பிறை 2 துல்ஹஜ் (12) ,1444
21062023 புதன்
பிறை தெரிந்து
புனித ஹஜ் மாதம் பிறந்து இன்று பிறை 2
சென்ற சில ஆண்டுகள் போல இந்த ஆண்டும் பத்து நாட்களும் இறைவன் அருளால் மற்ற பதிவுகளைத் தவிர்த்து புனித ஹஜ் பயணம் , புனித காபா நபி இப்ராஹீம் அவர்கள் பற்றி நேற்று எழுதத் துவங்கினேன்
உள் நுழையு முன்
ஆங்கில மாதங்கள் 12 எல்லோருக்கும் தெரியும்
தமிழ் மாதங்கள் ஓரளவு நிறையப் பேருக்குத் தெரியும்
இஸ்லாமிய மாதங்கள் ?
இப்போது தெரிந்து கொள்வோமே
இசுலாமிய மாதங்களின் பெயர்கள்[
எண் . மாதம் நாட்கள்
1 முஹர்ரம்
30
2 சஃபர்
29
3 ரபி உல் அவ்வல்
30
4 ரபி உல் ஆகிர் (அ) தானி
29
5 ஜமா அத்துல் அவ்வல்
30
6 ஜமா அத்துல் ஆகிர் (அ) தானி 29
7 ரஜப்
30
8 ஷஃபான்
29
9 ரமலான்
30
10 ஷவ்வால்
29
11 துல் கஃதா
30
12 துல் ஹிஜ்ஜா
29/(30)
மொத்தம் 354/(355)
பிறை தெரிவதை ஒட்டி நாட்களின் எண்ணிக்கை29அல்லது 30என்று மாறலாம்
நேற்றைய பதிவில் ஹஜ் புனிதப் பயணம் பற்றி சில நடைமுறைக் குறிப்புகள் பார்த்தோம்
அதன் தொடர்ச்சியாக ஒரு சில
குறிப்பாக ஆடைகள் பற்றி
பெண்களுக்கு தனியாக இஹ்ராம் ஆடை கிடையாது
தலை முடி முதல் பாதம் வரை மூடியிருக்க வேண்டும்
---முகம் கைகள் தவிர
முகத்தை மூடக் கூடாது
இறுக்கமாக உடை அணியக்கூடாது
இந்த விதிகளுக்கு உட்பட்டு எந்த உடையும் அணியலாம்
அது கால் சராயகவோ , இரவு உடையாகவோ, புடவையாகவோ இருக்கலாம்
ஆண்கள் பலநாட்கள் இஹ்றாம் உடையில் இருக்க வேண்டும்
மேலும் மக்கா மதினா நகர்களில் தூசி மிகவும் குறைவு அதனால் துணியைத் துவைத்தால் பளீர் என்று சுத்தமாகி விடும் எளிதில் காய்ந்தும் விடும் இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மழைக்காலம் தவிர மற்ற நாட்களில் ஓரளவு துணிகள்கொண்டு போனால் போதும்
மெல்லிய வேட்டி வேண்டாம்
மற்றபடி வெள்ளை உடை முழுக்கைச் சட்டை என்று கட்டுப்பாடுகள் இல்லை
எனக்குத் தெரிந்ததை, உணர்ந்ததை , பிறர் சொல்லக் கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
பிழைகள் இருந்தால் ஏக இறைவன் மன்னிப்பான்
இதுவரை ஹஜ் செய்யாதவர்கள் விரைவில் செய்யவும், செய்தவர்கள் , திரும்ப செய்ய விரும்பவர்கள் செய்யவும்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
எளிய வினா
குர்பானி என்றால் என்ன பொருள் ,
பக்ரித் என்றால் என்ன பொருள் ? ,
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 2 துல்ஹஜ் (12) ,1444
21062023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment