Monday, 12 June 2023

முத்திரை பதிப்போம் 13 பிரிதிவி முத்திரை

 






முத்திரை பதிப்போம் 13

- உடல் மன சோர்வு நீக்கி உற்சாகம் அளிக்கும்
பிரிதிவி முத்திரை
பெயரைப்பார்த்து தயங்க வேண்டாம்
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் முத்திரையின் பெயர்கள் எல்லாம்
வட மொழியிதான் இருக்கும்
மொழி, மத அடிப்படையில் இவற்றை ஒதுக்கி வைத்தால் இழப்பு நமக்குத்தான்
மிக எளிய ,
பொருட்செலவு இல்லாத,
செய்வதற்கு எளிதான ,
பக்க விளைவுகள் இல்லாத
முத்திரைகள் தரும் பயன்கள் பற்றி நாம் பலபதிவுகளில் பார்த்து வருகிறோம்
அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போகும் பிரிதிவி முத்திரையின் பலன்கள் அளவற்றவை
பிரிதிவி என்ற சொல் நிலத்தைக் குறிக்கும்
ஐம்பூதத் தத்துவத்தின் படி நம் உடல் நிலம் ,நீர் ,வானம், போன்ற 5 மூலகங்களால் ஆனது
மண்ணில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்கிறது குரான்
எனவே இந்த நில சக்தியை செயல்படுதுவது மூலமாக நாம் அடையப்போகும் பலன்கள் பற்றிப்பர்ர்ப்போம்
செய்முறை
மோதிர விரல் (ring finger) நுனியும் பெருவிரல் (thumb) நுனியும் ஒன்றைஒன்று மிகவும் அழுத்தம் இல்லாமல் தொட்டுக்கொள்ள வேண்டும் .
மற்ற விரல்கள் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
அவ்வளவுதான்
இரண்டு கைகளிலும் செய்யவேண்டும்
ஒரு நாளைக்கு மூன்று முறை 15 நிமிடங்கள் செய்யலாம்
இயல்பான மூச்சு
அமைதியாக , உடல் தளர்வாக உட்கார்ந்து செய்யலாம்
பலன்கள்
உடல், மன சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும்
மூக்கின் நுகரும் சக்தி அதிகரிக்கும்
நகம், தோல், முடி, எலும்புகளுக்கு நலம் தரும்
நடையில் ஏற்படும் தள்ளாட்டம், தடுமாற்றத்தைக் குறைத்து உடல் சமநிலையை (equilibrium )சீர் செய்து, தன்னம்பிக்கையை வளர்க்கிறது
இன்னும் கீல்வாதம் (Osteoarthritic), மூளையில் கட்டி (brain tumour ) இவற்றையும் ஓரளவு சரி செய்யுமாம்
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, ஒரு முகப்படுத்தும் திறன் (concentration) போன்றவை அதிகற்குமாம்
சக்கரங்கள்(Chakras) எனப்படும் உடலில் உள்ள சக்தி மையங்களைத் தூண்டி ஆன்மீக பலத்தையும் பெருக்குவதாகச் சொல்லப்படுகிறது
சுருக்கமாகச் சொல்வதென்றால் உடல் நலம், மன நலம் ஆன்மீக நலம் மூன்றையும் வளர்த்து ஒரு நிறைவான வாழ்வுக்கு வழி காட்டுகிறது இந்த எளிய முத்திரைப் பயிற்சி
செய்துதான் பார்ப்போமே , காசா பணமா கொஞ்சம் நேரம் மட்டும்தானே ஒதுக்க வேண்டும்
எச்சரிக்கை
நீங்கள் வழக்கமாக உட்கொள்ளும் மருந்து மாத்திரை, பரற்கும் மருத்துவம் எதையும் தகுந்த மருத்துவஆலோசனை இல்லாமல் நிறுத்த வேண்டாம்
நிறுத்த வேண்டாம்
எளிய முத்திரைகளைப் பயின்று ,பயிற்சி செய்து, எல்லோரும் நலம் வாழ வாழ்த்துவோம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்தித்து முத்திரை பதிப்போம்
13062023 செவ்வாய்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment