சென்ற பகுதீயோடு நிறைவு செய்யத்தான் எண்ணினேன் .ஆனால் சில விடுதல்கள்
நினைவில் வந்ததால் அவற்றை இந்தப்பகுதியில் குறிப்பிடுகிறேன் .
விழுப்புரம் மாவட்டம் – நூற்றாண்டு கடந்த கடலூர் மாவட்டதிலிருந்து
இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன் பிரிந்த ஓர் இளைய மாவட்டம் .
நம் பழைய மாவட்டத்தை முந்திக்கொண்டு அந்த இளைய மாவட்டம் பெற்ற சில (
அதாவது நாம் இழந்த சில)
அரசு மருத்துவக்கல்லூரி
காவல் சரக அலுவலகம் (DIG of Police office)
அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம்
நாகார்சுனா குழுமத்தின் ஆலை ஓன்று கடலூரில் வரப்போவதாக மிகப் பரவலாக
பேசப்பட்டது . அலுவலகம் திறக்கப்பட்டது .பல அலுவலர்கள் வந்தார்கள் .
வீட்டு வாடகை உயர்ந்ததுதான் மிச்சம்
ஆலையையும் காணாம் அலுவலகத்தையும் காணாம்
இதே போல் கப்பல் சார்ந்த மிகப்பெரிய தொழில் ஒன்றும் பேச்சோடு போச்சு
இவ்வளவு ஏன் – தனியார்துறையின் பெரிய நகை, துணிக்கடைகள் கடலூருக்கு
வருவதாகச் சொல்லப்பட்டு புதுச்சேரி , விழுப்புரத்துக்குப் போய் விடும்
இதெல்லாம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்று ஒரு கேள்வி எழலாம்
.
ஒரு நிறுவனம் ஒரு அலுவலகம் வந்தால்.
நூற்றுக்கணக்கான ஒரு தொழிற்சாலை வந்தால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்
உருவாகும். அதற்கேற்ப நகரின் பொருளாதாரம் வளரும்
பெரிய தொழிற்சாலைகள் வரும்போது
சாலை, மருத்துவ மனை, கல்விக்கூடங்கள் போன்ற கட்டமைப்புகளும் உருவாகும்
இப்படிப் பல நல்லவை கை நழுவிப்போனது ஏன்?
சாபக்கேடு , வள்ளலார் சபித்து விட்டார் என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு
வள்ளலார் அன்பே உருவானவர் , வாடிய பயிரைக் கண்டு வாடியவர் . அவர்
எண்ணத்தில் , சொல்லில் எப்படி சாபம் வரும் ?
நம் சாபம் நம்மோடுதான் விழிப்புணர்வு இன்மை
உறங்கும் சிங்கங்களின் வாலை முறுக்கி எழுப்பி செயல்பட வைக்கும் பெரிய
பொறுப்பு கடலூர் சிறகுகள் போன்ற அமைப்புகளுக்கு உண்டு
நல்ல முறையில் இயங்கி வரும் அமைப்பு இன்னும் பலம் பொருந்திய சக்தி
வாய்ந்த அமைப்பாக உருவாக வேண்டும்
சென்ற பகுதியில் சட்டப் பஞ்சாயத்து அமைப்புப் பற்றி எழுதியிருந்தேன்
,ஆண்டுகள் அலைந்து கிடைக்காத குடும்ப அட்டை , அந்த அமைப்புக்கு தொலைபேசியில்
தெரிவித்த ஒரு மாதத்திற்குள் எனக்கு கிடைத்து பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்
திரு சகாயம் இ ஆ ப அவர்களின் அறிவுரையில் இயங்கும் அந்த அமைப்புபோல்
தனி மனிதன் குறைகளையும் , சமுதாய்க்குறைகளையும் , நகரின்,மாவட்டத்தின்
சீர்கேடுகளைக் களைந்து ஒரு நல்ல நகரை, மாவட்டத்தை உருவாக்கும் சிறப்பான அமைப்பாக
கடலூர் சிறகுகள் உருவெடுக்க வேண்டும்
.
குறை மட்டும் சொல்லி எதிர் மறையாகப் பேசும் சிலர் இருப்பார்கள் –
கடலூர் இப்படிதான் , இவ்வளவுதான் இங்கு
இதெல்லாம் நடக்காது என்று பேசி முயற்சிகளை
குலைக்க முயல்வார்கள்
இப்படிப்பட்டவர்களை புறந்தள்ளிவிட்டு செயலில் ஈடுபட வேண்டும்
நல்ல முயற்சிகளுக்கு இறைவன் உறுதியாக அருள் புரிவான்
.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சிகள் இல்லாவிட்டால் கடலூர் மாவட்டம் நாளை சிதம்பரம் மாவட்டமாக
மாறினாலும் மாறும்
தேவை ஏற்பட்டால் மீண்டும் எழுதுவேன்
Blog
address
sherfuddinp.blogspot.com
FB B 16
08 18
No comments:
Post a Comment