Thursday, 23 August 2018

தமிழ் (மொழி) அறிவோம் 9 மரச்செக்கும் கல்செக்கும்





மரச்செக்கும் கல்செக்கும்

செக்கு                         கல் செக்கு

அம்மி, ஆட்டுக்கல் , திருகை, உரல் உலக்கை ,குதிர் இவையெல்லாம் வழக்கொழிந்து போன வீட்டுப் பொருட்களில் சில

தமிழ் அறிஞர் கி ஆ பெ அவர்கள் அடிக்கடி சொல்வார்களாம்
என் பேரன் பேத்திகள உரல் உலக்கையை எதாவது பழம்பொருள் கண்காட்சியில்தான் பார்க்க முடியும் என்று

அவை மட்டுமா ? மேலே சொன்ன பொருட்கள் அனைத்தும் அப்படித்தான் ஆகி விட்டன

செக்கு எண்ணெய் உடலுக்கு மிக மிக மிக நல்லது , எல்லா நோய்களுக்கும் –நோய் வராமலும் தடுக்கும் மருந்து என்ற செய்தி மிகப்பரவலாக , நுண்ணுயிர் வேகத்தில் ஊடகங்களில் பரவ எல்லா எண்ணெய்களும் செக்கு எண்ணெயாக மறு பிறவி எடுத்தன

ஊடகங்களில் வரும் செய்திகள் ,விளம்பரங்கள் எவ்வளவு உண்மையானவை என்பதை  அந்த இறைவன் மட்டுமே அறிவான்
சில காலம் முன்பு ஆர்கானிக் உணவுகள் என்று விற்கப்படும் பொருளகள் பெரும்பாலும் உண்மையான ஆர்கானிக் உணவுகள் இல்லை என்று மைய அரசு அறிவித்தது

சொல்ல வந்த செய்தியை விட்டு வேறெங்கோ போகிறேன்
செக்கு என்பது எண்ணெய் வித்துக்கlளில் ( Oil seeds ) இருந்து எண்ணெய் எடுக்க பயன்படும் ஒரு கருவி
வீட்டில் பயன்படும் எண்ணெய்கள்  .கடலை எண்ணெய்,GROUND NUT oil தேங்காய் எண்ணெய் (COCONUT oil,) நல்லெண்ணெய் (Sesame oil –  எள் எண்ணெய்  )கடலை, தேங்காய், எள்ளிலிருந்து எடுக்கப்படுபவை .
எண்ணெய் சத்து நிறைந்த  கடலை, தேங்காய்,, எள்- இவைதான் எண்ணெய் வித்துக்கள்
எண்ணெய் வித்துக்களை செக்கில் போட்டு ஆட்டி எண்ணெய் எடுப்பதுதான் ஒரு இயல்பான செயலாக இருந்தது 

என் இளமைப்பருவத்தில்
காரைக்குடியில் செக்கில் போய் நல்லெண்ணெய் வங்கி வருவோம் .எள்ளின் கசப்பை மாற்றுவதற்காக எள்ளோடு கருப்பட்டி போட்டு செக்கில் அரைப்பார்கள்
ஒரு சிறிய தொகைக்கு அரைத்தும் அரைக்காத எள்ளும் கருப்பட்டியும் சேர்ந்த கலவையை கை நிறையக்கொடுப்பர்கள் .அப்படி ஒரு சுவை

செக்குக் கடலை எண்ணெயில் சமைத்தால் வீடே மணக்கும்

செக்கில் ஒரு பெரிய தொட்டி போன்ற ஒன்றும் அதன் நடுவில் உலக்கை ஒன்றும் இருக்கும். பாத்திரம் மரத்தில் இருந்தால் மரச்செக்கு. –கல்லில் இருந்தால் கல் செக்கு

திருநெல்வேலி பேட்டையில் கல் செக்கில் அரைத்து எடுத்த 
நல்லெண்ணெய் கிடைக்கும் .அந்தப்பகுதியே செக்கடி என்று அறியப்படும் .

செக்கில் அரைக்க மாடு பயன்படுத்தப்படும் .கேரளத்தில் பெண்களே செக்கிழுத்து தேங்காய் எண்ணெய் எடுப்பார்கள் . செக்கிழுத்த செம்மல்கள்

காலப்போக்கில் செக்குக்குப் பதிலாக மின் பொறிகள் ,பெரிய அளவில் ஆலைகள்  என்று  எண்ணெய் மிகப்பெரிய அளவில் தொழிலாகவும் வணிகமாகவும் வளர்ச்சி அடைந்தது ..சுத்திகரித்து, பதப்படுத்திய எண்ணெய்தான் உடல நலத்துக்கு உகந்தது என்ற கருத்து பரவலாக திணிக்கப்பட்டது

இப்போது காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்று செக்கு எண்ணெய் ஆதி மனிதன் உணவு என்று போய்க்கொண்டிருக்கிறது

நானும் சற்றுத் தடம் மாறி வேறு ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
மறந்து மறைந்து போன இன்னும் சில பொருட்கள்
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்

Blog address
sherfuddinp.blogspot.com



No comments:

Post a Comment