Wednesday, 1 August 2018

உடன் பிறப்புகளின் நினைவலைகள் ஜோதி 1




ஜோதி 1

[17:14, 7/24/2018] Jothy Liakath: தம்பி, அஸ்ஸலாமு அலைக்கம்.ஏ தோ பெரிய பொருப்பு கொடுத்து போலிருக்கிறது.. ஏதோ தோன்றியதை எழுதியது போக ஒரு வட்டத்சக்குள் எழுதுவதென்பது கொஞ்சம் மலைப் பாகனிருக்கிறது. ஏதோ முடிந்ததை எழுதுகிறேன். சரியாகப் பட்டால் C பாடு. இல்லாவிட்டால் வருத்தமில்ல.
[17:14, 7/24/2018] Jothy Liakath: ெ மகராஜூம் , நானும் பிறந்தது பரமக்குடியாம். ஆற்றங்கரை மணல், ப்ளூன் , அத்தம்மா, என்று புகை மூட்டம் போல் பெரிய குளம் பற்றி நினைவு இருக்கிறது. நீ லைப் பாய் சோப்பைக் கடித்து விட்டு, டாக்டர் வந்து வீடு பரபரப்பாக இந்ததும் ஞாபகம் இருக்கிறது. உறவினர் களுடன், கொடைக்கானல் பயணம்,கும்பக்கரை அருவி குளியல் என்பவை மற்றவர் கள் சொல்ல சொல்ல ஞாபகம் வந்தது போல் காட்சி Cதான்றும். ஒரு குட்டி பசு மாடு இ ருந்தது, அதன் பாலின் ருசி பற்றி நூர் அடிக்கடி கூறும் . ஆள் வைத்து, அத்தா கட்லட் செய்ய ஏற்பாடு செய்யுமாம். அதற்கு நூர் தான் மேற்பார்வை பார்க்குமாம்.முத்து, ஜென்னத், இவர்களை விடவும் நூரின் நினைவுகள் அதிகம் தான். அத்தா, அம்மாவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நினைக்காதே. அப் புறம், அப்புறம் தான் அம்மா , அத்தாவின் ஞாப கங்கள் பதிவாகியுள்ளன.அத்தா, பேண்ட், ஷர்ட், தலைக்கு ஹேட் மாட்டி, கால் பேண்ட்டில் "கிளிப், மதிரி ஒரு வளையம் மாட்டி, மோட்டர் பைக்கில் போனதும் ஞாபகம் வருகிறது. புர், புர்ரென்ற சத்தத்துடன், புகை கக்கிக் கொண்டு அத்தா ஆபீசிற்கு போவது பார்க்க ரொம்ப த்ரில்லாக இருக்கும். இன்னும் கூட யோசித்தால் ஞாபகம் வரும் போல் தோன்றுகிறது. இன்ஷா அல்லா, அடுத்தவூர் பற்றி அப்புறம்.
[17:14, 7/24/2018] Jothy Liakath: இது சரியாக இல்லையென்றால் தயங்காமல் எழுதி விடு.
[17:43, 7/24/2018] Sherfuddin Peermohamed: உங்கள் கருத்துக்களை எண்ண ஓட்டங்களை எழுதும்போது சரி தவறு எல்லாம் கிடையாது.
நன்றாக இருக்கிறது
[17:22, 7/25/2018] Jothy Liakath: அஸ்ஸலாமு அலைக் கம். பெரிய குளத்திலிரந்து அத்தா அடுத்ததாக மாற்றலாகிச் சென்ற ஊர் மேட்டுப்பாளையம் என்று நினைக்கிறேன். நீ பிறந்தது பெரியகுளம் என்று நிச்சியமாகத் தெரியும். சுராஜ் பிறந்த ஊர், பெரியகுளமா? மேட்டுப்பாளையமா? என்று சரியாகத் தெரியவில்லை.மேட்டுப்பாளையத்தில் நிறைய விதம், விதமான பழங்கள் வரும். உரு ளைக் கிழங்கை அடுப்பில் போட்டு சுட்டு அம்மா தரும். குண்டாக சுராஜ் உட்கார்ந்து கொண்டு நிறைய சாப் பிடும் . சிவப்பு , ரோஸ் கலரில் குச்சி ஐஸ் சாப்பிடுவோம். வாய், கையெல்லாம் கலராகி ரொம்ப சந்தோஷமாயிருக்கும்.அல்வளவு அபூர்வமானதாக இருக்கும். | அங்கு நான் ஒரு சி லேட் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போன ஞாபகம் லேசாக இருக்கிது. பெண் கள் உயர்நிலைப் பள்ளி அத்தாதான் ஆரம்பத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜயகுமாரி எனும் நடிகை, நூர், முத் தோடு படித்ததாகக் கேள்வி. மாதவி எனும் ஒரு மளையாளப் பெண்மணி நம் வீட்டிற்கு வரும். நர்சா, டீச்சரா என்று தெரியவில்லை. வெள்ளை, வெளே என்று, கலராக, நீளமுடியுடன் ரொம்ப அழகாக இ ருக்கும். அத்தா குளித்து, ஈரத்துண்டுடன் வவரம் போது, அடிக்கடி காலைப்பிடித்துக் கொள்வதும் ஞாபகம் வருகிறது. . குழந்தையாக இ ருக்கும் போது, அத்தாவின் வயிற்றில் சதா படுத்துக் கொள்வேனாம். முத்தக்கா அடிக்கடி சொல்லும். நம் பக்கத்து வீட்டில் முத்துலட்சுமி என்ற பெண்ணின் குடும்பம் நம்முடன் ரொம்ப நட்பாக இருந்தது. நாம் கோயம்புத்தூரில் இருக்கும் போது ஒரு தடவை அவர்கள் வீட்டிற்கு சென்றோம். இன்றைய 'பிளாக் தண்டர், என்ற பழத்தோட்டத்திற்கு அடிக்கடி செல்வோம். சினிமா க்களில் அடிக்கடி பார்க்கும், பாறைமேல் தண்ணீர்,தண்ணீராக ஓடும் இடமும் பார்த்த ஞாபகம் வருகிறது. அது எந்த இடம் என்று தெரியவில்லை. ஊட்டிக்கு காரில் ஒர தடவை போய், நூர், முத்தைத் தவிர எல்வோரு மேவாந்தி எடுத்த ஞாபகம். அம்மா ஒரு தடவை எல் லோர்க்கும் ஏதோ கொடுக்கும் போது, சுரா, வயிற்றை நீட்டி போடச்சொல்ல ஒரே சிரிப்பா கப் போனது. இதற்கு மேல் அந்த ஊரைப் பற்றி ஞாபகம் இல்லை.இன்ஷா அல்லா அடுத்த ஊர் பற்றி அப்புறம்.
[17:22, 7/25/2018] Jothy Liakath: அத்தா குளித்து விட்டு, ஈரத்துண்டுடன் வரும் போது, நான் காலைக் கட்டிக் கொண்டது ஞாபகம் வருகிறது.
[
.
[17:43, 7/31/2018] Jothy Liakath: மேட்டுப்பாளையத்திற்கு அடுத்ததாக சென்றது மாயவரம் எனும் பழமை வாய்ந்த ஊர். பழைய பெரிய வீடு ஞாபகம் இருக்கிற து. அங்கு அத்தாவிற்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போகும். டாக்டர்கள் வீட்டிற்கு வருவார்கள். அத்தா ஒரு தடவை கூட ஆல்பத்திரிக்கு சென்ற நினைவில்லை. அத்தாவிற்கு முடியவில்லை என்றால் , வீடே சோகமாக என்னவோ போலி ருக்கும். பக்கத்தில் ஒரு வாத்தியார் வீடு இருந்தது. அவர் மனைவிக்கு காது சரியாகக் கேட்காது. வேறு ஏதோ ஊரிலிருந்து அவர்கள் வீட்டிற்கு போனபோது, அந்தம்மாள் , இறந்து விட, திருமணமாகாத அவர்கள் மகள் தான் விதம், விதமாக ஏகப்பட்ட ஐட்டங்கள் சமைத்து வைத்திருந்தது. அது இந்துக்களின் சிறந்த பண்பாடு. அந்த வாத்தியாரும், அந்தப் பெண்ணும் மும்தாஜ் திருமணத்திற்கு காரைக்குடிக்கு வந்திரந்தார்கள். வீட்டிற்கு எதிரில் பெரிய குளம் ஒன்று இருக்கும். கரை ஓரத்தில் ஒரு பெரிய மரமும் இ ருக்கம். மரங்கொத்தி, மீன்கொத்தி, குயில், என்று நிறைய பறவைகள் பறக்கும்.முத்துதலமையில் அங்கு குளிக்கச் செல் வோம்.முத்து ரொம்ப நன்றாக நீச்சலடிக்கும் .. நூர், முத்து ஹைஸ்கூலில் படித்த ஞாபகம். மற்றபடி ஜென்னத், மும்தாஜ், நீ, சுரா பற்றிய நினைவுகள் எல்லாம் சிறிதும் இல்லை. மெக ராஜும், நானும் ஒரு எலிமென்ட்டரி பள்ளிக்குப் ப ஒாகம்.
[17:43, 7/31/2018] Jothy Liakath: மெக ராஜூம் நானும் ஒரு எலிமெண்டரி ஸ்கூலிற்குப் போனதாக ஞாபகம். அ, ஆ .விற்கு பிறகு, , , ச், ஞ் செல்லாம் ஒரு வாத்தியார் சொல்லிக் கொடுப்பார். புரிய வே புரியாது. நமக்கெல்லாம், படிப்பு வராது, நூர் I முத்து இவர்கள் தான் படிப்பிற்கு ஏற்றவர்கள் என்று முடிவு செய்து கொள்வேன். பள்ளியின் பின்புறத்தில் ஒரு பெரிய இலந்தை மரம் இருக்கும். நிறைய பழங்கள் தி எடுத்து வந்து நூருக்கு மட்டும் கொடுப்பேன். வீட்டின் பின்பு றம் பெரியதோட்ட மிருக்கும். நூர் அங்கு உட்கார்ந்து பாட்டு பாடிக் கொண்டேயிருக்கும். பாட்டு வகுப்பில் சேர்ந்திருந்தது போலிருக்கிறது. அம்மாவிற்கு பாடுவது பிடிக்காது. அத்தாதான் அதுபாட்டுக்கு பாடட்டும் என்று சப்போர்ட் பண்ணும். மற்றபடி அந்த ஊரைப் பற்றி பெரிதாக ஞாபகம் இல்லை. அடுத்த ஊர் பற்றி இன்ஷா அல்லா, அப்புறம் பார்ப்போம்.

No comments:

Post a Comment