கதை கேட்பது பசி தாகம் போல் ஒரு அடிப்படை உள்ளுணர்வு . எந்த வயதிலும்
கதை என்றால் காதுகள் சிலிர்த்துக்கொள்ளும் உள்ளம் குதுகலமடையும்
மிக சலிப்பூட்டும் செய்திகளைக் கூட கதை வடிவில் சொல்லி மனதில் நிற்க
வைக்கலம்
இனி கதைக்குப்போவோம்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா . அந்த ஒரே ஒரு அரசன் ஒரு கொடுங்கோல்
மன்னன் , தனக்கு நிகரில்லை என்ற மமதை கொண்டவன் தானே இறைவன் என்று அறிவித்தவன்
.அவனுக்கு ஒரு எதிரி பிறந்து அவனை அழித்து ஆட்சியை கைப்பற்றுவான் என்று
ஆருடம் சொல்ல அவனை கிலி பிடித்து ஆட்டியது
தன் நாட்டில் பிறக்கும் ஆண்
குழந்தைகள் அனைத்தையும் கொன்று விட ஆணை பிறப்பித்தான் அரசன்
உங்கள் எதிரி இன்ன நாளில் தன தாயின் கருவில் உருவாவர் என்று மீண்டும்
ஆரூடக்காரர்கள அறிவிக்க சினம் தலைக்கேறியது அரசனுக்கு ., நாட்டில் உள்ள ஆண்கள்
அனைவரும் உடனே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் மீறினால் தலை வெட்டப்படும் என்று
அறிவித்தான்
தனது தம்பிக்கைக்கு உரித்தான ஒரு பணியாளரை அரண்மனை வாயிலில் காவலுக்கு
அமர்த்தினான் .
இவ்வளவு செய்தும் விதியை வெல்ல முடியவில்லை .அரண்மனை வாயில் காத்து
நின்ற பணியாளரின் துணைவி அவரைத்தேடி அரண்மனைக்கு வர அங்கேயே அவர்கள் இணைய கருவில்
குழந்தை உருவாகிவிட்டது
அரசனின் எதிரி தாயின் கருவில் உருவாகிவிட்டான் என்ற செய்தியையும்
ஆரூடக்காரர்கள தெரிவித்து விட்டார்கள்
அன்றில் இருந்து ஓராண்டிற்கு பிறக்கும் பிள்ளைகளை வீடு வீடாகத்
தேடிப்பிடித்துக் கொல்ல ஆணையிட்டான் மன்னன் .
பணியாளர் அரசனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால் அவர் மேல்
யாருக்கும் ஐயம் உண்டாகவில்லை, அவர் வீட்டை சோதனை போடவும் இல்லை
சில காலம் கழித்து பணியாளரின் துணைவி ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார்
. குழந்தை அழகென்றால் அப்படி ஒரு அழகு . மன்னனுக்கு செய்தி எட்டி விட்டால் என்ன
செய்வது என்ற அச்சம் பிடித்து திகைத்து நிற்கும்போதே எப்படியோ செய்தி அறிந்த
காவலர்கள் வீடு தேடி வந்து விட்டார்கள்.
பதறிப்போன தாய் குழந்தையை மறைத்து வைக்க, இறையருளால் காவலர் கண்ணில்
படாமல் தப்பித்தது
தொடரும் அச்சுறுத்தல்களில் இருந்து
காப்பாற்றுவதற்காக தாய் ஒரு மரப் பேழையில் குழந்தையை வைத்து அதை ஓடும் நதியில் விட்டுவிட இறைவன் நாட்டத்தால்
அந்தப் பெட்டி மன்னனின் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தது
மன்னர் மகள் அந்தக் குழந்தையைத் தூக்க மகளுக்கு இருந்த நீண்ட நாள்
நோய் நீங்கி குணமடைந்தார்
இதனால் அரசர் குடும்பம் மனம் மகிழ்ந்தது . மேலும் குழந்தையின் அழகில்
மயங்கி அரண்மனையில் வளர்க்க முடிவு செய்தனர்
இறைவன் விளையாட்டில் இன்னொரு பகுதியாக குழந்தையின் தாயே அந்தக்
குழந்தைக்கு பாலூட்டும் செவிலித்தாயாக அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்
என்ன கதையின் போக்கு எப்படி இருக்கிறது ? ஒரு நீண்ட கதையின்
துவக்கம்தான் இது
உங்கள் கருத்துக்களை தெரிவித்தால்தான் மேற்கொண்டு கதையைத் தொடருவதா
என்பது பற்றி சிந்திக்க வேண்டும்
உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் பதிவு
செய்யுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
Blog Address
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment