Sunday, 4 June 2023

உடல் நலத்துக்கு உச்சந்தலையை அழுத்தவும் DU 20

 



உடல் நலத்துக்கு

உச்சந்தலையை அழுத்தவும்
05062023
குழந்தைகள் தலையில் உச்சிக்குழி என்று ஓன்று இருக்கும். மென்மையான அந்தப்பகுதியை யாராவது தொட்டால் அருகில் உள்ள பெரியவர்கள் அலறுவார்கள் – அழுத்தி விடாதே பள்ளமாகி விடும் என்று
இந்தக் குழி ஏன், எப்படி வருகிறது என்பதெல்லாம் தனி மருத்துவக் கதை
சுருக்கமாக இறைவன் படைத்த உடலில் இதுவும் ஒரு அற்புதம் என்று சொல்லலாம்
சரி வயதாக வயதாக அந்தக் குழி மறைந்து விடுகிறதா ?
இல்லை , மறைவதில்லை
எனக்கெல்லாம் அது இல்லை என்கிறீர்களா ?
உங்கள் உச்சந் தலையின் நடுவில் விரலை வைத்துத் தடவிப் பாருங்கள்
ஒரு சிறிய மேட்டுப்பகுதி தெரிகிறதா ?
அதன் அருகில் உங்கள் வலது கைப்பக்கத்தில் ஒரு சிறிய பள்ளம் இருக்கும் அதுதான் உச்சிக் குழி
இந்த உச்சிக்குழி வர்மக் கலை அக்கு பஞ்சர் / அக்கு பிரஷர் வைத்திய முறைகளில் மிக முக்கியமான ஒரு புள்ளியாக இருக்கிறது
வர்மக்கலையில் நான் முதுனிலை பட்டம் பெற்றிருந்தாலும் அது பற்றி அதிகம் பேசுவது கிடையாது
காரணம் அதில் உள்ள நுட்பங்கள் ,பக்க விளைவுகள்
எனக்குத் தெரிந்துவரை அக்கு வைத்திய முறையில் பக்க விளைவுகள், தவறான புள்ளிகள் என்று எதுவும் கிடையாது
அக்கு பஞ்சர் ஊசியினால் உண்டாகும் ( தேவை அற்ற )அச்சம், தயக்கத்தை தவிர்க்க அக்கு பிரஷர்முறையை பயன்படுத்தலாம்
DU 20 என்று பெயர் கொண்ட இந்தப்புள்ளிக்கு ,
சொர்க்கத்தின் திறவு வாயில்
நூறு புள்ளிகள் சந்திக்கும் இடம்
என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு
எல்லா சக்தி ஓட்டப் பாதைகளையும் கட்டுப்படுத்தும் ஒரு தலைமைப் புள்ளி இது
பயன்கள்
தூக்கத்தைத் தூண்டும் புள்ளி என்பதால் தூக்கமின்மையைப் போக்கப் பயன்படும்
நினைவுத் திறனைப் பெருக்கும்
மன நோய்கள்,
ஆஸ்துமா
வலிப்பு,
முடி கொட்டுதல்
ஆண்மைக் குறைவு போன்ற நோய்களுக்குப் பயன்படும்
என்னிடம் உள்ள அக்கு பிரஷர் நூலில் சொல்லப்பட்ட பெரும்பாலான நோய்களுக்கு இந்தபுள்ளி மற்ற புள்ளிகளுடன் சேர்த்து முதல் புள்ளியாக வருகிறது
மேலும் இந்த புள்ளியின் அருகில் நான்கு பக்கங்களிலும் இருக்கும் புள்ளிகளுக்கு 4 clever gods என்று பெயர்
அவையும் பல நோய்களுக்கு தீர்வாகின்றன
எப்படி அழுத்தம் கொடுப்பது ?
ஒன்றும் பெரிய வித்தை இல்லை
புள்ளியை எப்படி அறிவது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்
ஆள்காட்டி விரளைக் கொண்டு DU 20. அதைச் சுற்றியுள்ள நான்கு புள்ளிகளையும் அழுத்த வேண்டும்
குழந்தைகளுக்கு மிக மென்மையாகவும் மற்றவர்களுக்கு சற்று நன்றாகவும் அழுத்தலாம்
2 , 3 நிமிடங்கள் அழுத்தலாம்
புள்ளி மிகச் சரியாகத் தெரியவில்லயே என்ற கவலை வேண்டாம்
புள்ளியைச் சுற்றி ஒரு சிறிய வட்டம் அளவுக்கு புள்ளியின் தாக்கம் இருக்கும்
மேலும் வேறு எதாவது புள்ளியை அழுத்தி விட்டாலும் அதனால் கெடுதி எதுவம் வராது அந்தபுள்ளிகுள்ள பயன் கிடைக்கும்
அரிதிலும் அரிதாக அழுத்துவதால் வலி , வேறு எதாவது உடல் நலக்குறைவு ஏற்படுவது போல் இருந்தால் உடனே அழுத்துவதை விட்டு விடுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05062023 புதன்
சர்புதீன் பீ (அகுபஞ்சரில் பட்டயப படிப்பு )

No comments:

Post a Comment