Tuesday, 27 June 2023

பிறை 9 துல்ஹஜ் (12) ,1444 நபி இப்ராஹீம் சில தகவல்கள்

 





பிறை 9 துல்ஹஜ் (12) ,1444

28062023 புதன்
நபி இப்ராஹீம் சில தகவல்கள்
புனித ஹஜ் மாதம் - இன்று பிறை 9
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
நபி இப்ராஹீமுக்கு இறைவன் அருளிய சிறப்புகள் பற்றி நேற்று பார்ததோம்
இன்று அவரைப்பற்றி இன்னும் சில தகவல்கள்
இஸ்லாம், கிறித்தவம் ,யூத மதம் மூன்றிலும் ஒப்புக் கொள்ளப்பட்டவர்
கத்னா எனும் சுன்னத் , நகம் வெட்டுதல் ,முடியை ஒழுங்கு படுத்துதல் , கை கழுவுதல் கைலி (லுங்கி) கட்டுதல் என பலவற்றையும் மனித குலத்துக்கு அறிமுகப் படுத்தியவர்
மிகப் பெரிய செல்வந்தர் –ஆட்டு மந்தையைப் பாதுகாக்க அவரிடமிருந்த வேட்டை நாய்களின் எண்ணிக்கை 10000
ஆம் பத்து ஆயிரம் நாய்கள்
பல தலை முறைகள் முந்திய நுஹ் நபியிடம் 23 ஆண்டுகள் கல்வி கற்றதாக ஒரு செய்தி
இனி ஹஜ்ஜில் நிலவிய சில தீய மூடப் பழக்கங்கள் எவ்வாறு இஸ்லாத்தினால் சீர் செய்யப்பட்டது என்று பார்ப்போம்
“ புனித ஹஜ்ஜுக்கு ஆயத்தமாகி வீட்டிலிருந்து பறப்பட்டு விட்டால் அவர்கள் ஹஜ்ஜை நிறைவு செய்த பின்போ அல்லது அதற்கு இடையிலோ வீட்டுக்கு வரும்போது முன் வாசல் வழியாக நுழையக் கூடாது
அவர்கள் சுவரில் ஏறிக் குதித்து வரலாம்
அல்லது இதற்கென்றே கட்டிய சன்னல்கள் வழியாக வரலாம் ‘
இது பண்டைய அரபு மக்களின் ஒரு பழக்கம் –மூட நபிக்கை
மேலும் தேய்ந்து வளரும் நிலவு பற்றி பல குருட்டு நம்பிக்கைகள் ,பல கற்பனைகள் – தேய் பிறை நல்லதா வளர் பிறை நல்லதா ,முழு நிலவு நல்லதா இல்லையா –
அன்று இருந்தன
இன்றும் இருக்கின்றன
இந்த மூடப் பழக்கங்கள் இரண்டையும் இறைவன் ஒரே வசனத்தில் சாடுகிறான்
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக்
காலம் காட்டுபவையாகவும்,
ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.
! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை;
ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்;
எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;
நீங்கள் வெற்றியடையும் பொருட்டு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். ( குரான் 2: 189)
இன்னொரு தீய பழக்கம் – இதை மூட நபிக்கை என்று சொல்ல முடியாது
வணிகம் செய்ய, ஹஜ் செய்யத் தோதாக இறைவன் கட்டளையை மீறுவது தவறு என்று தெரிந்தே அதற்கு மாறு செய்வது
ஆண்டின் மாதங்களை மாற்றும் நசி எனும் பழக்கம் இரு வகைகளில் பயன்படுத்தபட்டது
ஓன்று போர் தடை செய்யப்பட்ட புனித மாதங்களை மாற்றி அமைத்து தேவைபட்டால் ஒரு ஆண்டின்ல் ஒரு மாதத்தைக் கூட்டி ,குறைதுக்கொள்வது
அடுத்து
ஹஜ் பயணம் வெய்யில் ,மழை , குளிர் என்று பல பருவங்களில் மாறி வராமல் ஒரு நல்ல பருவ நிலையில் எளிதாக ஹஜ் செய்யுமாறு
மாதத்தை மாற்றிக் கொள்வது
( ஆங்கிப் புத்தாண்டு, பொங்கல் போன்ற சூரிய ஆண்டை அடிப்படையாகக் கொண்டவை . ஒரே பருவத்தில் வரும்
அரபு ஆண்டு நிலவை அடிப்படையாகக் கொண்டது )
“இறை நம்பிக்கை இன்மையின் மிகப் பெரிய வெளிப்பாடு இந்த (நாசி) எனும் செயல் என்று இறைவன் கண்டிக்கிறான்
நிச்சயமாக இறைவனிடத்தில் இறைவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்
- அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; ---------(9 36 ) .
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் இறை நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது
இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர்.
ஏனெனில் ஒரு ஆண்டில் ல் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு ஆண்டில் அதைத் தடுத்து விடுகின்றனர்.
இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, இறைவன் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான்.
அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன
(இறை நம்பிக்கையற்ற) காஃபிர்கள் கூட்டத்தை இறைவன் நேர் வழியில் செலுத்த மாட்டான்.”( 9 37)
37 ஆண்டுகளாய் தவறாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்த ஹஜ் நாட்கள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டில் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட நிறைவு ஹஜ்ஜில் சரி செய்யப்பட்டு தொடர்ந்து சரியான நாட்களில் கடை பிடிக்கபட்டு வருகிறது
.
இறைவன் நாடினால் நாளைஇந்தத் தொடரின் நிறைவுப் பகுதியில் சிந்திப்போம்
பிறை 9 துல்ஹஜ் (12) ,1444
28062023 புதன்
சர்புதீன்

No comments:

Post a Comment