Tuesday, 21 August 2018

பெருநாள் வாழ்த்துக்கள்

Image result for id ul zuha






அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவருக்கும் உளங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்


ஈகையை உள்ளடக்கிய இந்தத் தியாகத் திருநாளில் நபி இப்ராகிம் அவர்களின் சிறப்புகள் சிலவற்றை நினைவ கொள்வோம்

இறைவன் நட்பு கொள்ள விரும்பிய ஒரு மாமனிதர்
   இறைவனிடமே கேள்வி கேட்ட பகுத்தறிவாதி
இறைவன் கட்டளையை சிரமேற்கொண்டு எண்பது வயதுக்குமேல் தான் பெற்ற மகனை பலி கொடுக்கத் துணிந்த தியாகச்செம்மல்
    இறைவன் உன்னை பலி கொடுக்கச் சொல்கிறான் .இது பற்றி உன் கருத்து என்ன என்று தன் மகனை வினவிய சமத்துவ வாதி

அவரின் நினைவாக ஒரு கட்டாயக் கடமை  (பர்ளு) – புனித ஹஜ் பயணம்
     அவரை நினைவில்  ஒரு திருநாள்- தியாகத்திருநாள்
அவர் பெயரில் புனித மறை குர்ஆனில் ஒரு சூரா
    அவர் பெயர் ஒவ்வொரு தொழுகையிலும் உச்சரிக்கப்படும் சிறப்பு
அவருடைய வழிமுறைகள் (சுன்னத்துகள்) இன்றளவும் பின்பற்றப்படுவது – தாடி. வளர்த்தல், மீசையை குறைத்தல், நகம் வெட்டுதல் போன்றவை


நபி மார்களின் நல் வழிகளைப் பின்பற்றி ,இறை நெறி அடைந்து இம்மையிலும் மறுமையிலும் எல்லா நலன்களும் பெற்று ஈடேற்றமான வாழ்வு நம் அனைவரும் பெற எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக      
  ஆமீன்
வஸ்ஸலாம்


Blog address
sherfuddinp.blogspot.com




No comments:

Post a Comment