தமிழ்( மொழி ) அறிவோம்
02 062023
“அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி"
விடை ,விளக்கம்
யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்னும் தமிழறிஞரால்
சொல்லப்பட்டது...!
நீதிமன்றத்தில்..ஒருசாட்சிக்கான விசாரணையின்
போது...நாவலர ஆங்கிலத்தில் கூறிடநீதிபதி தமிழிலேயே
கூறுமாறு பணிக்க..
சினமுற்ற தமிழறிஞர் இவ்வாறுகடுந் தமிழில் கூற..
மொழிபெயர்ப்பாளர் விக்கித்துப் போனதாக...ஒரு
வரலாறு...!!
அவர் கூறியதன் விளக்கம் இதுதான்!
அன்று சூரியன் வானத்தில் எழுந்த நான்கு நாழிகை
கடந்து இருக்கும்.. நான் கடல் ஓரத்தில்காற்று வாங்கியவாறு
சிறுநடை சென்ற போது...!!
தமிழறிஞர்..தம் மாணவர்க்குப்பின் தெளிவாக்கினாராம்...!!
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் முதல் சரியான விடை
செங்கை A சண்முகம்
ஹசன் அலி
செல்வகுமார்
கணேச சுப்ரமணியம்
வேலவன்
ஷர்மதா
சிராஜுதீன்
(பேரனின் 12 ஆம் வகுப்பு தமிழ் பாட நூலில் இருந்து )
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௦௨௦௬௨௦௨௩
02062023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment