அடுப்பும் துடுப்பும்
பயன்பாட்டில் இருந்த பல பொருட்கள் , பல சுவைகள் மறந்து மறைந்து போனது
பற்றிய பதிவில் சென்ற பகுதியில் சில மறந்து போன பண்டங்களை சுவைத்தோம்
அதன் தொடர்ச்சியாக இப்போது மறந்து போன சில பொருட்களைப் பார்ப்போம்
விறகடுப்பு (Stove
using firewood as fuel)
விறகடுப்பு (Stove)ஏறத்தாழ
முற்றிலும் வழக்கொழிந்த ஓன்று .பெரிய விருந்துகளுக்கு சமைக்கும்போதும்
பெரும்பாலும் எரிவாயுவே பயன்படுத்தபடுகிறது
இப்போது சில பெரிய உணவு விடுதிகளில் மண்பானை சமையல், விறகடுப்பு
சமையல் என்று விளம்பரம் செய்கிறார்கள் அந்த அளவுக்கு அவை சுவையாக இருக்குமாம்
கொடி அடுப்பு இரண்டாம் அடுப்பு மாதிரி- மெதுவாகசூடாக வேண்டிய பால்
போன்றவற்றை அதில் வைப்பார்கள் என நினைவு
விறகடுப்பில் ஒரு தொல்லை புகை ..
விறகு அடுப்பு கொடி அடுப்பு
ஊதாங்குழல் (Blow
Pipe)
புகையில்லாமல் எரியவும் , அணைந்த அடுப்பை பற்ற வைக்கவும் ஊதாங்குழல்(Blow
Pipe) பயன் படும் .உலோகத்தில் ஆன புல்லாங்குழல் போல் இருக்கும்
அடுப்பை எப்படிப் பற்ற வைப்பது என்பதெல்லாம் மிக நுணுக்கமான
தொழில்நுட்ப முறைகள்.
விறகடுப்பு , ஊதாங்குழல்
தடுக்கு (Small
Mat)
ஒருவர் உட்காரும் அளவுக்கு சிறிய ஓலைப்பாய் தடுக்கு எனப்படும்,
.உட்கார்ந்து சாப்பிடப் பயன்படும் இந்தத் தடுக்கின் விலை ஒரு ரூபாய் தான்
இருக்கும் . அனால் அதற்குள் எத்தனை கலை நயம் .
நன்கு காய்ந்த பனை ஓலையை (Palmyra leaf) நீள் வடிவில் சிறிய துண்டுகளாக வெட்டி, பல
நிறங்கள் பூசி சிறிய பாய் போல் பின்னுவார்கள் .சுவரில் ஆணியில் தொங்க விட ஓலையிலேயேஒரு
அழகான வளையம் , எல்லாம் கை வேலைதான்
பனை ஓலை என்றால் என்ன என்று அடுத்து ஒரு ஐயம் தோன்றும் .பனை ஓலை,
பனங்கிழங்கு, பதநீர் , பனை வெல்லம், கருப்பட்டி என பல பொருட்களை அளிப்பதோடு
ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளதாக இருக்கும் பனை மரம் பற்றி பின்னால் பார்ப்போம்
நிறைவாக துடுப்பு பற்றிப்பார்ப்போம் (அடுப்பும் துடுப்பும் என்ற தலைப்பு
போட்டிருக்கிறேதே )
தடுக்கு
துடுப்பு (Oar)
பெரிய பானைகளில் அதிக அளவில் களி போன்ற உணவுகள் சமைக்கும்போது
கிண்டுவதற்கு துடுப்பு பயன்படும் படகு ஓட்ட பயன்படும் துடுப்பு போல் மூன்றடி
நீளத்தில் இருக்கும் மரக்கரண்டிதான் துடுப்பு
இன்னும் சில பொருட்கள்
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
FB B 16 08 18
No comments:
Post a Comment