Friday, 24 August 2018

கதை நேரம் 2





கதையின் முதல்  பகுதியில் ஒரு கொடுங்கோல் மன்னன், அவனை வெல்லப் பிறந்த ஒரு குழந்தை, அந்தக்குழந்தையின் தாய் மூவரும் பல தடைகளை மீறி ஒரு இடத்தில் கூடியது பற்றிப் பார்த்தோம்

இனி
குழந்தைக்கு  இரண்டு வயதில் அறியாமல் நெருப்பை வாயில் போட்டுவிட , நாக்குப்புண்ணகி என்ன வைத்தியம் செய்தும் சரியாகவில்லை

இப்போது குழந்தை இருபது வயது இளைஞனாக வளர்ந்து விட்டார் . ஒரு சண்டையை விலக்க முற்படுகையில் இளைஞன் குத்தியதில் சண்டை போட்ட இருவரில் ஒருவரின் உயிர் பிரிந்தது

கடுமையான  தண்டனைக்குப் பயந்து ஊரை விட்டு ஓடிய அந்த இளைஞன்  ஒரு பார்வை இழந்த முதியவரின் பெண்களுக்கு தண்ணீர் எடுக்க உதவி புரிந்தார் . பின் முதியவரின் வேண்டுகோளை ஏற்று அவரின்  ஒரு பெண்ணை தன் துணைவியாக ஏற்றுக்கொண்டார். .சில ஆண்டுகள் கழித்து முதியவரின் இன்னொரு பெண்ணையும் மனமுடித்தார்

தம் குடும்பத்தாரைப் பார்த்து பல ஆண்டுகள் கழிந்ததால் அவர்களைப் பார்க்க ஆவல் மிகுந்தது இளைஞருக்கு.. தன் துணைவியார்  பணியாளர்களோடு ஊரை நோக்கிப் பயணித்தார்

வழியில் துணைவியாருக்கு பேறுகால வலி உண்டானது
 .நடு நிசி
இருட்டு,
கொட்டும் மழை.
குளிரில் நடுங்கிய துணைவியாருக்காக  நெருப்பு மூட்டமுயன்று முடியாமல் போயிற்று

அருகில் உள்ள மலையில் நெருப்பு போல் எதோ தெரிந்தது . அதைப் பார்த்த இளைஞன் அங்கு போய் நெருப்பை எடுத்து வர தனியே புறப்பட்டார்

அங்கு இளைஞன் சந்தித்த

எதிர்பாராத பல நிகழ்வுகள்  . பற்றி

அடுத்த வாரம் அடுத்த பகுதியில்

Blog address
sherfudddinp.blogspot.com

B /F 24 08 2018


No comments:

Post a Comment