Monday, 12 June 2023

ரயில் பயணத்தில் திருச்சி கடலூர்

 

May be an image of train and text



ரயில் பயணத்தில்

திருச்சி கடலூர்
தொடரிப் பயணம்
இராமேஸ்வரம் அயோத்தியா அதிவிரைவு வண்டி
காலை 5 மணி அளவில் திருச்சியில் புறப்படும் வண்டியில் உட்கார்ந்த உடனே நாம் இருப்பது தமிழ் நாடு இல்லையோ என்ற எண்ணம் தோன்றி வலுப் பெறுகிறது
காரணம் தொடர்ந்து ஒலிக்கும்
சாய் சாய்
பாணி பாணி வாட்டர் பாணி என்ற குரல்கள்
வண்டியிலேயே சமையல் அறை pantry car இருக்கிறது
மறந்தும் காபி என்ற குரல் காதில் கேட்கவில்லை
காலைச்சிற்றுண்டி
உப்புமா
ப்ரெட் & கட்லெட்
நீண்ட நேரம் கழித்து இட்லி வடை வந்தது
50 ரூபாய்க்கு ஒரு வடையும் சில இட்லி போன்ற உருவங்களும்
யார் மேலாவது தூக்கி எறிந்தால் பலத்த காயம் உண்டாவது உறுதி
சட்னி சாம்பார் எதுவும் இல்ல
வட இந்திய சுவையில் தண்ணியாக ஒரு குழம்பு
வடை மட்டும் சாப்பிட்டுவிட்டு மற்றதைத் தூக்கிப் போட்டு விட்டேன்
சிறிது நேரத்தில் விற்ற ஆலு போண்டாவில் நல்ல கடுகெண்ணெய் மணம்
தமிழ் நாட்டில் இருந்துதான் புறப்படுகிறது இந்த வண்டி
ஒரு தென்னிந்திய சமையல்காரர் கிடைக்கவில்லையா!
இரண்டு பக்தித் தலங்களை இணைக்கும் ஒரு அதிவிரைவு வண்டியின் கழிவறை சுத்தம்
சொல்ல முடியாத அளவுக்கு மூச்சடைக்கிறது
கழுவி பலநாட்கள் ஆனது போல கறை
இதற்கெல்லாம் தீர்வு?
அதுதான் சொல்லிவிட்டதே
சொல்லி பயமுறுத்தி விட்டதே தாய்க்குலம்
தனியார் மயமாக்கல் ஒன்று தான் என்று
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
12062023 திங்கள்
சர்புதீன் பீ

All reactions:
Raghupathi Balasubramanyam, Samas Khaan and 3 others

No comments:

Post a Comment