Thursday, 1 June 2023

திருமறை குரான் 2:36

 




திருமறை குரான் 2:36

 

0206 2023

 

“--------நீங்கள் ஒருவொருக்கொருவர் பகைவர்கள் ஆவீர்கள் ---“

குரான் –இடம் சுட்டிப் பொருள் விளக்குக  

 

விடை

சூராஹ் அல் பக்றா வசனம் 36

 

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் (அதிலிருந்து )வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.(2:36

 

வந்த விடைகள்

சகோ

ஹசனலி   20: 123, 43:67

ஷர்மதா ,ஷிரீன் பாருக் ,பீர் ராஜா ,சிராஜுதீன் (43:67)

 

இதில் சகோ ஹசனலியின் 20:123, நான் போட்ட 2:36 இரண்டும்

ஷைத்தானின் வழி கேட்டால் தவறு செய்து விட்ட ஆதம் , அவரது துணைவி, ஷைத்தான் அனைவரிடமும் இறைவன் சொன்னதாக இருக்கிறது

 

43:67 இறை நம்பிக்கை இல்லாதோருக்கு இறைவன் மறுமை நாள் பற்றி எச்சரிப்பதாக உள்ளது

அந்நாளில் (இறுதித் தீர்ப்பு நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரி ஆகி விடுவார்கள்

இறையச்சமுடையோரைத் தவிர

 

முன்னிலை படர்க்கை ஆகும்போது இடம் , பொருள் எல்லாமே மாறி விடுகிறது

 

இருந்தாலும் நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள் என்ற கருத்து இதிலும் வருகிறது

எனவே இதுவும் சரியான விடை என்று எடுத்துக்கொள்ளபட்டது

 

எல்லோருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

 

2:36

ஒருவொருக்கு ஒருவர் என்பதற்கு

 

மனிதனும் ஷைத்தானும்

என்றும்

மனிதரில் ஒருவொருக்கு ஒருவர்

என்றும்

இரு விளக்கங்கள் சொல்லப்படுகின்றன

 

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

12 துல்ஹதா (11) 1444

02 062023 வெள்ளி 

சர்புதீன் பீ

 

No comments:

Post a Comment