தமிழ் (மொழி) அறிவோம்
பல்லும் எலும்பும்
16 062023
வெள்ளி
உடல் நலக்குறிப்பு போல்
தோன்றினாலும் இது தமிழ் பற்றிய பதிவுதான்
“களித்து “ என்ற ஒரு சொல்லில் என்
முக நூல் பதிவுக்கு ஒரு சகோ கருத் து (comment) போட்டிருந்தார்
முதலில் எனக்கு
ஒன்றும் புரியவில்லை
என்
பதிவைப் படித்துப் பார்த்த்தும்தான் தெரிந்தது
களித்து
என்பதை தவறாக கழித்து என்று போட்டிருந்தது
தவறை
திருத்தி விட்டு சுட்டிக்காட்டிய சகோ நசீமா பெரோசுக்கு நன்றி தெரிவித்தேன்
ஒரு
பிழைக்கு – தட்டச்சுப் பிழை , கணிப்புப் பிழை என பல காரணங்கள் சொல்லலாம்
ஆனால்
எப்படியும் பிழை பிழைதான் , அதை ஒத்துக் கொண்டு திருத்தி விட வேண்டும் என்பது என் கருத்து
பல்லுப்போனால்
சொல்லுப்போச்சு என்பது பழமொழி
ஆனால் பல்
வலுவாக இருக்கும்போதே சொற்களும் மொழியும் சிதைக்கப் படுகின்றன
இதில்
தொலைகாட்சியின் பங்கு மிக அதிகம்
செய்தி அறிக்கை,
பேச்சுக் காட்சி, தொடர்கள் என எல்லாவற்றிலும் மலிந்து போன பிழைகள்
இப்படியே
விட்டால் இதுதான் சரியான தமிழோ என்ற எண்ணம் எல்லோருக்கும் வரலாம்
காட்சி
ஊடகத்தின் வலிமை, தாக்கம் அப்படி
மிக
இயல்பான பிழை- செய்வினை, செயப்பாட்டு வினை இடமாற்றம்
செயப்பாட்டு
வினை என்பதே ஆங்கில passive voice என்பதன் தாக்கம், தமிழுக்கு
இயல்பானது அல்ல என்கிறார்கள் அறிஞர்கள்
அடுத்து
ல,ள,ழ படும்பாடு
ஒரு உணவு
விடுதியில்
புலி சாதம்
விற்கிறார்கள்
சைவமா
அசைவமா !
இன்னொரு
உணவகத்தில்
பொங்கள்
கிடைக்கிறது
போதை வருமா
!
முகநூல்
பதிவு ஒன்றுக்கு
கலுதை
என்று விடை வந்தது
கலுதை அல்ல
கழுதை என்று சுட்டிக்காட்டினேன்
எல்லாம்
ஒன்றுதானே என்று மறுமொழி
இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம்
இதெல்லாம்
சொல்ல நீ யார் ? உன் எழுத்தில் பிழையே இல்ளையா ?
நீ என்ன
தமிழ் அறிஞனா ?
இப்படி பல கேள்விகள்
உங்களுக்கு உதிக்கும்
நான்
கவிஞனும் இல்லை அறிஞனும் இல்லை
பள்ளியில்,
கல்லூரியில் தமிழில் உயர்ந்த மதிப்பெண் பெற்றதில்லை
இலக்கணம் என்றால்
வேப்பங்காய்
இலக்கியத்தில்
பெரிய ஈடுபாடு கிடையாது
ஆனால்ஓரளவு பிழையில்லாமல் எழுதுவது இறைவன் கொடுத்த வரம் ,
பெற்றவர் கொடுத்த பரிசு , மண் வாசனை
கண்ணதாசனுக்கு
கவிதைத் திறன் கொடுத்த மண்ணுக்கு அருகில்தான் எங்கள் ஊர்
உவமைகள், ,
பழமொழிகள்,பகடி ,நக்கல் இவையெல்லாம்
சரளமாக வரும் எங்கள் ஊர் மக்களுக்கு
இது பற்றி
ஒரு பதிவு போட்டிருக்கிறேன்
ஒரே ஒரு
எடுத்துக்காட்டு
“நெத்தி அகல
இடத்தில் வீடு கட்டியிருக்கிறார்கள் “
ஜ, ஷ, ஸ, ஹ
இதெல்லாம் யார் வாயிலும் வராது
ராசா, ரோசா
, இவைதான் எங்கள் மக்கள் பேச்சு வழக்கு
மக்கமாநகரில்
உள்ள ஹரம் அரம் ஆகி விடும்
எல்லாம்
சரிதான்
தலைப்பில்
உள்ள பல் வந்து விட்டது
எலும்பு ?
நாளை பார்ப்போமே
நிறைவாக
ஒரு சிறிய, எளியவினா
அவனும் அவளும்
அவன்
மற்றும் அவள்
இரண்டில் எது சரியான
நல்ல தமிழ் ?
விடை
அவனும் அவளும்
என்பதே சரி
சரியான
விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
கதீப் மாமுனா
லெப்பை பெயர் சரியா ?
முதல் சரியான
விடை
முகமது
ராஜா
செங்கை A
சண்முகம்
அஷரப் ஹமீதா
தல்லத்
ராஜாத்தி
செல்வகுமார்
ஷர்மதா
இன்னும்
பலருக்கும் விடை தெரிந்திருக்கும்
இவ்வளவு எளிய
வினா தேவையா என எண்ணலாம்
ஆம்
தேவைதான்
இப்போது
புதிதாக ஒரு தமிழ் உருவாகி வருகிறத்
ஆங்கில and, or போன்ற சொற்கள் அப்படியே மொழி பெயர்க்கப்படுகின்றன
தாய் மற்றும் குழந்தை
அன்பு மற்றும் வெறுப்பு
இட்லி மற்றும் சட்னி
பையன் மற்றும் பெண்
இவை கூகிள் மொழி
பெயர்ப்பு
ஆடுவோமே பல்லுப்
பாடுவோமே என்று ஒரு பதிவு சிலநாட்கள் முன்பு வந்தது
பதிந்தவர் நல் ல தமிழ்
அறிஞர் , கவிஞர் நெருங்கிய உறவினர்
தவறை நான் சுட்ட்டியபோது
அவர் சொன்னது
“பல்லவி, அனுபல்லவி இவற்றோடு
தொடர்புடையது
பல்லுப்பாட்டு
எனவே நான் எழுதியது சரி,
பாரதி பள்ளு என்று எழுதியது பிழை”
அப்போதுதான் எனக்குத்
தெரிந்தது அவர் அறிஞர் மட்டும் அல்ல தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும் என்பது
அவர் ஆராய்ச்சி தொடர,
தொடர்ந்து புதிய சொற்கள் மொழி உண்டாக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
இந்தப் பட்டறிவின் தாக்கத்தால்
அண்மையில்
சென்னை எலும்பூர்
என்ற பதிவில் உள்ள
பிழையை சுட்டிகாட்டமல் அடக்கிக் கொண்டேன்
யார் கண்டது ! எலும்பூர்
என்பதற்கு இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் இருக்கலாம்
என்ன ஆயிற்று என்று தெரியவில்லை
சிறிது நேரத்தில் எலும்பு உயிர் பெற்று எழுந்து எழும்பூர் ஆகி விட்டது
நிறைவாக ஒரு சுவைச்
செய்தி
எலும்பு சாம்பார்
எலும்பு புளிக்குழம்பு – எங்கள் ஊரின்
சிறப்புச் சுவைகள்
இ (க)கடைச்
செருகல்
திருமணம்
ஆகி புகுந்த வீட்டுக்கு வரும் மருமகளை
“வலது காலை
எடுத்து வைத்து வாம்மா “ என்று வரவேற்கிறார் மாமியார்
வலது கால் எது
என்று புரியாமல் மருமகள் முழிக்க அதைப் புரிந்து கொண்ட மாமியார்
“சோத்தாங்காலை
எடுத்து வைத்து வா “ என்று சொல்ல
இன்னும்
குழப்பம் அதிகமாகி விட்டது
எதற்கு
வம்பு என்று ஒரு சிறிய நீளத்தாண்டல் செய்து குதித்து உள்ளே வந்து விடுகிறார்
மருமகள்
இறைவன்
நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
௧௬௦௬௨௦௨௩
16062023
வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment