பிறை 7 துல்ஹஜ் (12) ,1444 நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு இறைவன் அருளிய சிறப்புகள்
26062023 திங்கள் புனித ஹஜ் மாதம் - இன்று பிறை 7
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
அந்த சிறப்புகள் எல்லாம் நபி இப்ராஹீம் அலை அவர்களை மையமாகக் கொண்டே இறைவன் வழங்கியிருக்கிறான்
அந்த மாமனிதருக்கு இறைவன் அருளிய சிறப்புகள் பற்றி இன்று பார்ப்போம்
குரான் வசனங்களுக்குப் போகுமுன் நமக்கு நன்கு தெரிந்த சில சிறப்புகளை நினைவு படுத்திப் பார்ப்போம்
1ஒவ்வொரு தொழுகையிலும் தருதே இப்ராஹீம் துவாவில்
அவரது பெயர் சிறப்பிக்கப் படுகிறது
தருதே இப்ராஹீம்
“இறைவா, இப்ராஹீம் , இப்ராஹிமின் குடும்பத்தார் மீது உனது அருட்கொடையை பொழிந்தது போல முஹம்மது மீதும், முஹம்மதுவின் குடும்பத்தினர் மீதும் உனது அருட்கொடையை வழங்குவாயாக, நீ போற்றத்தக்கவன், மகத்தானவன்.
இறைவா , இப்ராஹீமையும் இப்ராஹிமின் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்தது போல் முஹம்மதுவையும் முஹம்மதுவின் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாயாக “
2 இரண்டு திருநாட்களில் ஒன்றான தியாகத் திருநாள் , அதன் தொடர்புடைய அமல்கள் எல்லாம் –புனித ஹஜ்
தவாப், ஸயீ,குர்பானி , போன்றவை அவரையும் அவர் குடும்பத்தாரையும் நினைவூட்டுகின்றன
3 இப்ராஹீம் என்ற பெயரில் உள்ள குர்ரான் சுராஹ் 14ல்
இந்த நபி பற்றி பல வசனங்கள் வருகின்றன்
4 புனித காபாவைப் புதுப்பிக்கும் பணியை இறைவன் அருளால் நபி இப்ராஹீமுக்கும் அவர் மகனுக்கும் கொடுத்தான்
அப்போது நபி இப்ராஹீம் அலை நின்று பணியாற்றிய இடத்தில் அவர் காலடிச் சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது
அந்த இடம் புனித காபாவின் ஒரு பகுதியாக இருக்கிறது
மகாமே இப்ராஹீ ம் எனப்படும் அந்த சதுர வடிவிலான இடத்தில் தொழுவது சிறப்பு
“--------------நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள்----------“(குரான் 2:125 )
. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; ----------------(3:97)
தொடர்ந்து நபி இப்ராஹீம் அலை பற்றிய இறை வசனங்கள் -----
முன்பே குறிப்பிட்டது போல் இந்த நபியின் பெயர் குர்ஆனில் 69 இடங்களில் வருகிறது
அதில் சிலவற்றைப்ப் பார்ப்போம்
“ இவ்வாறே நாம் இப்ராஹீமுக்கு வானங்கள் , பூமியின் ஆட்சியைக் காட்டினோம், அவர் உறுதியானவர்களில் ஒருவராக இருப்பதற்காக ” [6:75].
மேலும், நல்லொழுக்கமுள்ளவராகவும், தனது விருப்பத்தை இறைவனிடம் சமர்ப்பித்து, ஹனிஃப் இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுபவரை விட சிறந்த மார்க்கம் யாரிடம் உள்ளது?
மேலும் இறைவன் இப்ராஹிமை ஒரு அர்ப்பணிப்புள்ள நண்பனாக எடுத்துக் கொண்டான் [4:125
மேலும் அவருடைய இறைவன் இப்ராஹீமைச் சில வார்த்தைகளால் சோதித்து, அவற்றை நிறைவேற்றியபோது, "நான் உன்னை மனிதகுலத்தின் இமாமாக ஆக்குகிறேன்" என்று கூறினான்
. அவர், “மற்றும் என் சந்ததியில் இருந்து வந்தவர்களா?” என்றார்.
(இறைவன் ) கூறினான், "என் உறுதிமொழி அநியாயக்காரர்களுக்கு நீட்டிக்கப்படாது" [2:124].
உண்மையில் இப்ராஹிம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்த ஒரு தேசமாக, சமுதாயமாகச இருந்தார், [16:120)
ஆபிரகாமிலும் அவருடன் இருப்பவர்களிடமும் (பின்பற்றுவதற்கு) ஒரு சிறந்த முன்மாதிரி உங்களுக்கு உள்ளது [60:4] 1
14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத வறண்ட (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”
இது இறைவன் ஆணைப்படி இப்ராகிம் அலை அவர்கள் தன துணைவி ஹாஜரை யும் குழந்தை இஸ்மாயிலையும் வறண்ட மக்கா பகுதியில் விட்டுச் சென்றபோது இறைவனிடம் வேண்டியது
இந்த வேண்டு கோளுக்கு செவி சாய்த்த இறைவன் அருளால் அன்றிலிருந்து இன்று வரைபல்லாயிரக்கான ஆண்டுகளாக ஜம் ஜம் ஊற்றைத் தவிர வேறு எந்த நீர் ஆதாரமும் இல்லாத அந்த பூமியில் வசிப்போருக்கும்
ஆண்டு தோறும் லட்சக் கணக்கில் வரும் புனிதப் பயணிகளுக்கும் உணவும் கனிகளும் குறைவில்லாமல் கிடைத்து வருகின்றன
நேற்றைய வினா
இப்ராஹீம் அலை அவர்களின் நபி பரம்பரை எது வரை ---யார் வரை தொடர்கிறது ?
இது வரை சரியான விடை வரவில்லை
எனவே வினாவை இன்னும் சற்றுத் தெளிவாக்குகிறேன்
நபி அ வின் மகன் நபி ஆ
நபி ஆ வின் மகன் நபி இ
நபி இ யின் மகன் நபி ஈ
நபி ஈ யின் மகன் நபி உ
என்று தொடர்ந்து இடை வெளி இல்லாமல் நபி பரம்பரை யார் வரை வருகிறது ?
இது பற்றி நான் பல முறை பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன் அதனால் தான் வினாவை சுருக்கமாகப் போட்டேன்
விளக்கத்துக்குப் பின் நிறைய சரியான விடைகளை எதிர் பார்க்கிறேன்
விடை
நபி இப்ராஹீம் மகன் நபி இஸ்ஹாக்
நபி இஸ்ஹாக் மகன் நபி யஅகூப்
நபி யஅகூப் மகன் நபி யூஸுஃப்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
கத்தீப் மாமூனா லெப்பை முதல் சரியான விடை
முயற்சித்த சகோ தல்லத் ஷர்மதாவுக்கு நன்றி
இன்றைய வினா
இறைவன் நபி முகமது ஸல் அவர்களுக்கு இப்ராஹிமின் வழியில் நடக்கக் கட்டளை இடுகிறான் என்பது போல் பொருள் வரும்
இறை வசனம்எது ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 7 துல்ஹஜ் (12) ,1444
26 062023 திங்கள்
சர்புதீன் பீ
ஜோதி
இப்றாகீம் நபி (சல்)
அவர்கள் இறைவன்
கட்டளைப்படி புனித
கஃபாவை புதுப்பிக்கும் பணியில் நின்ற
போது, அவரின்
காலடிச் சுவடுகள்
பதிந்த இடம்,
தொழுகைக்கேற்ற புனித இடமாக குறிப்பிடுவது,
கொஞ்சம் நெருடுகிறதே....
அதிகப் பிரசங்கித் தனமாக இதைக்
கேட்கவில்லை.
சந்தேகம் தெரிந்து
கொள்ளும் ஆர்வத்தினால் தான்
கேட்கிறேன்..
ஓரளவு தெளிவான
விளக்கத்தை நான் புரிந்து கொண்டு அதன்பின் உங்களுக்கு விளக்க எண்ணியதால்தான் உடனே பதில்
சொல்ல வில்லை
கீழே
உள்ளது வசனம் 2:125 இன்னொரு மொழி பெயர்ப்பு
“(மக்காவில் இப்றாஹீம் கட்டிய ‘கஅபா'
என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம்.
(அதில்) இப்றாஹீம் நின்ற இடத்தை
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள்.
‘‘(ஹஜ்ஜூ
செய்ய அங்கு வந்து) அதை சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும்,
குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு)பவர்களுக்கும் எனது அந்த வீட்டை
சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்'' என்று இப்றாஹீமிடத்திலும்
இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கிறோம்.”
இதைப் படிக்கும்போது
எனக்குத் தோன்றுவது :
அப்பொழுது
காபா இன்று உள்ளது போல் மிகப் பெரிய அமைப்பாக
இருந்திருக்காது
இருக்கும்
சிறிய இடத்தில் தொழும் இடத்தை சுட்டிக்காட்டுவதாகா எடுத்துக்கொள்ளலாம்
(இது முழுக்க
முழுக்க என் மனதில் பட்ட விளக்கம்
தவறாக இருந்தால்
இறைவன் மணிப்பானக் )
மேலும் இந்தகல்லும்
சொர்கத்தின் கல் என்று சொல்லப்படும் அஸ்வத் கல்லும் சுவர்க்கத்தில் இருந்து இறைவன்
அனுப்பி வைத்தவை
நபி இப்ராகிம்
காபாவைக் கட்டும் பணியை நிறைவு செய்தவுடன் இந்த இடத்தில் இரண்டு ரக்கத் தொழுதார்கள்
அதைக் குறிக்கும்
விதமாக தவாப்f சுற்றும்போது ஏழாவது சுற்றுக்குப்பின் இங்கு தொழுவது ஒரு மரபாகப் பினற்றப்படுகிறது
மற்றபடி அங்கு தொழுவது கட்டாயமில்லை
இப்போது உள்ள
கூட்ட நெரிசலில் அந்தக் கல்லை நெருங்குவதோ அங்கு தொழுவதோ பலரும் நினைக்க முடியாத ஓன்று
இறைவன் அனுப்பிய
கல் என்பதுதான் அதன் சிறப்பு என்பது என் கருத்து
(அரபுமொழி
தமிழ் இரண்டிலும் முழுமையான தேர்ச்சி பெற்றால்தான் இறைவனின் கருத்துக்களை ஓரளவு சரியாக்
தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியும்
எனக்குத் தெரிந்து
அப்படி கற்றுத் தெளிந்தவர்கள் மிக மிக அரிது .)
சிந்திக்க
வைத்த நல்ல கேள்விக்கு நன்றி
என் விளக்கத்தில்
பிழை இருந்தால் இறைவன் மன்னிப்பானாக
16062024 ஞாயிறு
No comments:
Post a Comment