Wednesday, 21 June 2023

பிறை 3 துல்ஹஜ் (12) ,1444 குர்பானி ,பக்ரீத்

 



பிறை 3 துல்ஹஜ் (12) ,1444

22062023 வியாழன்
புனித ஹஜ் மாதம் - இன்று பிறை 3
இஸ்லாமிய ஆண்டை நிறைவு செய்யும் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்பானவை
சென்ற சில ஆண்டுகள் போல இந்த ஆண்டும் பத்து நாட்களும் இறைவன் அருளால் மற்ற பதிவுகளைத் தவிர்த்து புனித ஹஜ் பயணம் , புனித காபா நபி இப்ராஹீம் அவர்கள் பற்றி நேற்று எழுதத எண்ணி கடந்த இரு நாட்களும் புனிதப் பயணம் பற்றி சில நடை முறைக் குறிப்புகளைப் பார்த்தோம்
நேற்றைய பதிவின் நிறைவாக இரண்டு மிக எளிய வினாக்கள்
எல்லோருக்கும் தெரிந்த, பெரும்பாலோர் பொருள் அறிந்த சொற்கள்
குர்பானி – தியாகம்
பக்ரீத் – ஆட்டுத் திருநாள்
முதல் சொல் ஈதுல் அல்ஹா எனும் தியாகத் திரு நாளை நினைவூட்டுகிறது
பக்ரீத் ? ஆடு – ஆட்டுக் கறி – கறி பிரியாணி – பாய் வீட்டு பிரியாணி
சூட்டுக்கறி நோன்பு என்ற பெயரும் பக்ரீத் என்ற சொல்லும் சேர்ந்து இது ஒரு பிரயாணித் திருநாள் , உணவுத் திருவிழா என்ற எண்ணத்தை – ஒரு பொய்யான தோற்றத்தை – ஏற்படுதுகின்றன
இதன் பக்க விளைவு
“ பலி கொடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
மனம் ஒப்பவில்லை
ஏற்றுக் கொள்ள முடியவில்லை “
என்று சொல்லித் திரிவது
இது அறியாமை அல்ல புரியாமை
நபி இப்ராகிம் அலை அவர்களின் தியாகம்,
யாரும் நினைத்துப் பார்க்கக் கூட அஞ்சும் மாபெரும் தியாகம்
இதைப் புரிந்து கொண்டால் உள்ளம் தெளிவாகி விடும் , புரியாமை அகன்று விடும்
தள்ளாத வயதில் , முதுமையில், இறை அருளால் , இறை அற்புதமாக ஆண் குழந்தை பிறக்கிறது நபி இப்ராகிம் அலை அவர்களுக்கு
இஸ்மாயில் என்ற அந்தக் குழந்தை சிறுவனாக வளர்ந்து தந்தைக்கு உதவியாக அவருடன் செல்லும் பருவத்தில் இறைவன் நபியின் கனவில் குழந்தையை பலி கொடுக்கக் கட்டளை இடுகிறான்
சற்றும் தயங்கவில்லை நபி , அவருடைய தக்வா ,இறை அச்சம் இறை நம்பிக்கை அப்படி implicit faith என்று சொல்வார்கள்
இந்த 100% நம்பிக்கைதான் நபி அவர்கள் இறைவனே நட்புக் கொள்ள விரும்பும் ஒரு உயர் நிலையை அடையக் காரணமானது
இருந்தாலும் இன்னொரு உயிருக்கு இதில் தொடர்பு இருக்கிறது
மனித நேயம் நபி தன் மகனின் கருத்தைக் கேட்கிறார்
நபியின் மகன் பிற்காலத்தில் நபியானவர் “ இறைவன் கட்டளை என்றால் உடனே நிறைவேற்றுங்கள் “ என்று தந்தையிடம் சொல்கிறார்
இறை வசனங்களைப் பார்ப்போம்
37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (
மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். இறைவன் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகவே காண்பீர்கள்.”
ۚ‏
37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
ۙ‏
37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
ۖ‏
எனக்குத் தெரிந்ததை, உணர்ந்ததை , பிறர் சொல்லக் கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
பிழைகள் இருந்தால் ஏக இறைவன் மன்னிப்பான்
இதுவரை ஹஜ் செய்யாதவர்கள் விரைவில் செய்யவும், செய்தவர்கள் , திரும்ப செய்ய விரும்பவர்கள் செய்யவும்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
நேற்றைய வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
அஷ்ரப் ஹமீதா – முதல் சரியான விடை
ஷர்மதா
இன்றைய வினா
குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையா இல்லையா ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
பிறை 3 துல்ஹஜ் (12) ,1444
22 062023 வியாழன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment