திருமறை குரான் 7:72
09062023
“---------அவர்கள் அனைவரயும் நாம் வேருடன் களைந்தோம் ----“
குரான் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக
7:72. இறுதியில் நமது அருளைக்கொண்டு ஹூதையும் அவருடைய தோழர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, மேலும், நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் நாம் வேருடன் களைந்தோம்.
விளக்கம் :
ஏமன் நாட்டின் அருகில் உள்ள பகுதியில் வசித்த ஆது எனும் கூட்டத்தினர்கள் அவர்களின் சமுதாயத்தில் இருந்து அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் ஹுத் அவர்களை பொய்யர் என கூறினர். பூமியில் அதிகமாக குழப்பங்களை விளைவித்து அடக்குமுறை செய்தனர். எந்த பயனும் இன்றி வீணான முறையில் உயரமான இடங்களில் நினைவு சின்னங்கள் எழுப்பினர் இதனை குறித்து நபியவர்கள் இவைகள் எதுவும் செய்யப்போவதில்லை அல்லாஹ்வை வணங்குவீராக என்று அறிவுறுத்தினார் அதற்கு அவர்கள் மறுக்கவே, அந்த சமுதாயத்திடம் அல்லாஹ்வின் தண்டனையும் சினமும் ஏற்பட்டு அதனை தொடர்ந்து கடும் சூறாவளி பேரிடிக்கு ஆட்பட்டு இறை மறுப்பாளர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்
சூரா 7
வசனம் 59 முதல் பல வழி தவறிய சமுதாயங்கள் -- நூஹ் கூட்டம் முதல் ஃபிர்அவ்ன் கூட்டம் வரை இறைவனின் சினத்துக்கு ஆளாகி அழிக்கப்பட்ட வரலாறு சொல்லப்படுகிறது
எல்லா சமுதாயங்களும் இறைவன் எச்சரிக்கை செய்ய அனுப்பிய நபிமார்களை பொய்யர் , பித்தன் என்று பலவாறாக தூற்றின
இந்த வரலாறுகள் மனித குலத்துக்கு எச்சரிக்கையாக பல இடங்களில் வருகின்றன
இது பற்றி பின்னொரு நாள் சற்று விரிவாகப் பார்ப்போம் இறைவன் நாடினால்
சரியான விடை எழுதி வாழ்த்து
பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
19 அல்காயிதா (11) 1444
09062023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment