Wednesday, 22 August 2018

நம் கடலூரை மீட்போமா ! 9






நல்ல செய்திகள் சில அண்மையில் காதில் விழுந்தன
ஓன்று கடலூர் முதுநகர் சந்திப்புக்கும் திருச்சிக்கும் இடையில் இயங்கி வந்த காலை பயணிகள் தொடரி சேவை  விடுதலை நாள் முதல் திருப்பாதிரிப்புலியூர் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கடலூர் புது நகர் வாசிகளுக்கு இது மிகவும் நல்ல செய்தியாகும் குறிப்பாக படியேற முடியாத மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இந்த வண்டி முதுநகர் சந்திப்பில் முதல் நடைமேடையில் நின்றால் அங்கு ஏறும் பயணிகளுக்கும் எளிதாக இருக்கும்
இதில் யாருக்கு வெற்றி என்றெல்லாம் பிரிதுப்பார்க்காமல் ஊருக்கு நல்லது என்ற மனப்பான்மையோடு மகிழ்ச்சி அடைய வேண்டும்
அடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரக அண்மையில்  பொறுப்பேற்றிற்கும் திரு சரவணன் அவர்கள் பற்றி வரும் செய்திகள்
 ஒரு நல்ல தலைமையின் கீழ் மாவட்ட காவல் துறை முழுதும் வெகு சில நாட்களில் நல்ல மாற்றங்கள் பல நிகழ்ந்திருப்பது மிக மிக கொண்டாட வேண்டிய ஒரு செய்தியாகும்
திரு சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .அவர் சேவை தொடரந்து நம் மாவட்டதுக்குக் கிடைக்க இறைவன் அருள் செய்ய வேண்டும்

கடலூரில் புற்றுநோய் தாக்கம் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தேன் .எதிர் பாராத அளவுக்கு அதிகமான விருப்பங்கள் , பகிர்வுகள், கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன
ஒருவர் மட்டும் இந்தச்செய்தி புளுகு, பொய் என்று கருத்து வெளியிட்டிருந்தார்
அவர் கருத்து உண்மையாக இருந்தால் எல்லோருக்குமே மிக மிக மகிழ்ச்சிதான் 
ஆனால் அந்த ஒரே ஒருவரைத்தவிர மற்ற எல்லோரும் செய்தி உண்மை என்று அனுபவம் ,ஆதாரங்களுடன் பதிந்திருந்தார்கள்
மேலும் ஒரு மருத்துவரும் கடலூரில் புற்றுநோய் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்
சொல்வதற்கே நாக்கூசும் கொடிய இந்த நோய் நம்எதிரிக்குக் கூட வரக்கூடது என்பதுதான் நம் எண்ணம்
எனவே இதன் தாக்கத்தை குறைத்து நோயை அறவே ஒழிக்க விரைந்து ஆக்க பூர்வ செயல் திட்டம் தீட்ட வேண்டும்
மாவட்ட ஆட்சியர், மாவட்ட நலவாழ்வு நெறியாளர், மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி
மாநில நலவாழ்வு அமைச்சர், முதல் அமைச்சர் மாநில நலவாழ்வு நெறியாளர்
மைய அரசில் நலவாழ்வு அமைச்சர்
சட்ட சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஏன் குடியரசுத்தலைவர் , உட்பட
 எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்படி செயல் பட்டு அவர்களை செயல் பட வைக்க வேண்டும்
நோய் ஒரு முழுமையான சமத்துவ வாதி . அதற்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு தெரியாது ஆண்டியும் அரசனும் நோய்க்கு ஒன்றுதான் .சாதி மதம் இனம் மொழி என்ற வேறுபாடில்லாமல் தாக்கும்
எனவே நாமும் பிரச்சினையின் தீவிரத்தை தாக்கத்தை முழுமையாக உணர்ந்து ஓன்று பட்டு செயல் பட வேண்டும்
இறைவன் நாடினால் மீண்டும் ச(சி)ந்திப்போம்
அன்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Blog Address
sherfuddinp.blogspot.com

B/FB 22082018

No comments:

Post a Comment