளவு செயல்படுத்தப் படுகிறது
இதனால் விளைச்சல்
41% அதிகரித்த்தாம்
ஒரு கோடி
மின் விளக்குகள் எரியும் அளவுக்கு ஒரு கிகா வாட் மின் உற்பத்தி செய்யும் மிகப்
பெரிய சூரியப் பூங்கா சைனாவில் கோபி பாலைவனத்தில் 107 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ளது
பூங்காவை
அமைப்பதற்கு முன்பு அந்த இடத்தில் ஆற்று நீரை
வைத்து சொட்டு நீர்ப் பாசன முறையில் மாட்டுத் தீவனம் பயிரிடப்பட்டது
பிறகு பாலை
மண்ணில் நிறைய உரங்கள் சேர்த்து விவசாயத்துக்கு
தகுதி ஆக்கினார்கள்
3 மீட்டர் உயரத்தில்
தூண்கள் அமைத்து அத மேல் சூரிய பலகங்கள் அமைக்கப்பட்டன
நிழலில் வளரும்
ஒரு பெர்ரி செடியை அங்கு பயிர் செய்தனர்
நிழலில்
வளர்வதால் சூரியப் பலகங்களை சுத்தம் செய்யப் பயன் படும் தண்ணீர் அந்தப்
பயிருக்குப் போதும்
சீனா,
ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளில் இந்த
முறையில் பெருமளவில் விவ்வாயம் செய்யப்படுகிறது
.,
விவசாய நிலங்களில் சும்மா விவசாயம் செய்வதை
விட இப்படி விவசாயம் செய்வது நல்ல லாபகரமானது.
தண்ணீரின் தேவை வெகுவாக குறைகிறது.
ஆனால் எல்லா பயிர்களையும் இப்படி
பயிரிட முடியாது. தக்காளி, கீரை. லெட்டூஸ்,
பெர்ரி, பீட்ரூட், காரட்ஆகியவற்றை
இப்படி பயிரிடுகின்றனர்
பலகங்களுக்கு அடியே செடிகளை வளர்த்து அதனடியில் கோழிகளை
விடுபவர்களும் உண்டு.
கோழிகளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். அங்கே
இருக்கும் பூச்சிகளை அவை உண்ணும். அவற்றின் கழிவும் உரமாகும்.
இம்முறையில் செய்யபடும் விவசாயத்தால்
தோட்டத்துக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதுடன்,
விளைச்சலும் பெருகுகிறது. மின்சாரத்தை விற்று காசு பார்க்கவும்
செய்கிறார்கள்.
வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கும்
தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் நிலையில் இது போன்ற புதிய முயற்சிகள் ஓரளவு
நிலைமை சீராக உதவும்
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
1406 2023 புதன்
No comments:
Post a Comment