திரு மறை குரான் 17:51
16062023
வெள்ளி
"------------எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள்
கேட்கின்றனர்’--------”
குரான் வசனம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை
சிந்திப்போம்
விடை
சூராஹ் 17அல் இஸ்ரா./ பனு இஸ்ராயில் (இஸ்ராயிலின்
மக்கள் ) வசனம் 51
17:51. “அல்லது
மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன்
(மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள்
கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!”
என்று (நபியே!) நீர் கூறும்;
அப்போது அவர்கள் தங்களுடைய
சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று
கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!
இது வசனம் 17:49,50 ன்
தொடர்ச்சி
17:49. "நாங்கள்
எலும்புகளாகி மக்கிப் போன பின் புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
17:50. (நபியே!)
நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
சரியான விடை எழுதி
வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
– விளக்கமும் அனுப்பியிருந்தார்
ஹசன் அலி
ஷர்மதா
சிராஜுதீன் – விடையும்
விளக்கமும் அனுப்பியிருந்தார்
இதில் எல்லாம்
வல்ல இறைவன்
மறுமை நாளில்
எழுப்பப் படுவதை கிண்டல் செய்யும் இறைமறுப்பாளர்கள் குறித்துத்
தெரிவிக்கின்றான்.
"நாங்கள் குழிகளில் (அடக்கப்பட்ட பிறகு) மீண்டும்
எழுப்பப்படுவோமா?
நாங்கள்
மக்கிப்போன எலும்புகளாக மாறிவிட்ட பிறகுமா?" என்று கேட்கும் இறைமறுப்பாளர்கள் குறித்து எல்லாம் வல்ல இறைவன் கூறுகின்றான்,
உங்களை எவன்
முதலில் படைத்தானோ,
அவன் தான்
மீண்டும் உங்களுக்கு நீங்கள் எந்தநிலையில்
இருந்தாலும் மீண்டும் உயிர் கொடுப்பவன் என்று அறிவிப்பதாக உள்ள இறைவசனம்
ரஸூல் (ஸல்)அவர்களை,
பொய்யர் அல்லது
சூனியக்காரர் அல்லது சூனியம் செய்யப்பட்டவர் அல்லது கவிஞராக நிரூபணம் செய்ய
இறை மறுப்பாளர்களால் பல
நேரங்களில் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இதுவும் ஒன்று.
பல தெய்வங்கள், ஒவ்வொன்றும ஒவ்வொரு வேலையை செய்வதாக நம்பிக்கை
கொண்டவர்களால் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு,
அனைத்து செயல்களள யும் நடத்தி
வைப்பவன் (ஏக இறைவன்) மட்டுமே என்பதை
அழுத்தமாக சொல்லும் வகையில்
எவன் உங்களை முதல் தடவை
படைத்தானோ, அவன் தான்
என்று பதில் கூறுமாறு இறைவன், நபி (ஸல்)
அவர்களுக்கு
அறிவுறுத்துகிறான்
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
26
அல் கைதா (11) 1444
16062023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment