பிறை 5 துல்ஹஜ் (12) ,1444
ஸபா மர்வா
24062023 sசனிக்கிழமை
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
சென்ற சில ஆண்டுகள் போல இந்த ஆண்டும் பத்து நாட்களும் இறைவன் அருளால் மற்ற பதிவுகளைத் தவிர்த்து புனித ஹஜ் பயணம் , புனித காபா நபி இப்ராஹீம் அவர்கள் பற்றி நேற்று எழுதத எண்ணி கடந்த நன்கு நாட்களாக புனிதப் பயணம், குர்பானி பற்றி சில நடை முறைக் குறிப்புகளைப் பார்த்தோம்
நேற்றைய பதிவின் நிறைவாக
ஸயீ என்றால் என்ன ?
என்று கேட்டிருந்தேன்
அதற்கு விடை விளக்கம் காணுமுன்
நேற்றைய பதிவு பற்றி ஒரு சிறு விளக்கம்
பர்ளு எனும் கட்டாயக் கடமைகள் 5க்கு மேல் கத்னா ,குர்பானி போன்றவற்றை சேர்ப்பது போல் என் பதிவு இருக்கிறது என்று ஒரு கருத்து வந்தது
அப்படி அல்ல நான் சொல்லவந்தது
கத்னா என்ற சொல்லோ , அது பற்றிய குறிப்போ திரு மறையில் இல்லை
அப்படிப்பட்ட ஒரு சுன்னத் வேறு எந்த் பர்லும் இல்லாத அளவுக்கு 100% கடைப்பிடிக்கப்பட்டு அது செய்யாத ஆண் முஸ்லிமே இல்லை என்று என்னும் அளவுக்குப் பரவி விட்டது
(அதன் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்)
அப்படி இருக்கும்போது இறைவன் கட்டளையிட்ட குர்பானியை அது சுன்னத்தான் ,பர்ளு அல்ல என்ற காரணம் காட்டி கொடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை வலியுறுத்தவே கத்னாவையும் குர்பானியையும் ஒப்பிட்டுக் காண்பித்தேன்
(According to the Hanafi school of thought, Qurbani is wajib and is considered compulsory. The difference between fard and wajib is that fard actions are compulsory based on definitive evidence, while there is some uncertainty regarding whether or not wajib actions are definitely compulsory. However, wajib actions are still highly recommended and, in the Hanafi school of thought, they are considered obligations upon Muslims i.e. one should not deliberately miss them.
From Muslim hands)
எழுதுவது இறைவன் பற்றி என்பதால் ஒன்றுக்கு மூன்று முறை சரி பார்த்துத்தான் பதிவு செய்கிறேன்
அதையும் மீறி வரும்சொற்பிழை பொருட் பிழைகளை கருணையே உருவான இறைவன் மன்னிக்க வேண்டும்
இனி
ஸயீ பற்றி
ஹஜ் ,ஊம்ராவில் ஸபா மர்வா குன்றுகளுக்கு இடையே ஓடுவது என்று
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
நஜீமா பெரொஸ் – முதல் சரியான விடை
தல்லத்
சிராஜுதீன்
ஷர்மதா
ஷிரீன் பாருக்
தன்சீலா
ஸபா மர்வா , ஜம் ஜம் ஊற்று
நபி இப்ராகிம் அலை அவர்கள் இறைவன் கட்டளைப்படி தன் மனைவி ஹாஜரையும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் பாலை வனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறார் .
அவர் கொடுத்து விட்டுப்போன உணவும் நீரும் தீர்ந்து விட குழந்தையின் தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தேடி ஹாஜர் அங்கும் இங்கும் அலைகிறார் .
ஒரு பக்கம் ஸபா இன்னொரு பக்கம் மர்வா என சிறு குன்றுகள்
. ஒரு குன்றின் உச்சியில் ஏறி தண்ணீர் எங்காவது இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஒன்றும் கிடைக்காத்தால் மறு குன்றின் உச்சியில் எறிப்பார்க்கிறார்.
இப்படி எழு முறை இரு குன்றுகளுக்கும் இடையே ஓடுகிறார்
. இதற்கிடையே மகன் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதையும் பார்த்துக்கொள்கிறார் .
மகன் கண்ணில் படும்போது சற்று நிதானமாகவும்
கண்ணில் படாத இடங்களில் வேகமாகவும் ஓடுகிறார்
இறைவன் கட்டளைப்படி இறைத் தூதர் ஜிப்ரில் அலை அவர்கள் குழந்தைக்கு அருகே ஒரு நீரூற்றை உண்டாக்க அதிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தண்ணீரை பெருக்கெடுக்காமல் நிற்கும்படி அன்னை ஹாஜர் ஜம் ஜம் என்று சொல்ல அதுவே அந்த நீருற்றுக்குப் பெயராகி விட்டது
அன்று துவங்கி இன்று வரை, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக் தண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருக்கிறது . காபாவுக்கு வரும் லட்சக்கணக்கானோர் பயன் படுத்தும் அளவுக்கு வந்து கொண்டே இருக்கிறது மேலும் அந்தப்பகுதியில் பல கி மீ தொலைவுக்கு எந்த நீர் ஆதாரமும் கிடையாது
பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த நீருற்று யாரும் போக முடியாத அளவுக்கு மூடப்பட்டு தண்ணீர் மட்டும் இறைத்து விநியோகிக்கப்படுகிறது
ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரின் தரம், தூய்மை மிக நவீன முறைகளில் பரிசோதிக்கப்படுகிறது . மிக அதிகம் கூட்டம் கூடும் புனித ரமலான் மாதத்தில் ஒரு நாளைக்கு நூறு முறை பரிசோதிக்கப்படுகிறது .
ஜம் ஜம் நீர் உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ எங்கும் விலைக்கு விற்கப்படுவதில்லை
நிறம், மனமற்ற இந்த நீர், பல ஆண்டுகளாக அப்படியே கெட்டுப்போகாமல் இருக்கும்
அன்னை ஹாஜர் ஸபா மர்வாகுன்றுகளுக்கு இடையே ஓடியதை நினைவு கொள்ளும் வகையில் இன்றும் ஹஜ் பயணிகள் ஸபா , மர்வாவுக்கு இடையே எழு முறை ஓட வேண்டும் .
அன்று அன்னை ஹாஜர் ஓடியது கடும் வெய்யிலில் கொதிக்கும் பாலை வன மணலில்
இன்றோ வழுவழு தரை , குளிர்பதன வசதி , அன்னை ஹாஜர் போல் வேகமாக மெதுவாக ஓட வேண்டிய இடங்களைக் குறிக்கும் வண்ண விளக்குகள் .ஆங்காங்கே உட்கார்ந்து ஒய்வு எடுக்க இடங்கள்,
நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலிகள் , இருசக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர் ) என பல வசதிகள்
ஒரு முறைக்கு அரை கி மீ யாக மொத்தம் மூன்றரை கி மீ வரும்
ஸபா மலைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு
அண்ணல் நபி ஸல் அவர்கள் முதன் முதலில் இசுலாம் பற்றி பரப்புரை செய்தது இந்த மலை மேலிருந்துதான் . எவ்வளவு எதிர்ப்பு , எத்தனை வசை மொழிகள் ! அது ஒரு தனிக்கதை
அதற்கு நேர் மாறாக அண்ணல் நபி ஸல் அவர்கள் வெற்றி வீரராக மக்காவில் நுழைந்து மக்களிடம் உரையாற்றியதும் இதே மலை மேலிருந்துதான் .
எதிர்த்தவர்கள் , வசை பாடியவர்கள் எல்லோரும் மிகுந்த பணிவுடன் , ஒரு வகை அச்சத்துடன் அவர் உரையைக் கேட்டனர்
“ நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் இறைவனின் அடையாளங்கள் . புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள் இவற்றிற்கு இடையே ஓடுவது தவறு கிடையாது ---------“(குரான் 2:158)
இரண்டு குன்றுகளுக்கு இடையே ஓடுவது தவறு , பாவம் என்றொரு கருத்து உலவ ஆரம்பித்த காலத்தில் அதைத் தெளிவு படுத்தவே “ தவறு இல்லை , பாவம் இல்லை “ போன்ற சொற்கள் . மற்றபடி ஸயி எனப்படும் இந்த ஓட்டம் புனிதப் பயணத்தில் கட்டாயக் கடமையாகும்
எனக்குத் தெரிந்ததை, உணர்ந்ததை , பிறர் சொல்லக் கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
பிழைகள் இருந்தால் ஏக இறைவன் மன்னிப்பான்
இதுவரை ஹஜ் செய்யாதவர்கள் விரைவில் செய்யவும், செய்தவர்கள் , திரும்ப செய்ய விரும்பவர்கள் செய்யவும்
இது வரை குர்பானி கொடுத்துப் பழக்கம் இல்லாதவர்கள்
இந்த ஆண்டில் துவங்கவும்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
இந்த 5 நாட்களில் பார்த்த பதிவுகள்
நபி இப்ராஹீம்அலை, அவர் குடும்பம் பற்றிய நிகழ்வுகளையே சொல்கின்றன
இனி வரும் பதிவுகளில் அந்த மா மனிதர் – அவரின் குண நலன்கள் அவருக்கு இறைவன் அளித்த உயர் நிலை அவர் குடும்பம் பற்றிப் பார்ப்போம்
எத்தனை தடவை எழுதினாலும் , படித்தாலும் அலுப்பு சலிப்பு ஏற்படாத செய்திகள்
இன்றைய வினா
இப்ராஹீம் அலை அவர்களின் நபி பரம்பரை எது வரை ---யார் வரை தொடர்கிறது ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 5 துல்ஹஜ் (12) ,1444
24 062023 சனிக்.கிழமை
சர்புதீன் பீ
பிறை 6 துல்ஹஜ் (12) ,1444
நபி இப்ராஹீம் அலை அவர்களின் பண்பு நலன்கள்
25062023 ஞாயிறு
புனித ஹஜ் மாதம் - இன்று பிறை 6
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
அந்த சிறப்புகள் எல்லாம் நபி இப்ராஹீம் அலை அவர்களை மையமாகக் கொண்டே இறைவன் வழங்கியிருக்கிறான்
அந்த மாமனிதரின் சிறப்புகள் பற்றி இன்று பார்ப்போம்
இப்ராஹீம் நபியின் பெயர் திருமறையில் 69 முறை வருகிறது
நன்றியுள்ளவர்,
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்,
நேர்வழியில் வழிநடத்தப்பட்டவர்,
இவ்வுலகில் நல்வாழ்வு அளிக்கப்பட்டு, மறுமையில் நல்லவர்களுள் ஒருவராக,
இறைவனுக்குக்குக் கீழ்ப்படியும்,
தலைமைஏற்று வழி நட்த்தும் இமாம்,
சகிப்புத்தன்மை,
கனிவான உள்ளம்,
தவம்,
தாராள மனது,
உண்மை,
தீர்க்கதரிசி,
நோவாவைப் பின்பற்றுபவர்,
வலிமை ,தொலை நோக்குப் பார்வை,
ஒரு தனிப்பட்ட உயர்ந்த தரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இவை எல்லாம்இறைவனே திரு மறையில் இந்த நபியைக் குறிப்பிடும் சொற்கள்
ஏக இறைக் கொள்கையில் முழுமையாக இருப்பவர்( ஹனிப்,)
இந்த ஹனிப் என்ற சொல் குர்ஆனில் 10 முறை வருகிறது அதில் 7 நேரடியாக நபி இப்ராகீம் அலை அவர்களைக் குறிப்பிடுகிறது
விருந்தோம்பல்,
வானவர்கள் மனித உருவில் நபி அவர்களிடத்தில் வருகிறார்கள்
முன் பின் தெரியாத அவர்களுக்கு ஒரு சிறந்த விருந்து கொடுத்து உபசரிக்கிறார்
அழகானவர், இறைவனுக்கு மிக நெருக்கமான , அர்பணிப்புடன் மிக நெருக்கமான தோழர் ( கலீல்), Khalil)
இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் திருமறை அழகிய விளக்கம் அளிக்கிறது
நீளம் , நேரம் கருதி சில விளக்கங்கள் மட்டும் சுருக்கமாகக் கொடுத்துளேன்
இன்னும் இறைவனையே கேள்வி கேட்ட பகுத்தறிவாளர்
இறைவனின் ஆணைப்படி மகனைப் பலி கொடுக்குமுன் அந்த சிறுவனிடம் “ இது பற்றி உன் கருத்தென்ன “ என்று கேட்ட மனித நேயர்
இப்படிப்பட்டபல சிறப்புக் குணங்கள்
இந்தப் பண்புகநாளைலளைப் போற்றி இறைவன் இவருக்கு அளித்த உயர்வு என்ன ?
நாளை பார்ப்போமே
நேற்றைய வினா
இப்ராஹீம் அலை அவர்களின் நபி பரம்பரை எது வரை ---யார் வரை தொடர்கிறது ?
இது வரை சரியான விடை வரவில்லை
எனவே வினாவை இன்னும் சற்றுத் தெளிவாக்குகிறேன்
நபி அ வின் மகன் நபி ஆ
நபி ஆ வின் மகன் நபி இ
நபி இ யின் மகன் நபி ஈ
நபி ஈ யின் மகன் நபி உ
என்று தொடர்ந்து இடை வெளி இல்லாமல் நபி பரம்பரை யார் வரை வருகிறது ?
இது பற்றி நான் பல முறை பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன் அதனால் தான் வினாவை சுருக்கமாகப் போட்டேன்
விளக்கத்துக்குப் பின் நிறைய சரியான விடைகளை எதிர் பார்க்கிறேன்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 6 துல்ஹஜ் (12) ,1444
25 062023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment