செல்விருந்தோம்பி......
“அடுத்து வருபவது யார் ? அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள் “
இதுதான் மிகப்பெரும்பாலான வங்கி வாடிகையாளர்கள் சொல்வது நான் என் இட
மாறுதல் பற்றிச் சொன்னால்.
உங்களுக்கு எந்த ஊருக்கு மாறுதல் என்றகூட விசாரிக்க மாட்டார்கள்
இந்த ஒரு இயல்பு நிலைக்கு மாறாக இருந்தது அன்று வந்த தொலைபேசி அழைப்பு
.
ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஓடி விட்டன நான் காரைக்கால் வங்கிக்கிளையில்
பணியாற்றி .
அந்தக்கிளையின் மிகப்பபெரிய வாடிக்கையாளரான ஜனாப் நசீம். மிகப்பெரிய
செல்வந்தர் .பிரான்சு நாட்டில் பேரங்காடி உரிமையாளர், அந்தக் கட்டிடத்திற்கும்
உரிமையாளர் . மிக எளிதாக, எளிமையாக பழகுபவர் .
பணி நிமித்தம் அவருடன்
பயணிக்கும்போதெல்லாம் அவரே மகிழுந்து ஓட்டி வருவார்
அப்டியே தன் வரலாறு முழுதும் சுவைபட மறைக்காமல் சொல்வார்
அவர்தான் அன்று தொலைபேசியில் அழைத்தவர் ..தன மகனுக்கு கோவையில்
திருமணம் .அடுத்த சில நாட்களில் பாண்டியில் வரவேற்பு . இரண்டிலும் குடும்பத்துடன்
கலந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி வலியுறுத்திச்
சொன்னார்
சரி கட்செவியில் அழைப்பு அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன் .அடுத்த
சில நாட்களில் அவருடைய செயலாளர் ஒருவரும், பணியாளர் ஒருவரும் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு அழைப்பு விடுத்து, அஞ்சலில் அழைப்பு அனுப்ப என் முகவரி கேட்டார்கள்
அடுத்த சில நாட்களில் விரைவு அஞ்சலில் அழகான அழைப்பு வந்தது
இவ்வளவு முறையாக அழைப்பு விடுத்ததால் குடும்பம் முழுவதுமாய்
புதுச்சேரியில் நடந்த வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டோம்
சரியான கூட்டம் . புதுச்சேரி அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் உயர்
அலுவலர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் அதோடு காரைக்கால் மக்கள், வெளிநாட்டவர்
என கூட்டம் அலை மோதியது
அவ்வளவு கூட்டத்திலும் நசீம்
அவர்களும் அவரது பணியாளர்கள் குழுவும் மண்டப நுழைவு வாயிலில் நின்று வந்தவர்களை தனித்தனியே
வரவேற்ற விதம் அருமை
ஒரு சால்வையை மடித்து என்
.கழுத்தில் துண்டு போல் போட்டு விட்டார்கள்
அழகான மணமக்கள் நேர்த்தியான
ஒப்பனையில் இன்னும் அழகாகத் தெரிந்தார்கள் .
மேடையில் ஏறி மணமக்களை
வாழ்த்திவிட்டு இறங்கியவுடன் நமக்கு ஒரு
பரிசுப்பை காத்திருகிறது . பைக்குள் விலை உயர்ந்த இனிப்பு வகைகள் சில. ஒரு நல்ல
பயனுள்ள பாத்திரம்
மணமக்களை வாழ்த்தி , பரிசும் வாங்கியாகிவிட்டது .இனி சாப்பிடப் போக
வேண்டியதுதானே .
சாப்பாட்டுக்கூடம் எங்கேயென்று கேட்க வேண்டிய தேவையே இல்லை . அந்த
அளவுக்கு உணவுப்பண்டங்களின் மணம் மூக்கைத்
துளைத்தது குறிப்பாக மீன் பொறிக்கும் மணம். அந்த மணத்தின் வழியே மனதை
செலுத்திப்போனால்-
காட்சி ,சுவை, மணம் மனம் என
எல்லாவற்றையும் கிறங்க வைக்கும் ஒரு மிகப் பெரிய உணவுத் திருவிழா .அதோடு
செவிக்கும் இசை விருந்து
பெரிய திறந்த வெளியில் விசாலமான துணிப்பந்தல்கள்(சாமியானா) ,
உட்கார்ந்து சாப்பிட ஏதுவாக நிறைய இருக்கைகள் , மேசைகள் ,எண்ணிலடங்காத வகை வகையான உணவு வகைகள் – சைவம்
அசைவம் இரண்டிலும்
கறி, மீன், கோழி, வான்கோழி, என அசைவத்தில் என்னென்ன உண்டோ எல்லாவற்றிலும்
பிரியாணி, பொரியல் குழம்பு என வகை வகையான உணவுகள்
அதே போல் சைவத்திலும் கத்தரிகாய் முதல் காலி பிளவர் வரை , சாம்பார்,
பருப்பு, ரசம், கூட்டு பொறியல் என அடுக்கிகொண்டே போகலாம் இனிப்பில் பல வகைகள,,
சப்பாத்தி, பரோட்டா, தோசை பல வகை சட்னிகள்
சாப்பிட்டு முடிந்தவுடன் சாப்பிட பல வகை பனிக் கூழ்கள், சாக்கலேட்
ஊற்று, பீடா வகைகள்
பசியைத் தூண்ட முதலில் கொடுக்கும் சூப்பே ஒரு முழு உணவு போல் கறி
எலும்போடு நல்ல சுவையாக இருந்தது
இது வரை கேள்விப்பட்டு ஆனால் பார்க்காத சமைத்த முழு ஆட்டையும் அங்கே
பார்த்தேன் . எல்லோரும் சுவைக்கும்படி பொதுவாக வைத்து அருகில் கத்தி ,முள்கரண்டி,
கரண்டி எல்லாம் வைத்திருந்தார்கள் ஆனால்
என்னமோ தெரியவில்லை பெரும்பாலும் யாரும் அதைச் சுவைத்துப் பார்க்க முன் வரவில்லை –
நான் உட்பட .
சுருக்கமாகச் சொன்னால் நன்கு ரசித்து உண்ணக் கூடிய திங்கர்கள் அரை
நாளை பொழுதை அங்கு இனிமையாகக் கழித்துக்
களிக்கலாம்
.
நான் அப்படி எல்லாம் சாப்பிடவில்லை . இது போன்ற விருந்துகளில் நான்
பெரும்பாலும் சோறு, பிரியாணி இதெல்லாம் தவிர்த்து விடுவேன், எனக்குப்பிடித்த சில
பக்க உணவுகளை எடுத்துக்கொண்டு, அதற்கு துணை உணவாக ஒன்றிரண்டு சப்பாத்திகள்
எடுத்துக்கொள்வேன் .நல்ல இனிப்புகளை சுவைத்து விட்டு பனிக்கூழ் சாப்பிட இடம்
வைத்துக்கொள்வேன் . பீடாவை விடமாட்டேன்
ஒரு மாலைப்பொழுது இனிமையாகக் கழிந்த முழுமை பெற்ற உணர்வோடு வீடு
திரும்பினோம்
அடுத்த சில நாட்களில் சென்னை நீலாங்கரை ப்ளு லாகூனில் ஒரு மதிய விருந்து
வாணியம்பாடி ஆயுள் காப்பிட்டு நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாக
இருந்து இப்போது சென்னையில் இருக்கும் இனிய நண்பர் ஜனாப் அயாஸ் பாஷா – என்
மகனுக்கு வேலை கிடைப்பதில் பெரிதும் உதவி செய்தவர் – அவருடைய மகன் திருமண வரவேற்பு
விருந்து
தமிழ் அறிஞர் கவிக்கோ அவர்களின் மருமகனாவார் அயாஸ்.
கவிக்கோவுக்கு என ஒரு கூட்டம், அயாசின் உறவினர்கள், நண்பர்கள்
கூட்டம், மணமகன் மருத்துவராகப் பணியாற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கூட்டம்,
மணமகளின் தந்தை அசோக் லேய்லான்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரி – அந்த நிறுவன ஊழியர்
கூட்டம், என கூட்டம் அலைமோதியது
தமிழறிஞர் ஒருவர் நீண்ட உரையாற்றிகொண்டிருந்தார் . அடுத்து வந்த பெண் பேச்சாளர்
யாரும் பேச்சைக் கேட்கும் மன நிலையில் இல்லை என்பதை உணர்ந்து , சொல்லிக்காண்பித்து
மிகச் சுருக்கமாக தன் உரையை நிறைவு செய்து விட்டார்
மணமக்களை வாழ்த்தி விட்டு,உணவுக்கூடத்துக்குப் போனோம்..அங்கும் சரியான
கூட்டம் . இருந்தாலும் எளிதில் இடம் கிடைத்து அமர்ந்து விட்டோம்
தட்டு நிறைய சூடான சுவையான பக்குவமான வாணியம்பாடி பிரியாணி, கோழிப்
பொறியல் ஒரு துண்டு கால் கிலோ இருக்கும், அது போக தட்டு கொள்ளாமல் ஒரு பெரிய
ரொட்டித்துண்டு, அதன் மேல் இனிப்புச்சாறு, வெங்காயம் ,கத்தரிகாய் என பக்க உணவுகள்
.இதெல்லாம் போதாதென்று பெரிய துண்டு மீன் வறுவல்
மனதார வயிறார சாப்பிட்டு வெளியே வந்தால் வழக்கமான பனிக்கூழ். பீடாவோடு
சிறப்பாக சூடான சுவையான தேநீர் வேறு
விழாவுக்கு வந்தவர்களுக்கு மணவீட்டார் கொடுத்து பரிசை சாப்பிடும்போதே
அருகில் வைத்து விட்டது இன்னுமொரு சிறப்பு .இதனால் பரிசை வாங்கும்போது உண்டாகும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது .ஒரு
அழகிய அட்டைப்பெட்டியில் நயமான இனிப்பு.
மீண்டும் ஒரு நிறைவான மனதுடன் வீடு திரும்பினோம்
வாணியம்பாடி என்றவுடன் இன்னும் சில விருந்துகள் நினைவில் வருகின்றன
புகழ்பெற்ற மருத்துவர் அக்பர் கவுசர் வீட்டுத் திருமணம் .
எங்கள்
வீட்டுக்கு எதிரில்தான் அக்பர் மருத்துவமனை. நல்ல நண்பர், வங்கியின் நல்ல
வாடிக்கையாளர், நல்ல அண்டைவீட்டுக்காரர் மிக எளிமையாகப் பழகுபவர் மருத்துவர்
திருமணம் வாணியம்பாடி வழக்கப்படி பள்ளிவாசலில் நடைபெற்றது .பின்னர்
மதிய உணவுக்குப் போனோம்.
அங்கிருந்த வங்கி நண்பர்கள் சிலர், சார், கொஞ்சம் பொறுங்கள் மந்திரி
வருவார் . எல்லோரும் அக்பர் கவுசரோடு சேர்ந்து சாப்பிடுவோம் என்றார்கள் எந்த
விழாவுக்குப் போனாலும் முதல் பந்தியில் சாப்பிட்டு வந்து விடுவது என்ற என்
வழக்கப்படி சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தேன்
அடுத்த நாள் வங்கிக்கு வந்த நண்பர் சார் நல்ல வேளை நீங்கள்
சாப்பிட்டுவிட்டு போய் விட்டீர்கள் . நாங்கள் வெகு நேரம் காத்திருந்தும் மந்திரி
வரவில்லை .அதில் மருத்துவர் கடுப்பாகி சூழ்நிலையே மாறி விட்டது என்றார்
இன்னொரு உணவுத் திருவிழா வாணியம்பாடியில் – ஒரு வட இந்திய வணிகர் வீட்டுத்
திருமண இரவு விருந்து.. அவர்களுடைய
கல்லூரயின் பரந்த விளயாட்டுத்திடலில் விருந்து .உணவுததிருவிழா கடைகள் போலவே
நூற்றுகணக்கான இடங்களில் பல்சுவை சைவ
உணவுகள்
உள்ளே நுழையும்போதே நெய்யின் மணத்தில் நாசியும் வயிறும் நிறைந்தது
போல் இருந்தது . நெய்யில் செய்யப்பட்ட இனிப்புவகைகளே பத்துக்குமேல் . பீடாவும்
பத்து வகைக்கு மேல்
முழுக்க முழுக்க சைவம் என்பதுதான் ஒரே குறை .
போதும் என்கிற அளவுக்கு அதற்கும் மேல் திகட்டும் அளவுக்கு
விருந்துண்டோம். எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்
இ(க) டைச்செருகல்
அம்பானி இல்லத் திருமண உறுதி செய்யும் விழாவில் விருந்தினர்களுக்கு
உணவு பறக்கும் பலூன்கள் மூலம் பரிமாறப்பட்டதாம் இந்த விழாவுக்கான அழைப்பிதழ்
ஒன்றின் விலை ஒரு லட்சதுக்கு மேலாம் .
இதற்கே இப்படி என்றால் திருமணத்துக்கு எப்படியோ !!!!
மூளைக்கு வேலை
சென்ற வாரம்
உலகில் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் மக்கள் கொண்ட நாடு எது ?
இதுதான் சென்ற வார வினா .
இது வரை யாரும் விடை சொலவில்லை
350 மில்லியன்
ஆங்கிலம் பேசும் மக்களைக்கொண்டு உலகில் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் மக்கள் கொண்ட
நாடு என்ற பெருமையை தட்டிச் செல்வது நம் இந்தியத் திருநாடுதான்
இந்த வார வினா
உலகில் அதிக பொருட்செலவில் நடத்தப்பட்ட திருமணம் எது >
மிக எளிதான வினா
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
FB/B/W
19082018
No comments:
Post a Comment