மூலிகை அறிமும்
தக்காளி
19 06 2023 திங்கள்
ஆனால்
75 ஆண்டுகள் முன்பு (நான்பிறக்கவில்லை) வீட்டுக் கொல்லைப்புறத்தில் முளைத்து ,பூத்துக் காய்த்து பழுத்துக் கிடந்த பழத்தை சீந்துவார் இல்லை
வீட்டுக்கு வந்தவ ஒருவர்
“இதன் பெயர் தக்காளி . இந்தபழத்தை சமையலுக்குப் பயன்படுத்தலாமாம் , நீங்களும் சமைத்துப்பாருங்கள் என்று
அம்மாவிடம் சொல்ல
“முன்பின் தெரியாததை எல்லாம் சமைக்க முடியாது “ என்று உறுதியாக மறுத்து விட்டார்
இப்போது இந்த நிகழ்வை நம்பக் கூட முடியவில்லை
என்ன விலையாக இருந்தாலும் இது இல்லாமல் சமையல் இல்லை என்று ஆகிவிட்ட தக்காளியின் மருத்துவ குணங்கள்
பச்சை சிவப்பு போன்ற வண்ணம் (Bright Colour ) கொண்ட காய்கறிகள் எல்லாம் பொதுவாக புற்று நோயைக் கட்டுப்படுத்தும்
அந்த வகையில் தகளியில் உள்ள லைக்கோபீன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
மேலும் இந்த லைக்கோபீன்கெட்ட கொழுப்புகளை குறைக்கும் பண்பு கொண்டது, உயர் குருதி அழுத்த பிரச்சனைகளை சரி செய்து இதயத்திற்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கிறது
தக்காளியில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் A,C. E கார்போஹைட்ரேட்: கொழுப்பு: பொட்டாசியம்:ஃபோலிக் அமிலம்: பீட்டா கரோட்டின்: போன்ற சத்துக்கள்
புகை பிடிப்பதன் பாதிப்பைக் குறைக்கும்
நீரிழிவு நோயின் தாக்கத்தைக் குறைக்கும்
முகம், தோலின் வண்ணத்தையும் பளபளப்பையும் பாதுகாக்கும்
எச்ச்சரிக்கை
தக்காளி அன்றாடம் உணவில் சேரும் பொருள் என்பதால் ஐயம் வழக்கத்துக்கு மாறாக சற்று விரிவாக எழுதியிருக்கிறேன்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகலாம்
பொட்டசியும் சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை அளவோடு பயன்படுத்த வேண்டும்
மேலும் இப்போது கடைகளில் விற்கும் தக்காளி அழுகிப் போவதில்லை , நசுக்க முடிவதில்லை, சாறும் வருவதில்லை
எனவே அதன் நன்மைகள் பற்றி ஒரு தயக்கம் ,ஐயம் உண்டாகிறது
முடிந்தால் வீட்டிலேயே செடி வளர்த்துப் பயன் படுத்தலாம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
19 06 2023 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment