Thursday, 22 June 2023

பிறை 4 துல்ஹஜ் (12) ,1444குர்பானி கட்டயமா !




 பிறை 4 துல்ஹஜ் (12) ,1444

23062023 வெள்ளி
குர்பானி கட்டயமா !
புனித ஹஜ் மாதம் - இன்று பிறை 4
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
சென்ற சில ஆண்டுகள் போல இந்த ஆண்டும் பத்து நாட்களும் இறைவன் அருளால் மற்ற பதிவுகளைத் தவிர்த்து புனித ஹஜ் பயணம் , புனித காபா நபி இப்ராஹீம் அவர்கள் பற்றி நேற்று எழுதத எண்ணி கடந்த இரு நாட்களும் புனிதப் பயணம் பற்றி சில நடை முறைக் குறிப்புகளைப் பார்த்தோம்
நேற்று குர்பானி, பக்ரீத் போன்ற சொற்களுக்கு பொருளும் நபி இப்ராஹீம் அலை அவர்களின் மகத்தான தியாகம் பற்றியும் பார்த்தோம்
நேற்றைய பதிவின் நிறைவாக
குர்பானி கட்டாயக் கடமையா ? என்று ஒரு வினா கேட்டிருந்தேன்
இரண்டு விடைகள் வந்தன
சகோ அஷ்ரப் ஹமீதா இல்லை என்றும்
சகோ ஷர்மதா ஆம் என்றும் சொல்ல்லியிருந்தார்கள்
இருவருக்கும் நன்றி வாழ்த்துகள்
இல்லை என்று சொன்னவர் தொழுகை, நோன்பு போன்ற 5 கடமைகள் மட்டுமே கட்டாயமானவை என்கிறார்
ஆனால் நடைமுறையில் இன்னும் பல செயல்கள் கட்டாயமாகி விட்டன
இதபற்றி நிறைய எடுதுக்காட்டுகளும் கருத்துகளும் சொல்லலாம் . சொல்லிகொண்டே போகப்போக குழப்பம்,கருத்து வேறுபாடு வளருமே தவிர ஒரு தெளிவு, தீர்வு கிடைக்காது
எனவே எல்லோருக்கும் தெரிந்த , எளிதில் புரியக் கூடிய ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம்
அது ஆண்களுக்கு செய்யும் கத்னா என்பது
இதன் பொதுப் பெயரே சுன்னத் கல்யாணம் எனபதுதான் ஆனால் அது நடைமுறையில் கட்டாயம் ஆகி விட்டது
சிறு வயதில் செயாமல் விட்டவர்கள், புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்கள் எல்லாம் மருத்துவரிடம் செய்து கொள்கிறார்கள்
மலேசிய போன்ற நாடுகளில் பிறந்த குழந்தைக்கு தடுப்பு ஊசி போடுவது போல் கத்னாவும் மருத்துவ மனைகளிலேயே செய்து விடுகிறார்கள் என சொல்லக் கேட்டதுண்டு
நான் அறிந்த வரையில் திருமறையில் கத்னா பற்றி எந்தக் குறிப்பும் இல்லை
எனவே கலிமா , தொழுகை , நோன்பு, சக்காத்து ஹஜ்
இவற்றிற்கு மேல் நடை முறையில் பல செயல்கள் கட்டாயமாகி விட்டன என்பது மறுக்க முடியாத ஓன்று
அந்த வகையில் பார்த்தால் சகோ ஷர்மதாவின் ஆம் என்ற விடை சரியான விடை ஆகிறது
மீண்டும் அவருக்குப் பாராட்டுகள் ,வாழ்த்துகள்
இனி குர்பானி பற்றி --
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் இறைவன் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்;
சிரமப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்((குரான் 22:36)
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து இறைவன் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் இறைவனின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே
குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்;
ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22:34.)
மேலும் , நாம் ஒரு பெரும் பலியைக் ஈடாகக் கொடு த்து அந்தக் குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம். 37:107.
இதில் வரும் பெரும்பலி என்ற சொல்லுக்கு அறிஞர்கள் கொடுக்கும் விளக்கங்களில் ஒன்று
“மறுமை நாள் வரை உலகெங்கும் உள்ள நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் அதே நளில் கால் நடையை பலி கொடுக்க வேண்டும் என்று இறைவன் ( ஆம் இறைவன்தான் ) ஒரு மரபினை ஏற்படுத்தி விட்டான் “(IFT தமிழ் குர்ஆனில் கண்டது)
இதற்கு மேலும் இதற்கு விளக்கம் தேவையில்லை என எண்ணுகிறேன்
மேலும் குர்பானி ஒரு சமூக , பொருளாதார சமன் பாட்டு செயலாகவும் அமைகிறது
சக்காத்து போல் இதுவும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வழி செய்கிறது
குர்பானி கறியில் ஒரு பங்கு கண்டிப்பாக ஏழைகளுக்குப் போய்ச் சேரவேண்டும்
திருமறையில் இறைவன் ஆணையிட்டு விட்டான்
நபி இப்ராஹீம் முதல் இறுதி நபி ஸல் அவர்கள் வரை செயல் முறை வழி காட்டி விட்டார்கள்
இனி தயக்கம் , மயக்கம் ,குழப்பம் எல்லாவற்றயும் விலக்கி விட்டு தெளிந்த மனதோடு நபி இப்ராஹீம் அலை அவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூர்ந்து குர்பானி கொடுப்போம்
இது வரை கொடுக்காதவர்கள் இன்றே ,இந்த ஆண்டே துவக்கலாம்
அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்;
இறைவன் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22;37 )
எனக்குத் தெரிந்ததை, உணர்ந்ததை , பிறர் சொல்லக் கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
பிழைகள் இருந்தால் ஏக இறைவன் மன்னிப்பான்
இதுவரை ஹஜ் செய்யாதவர்கள் விரைவில் செய்யவும், செய்தவர்கள் , திரும்ப செய்ய விரும்பவர்கள் செய்யவும்
இது வரை குர்பானி கொடுத்துப் பழக்கம் இல்லாதவர்கள்
இந்த ஆண்டில் துவங்கவும்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
இன்றைய வினா
ஸயீ என்றால் என்ன ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 4 துல்ஹஜ் (12) ,1444
23 062023 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment