Wednesday, 29 August 2018

தமிழ் (மொழி) அறிவோம் 10 அரிசியும் நெல்லும்






அரிசியும் நெல்லும்  ,  

நெல் வயல்                 முற்றிய நெல் பயிர்

நெல்

தவிடு 





அரிசி



இந்தத் தொடரில் இதுவரை ஒன்பது பகுதிகள் எழுதி விட்டேன் . சில நேரங்களில் “ ஏன் இவ்வளவு அடிப்படையான செய்திகளைப் பதிவு செய்கிறோம் , இதெல்லாம் தெரியாமல் யார் இருப்பார்கள் ?” என்ற எண்ணம் தோன்றுவதுண்டு

ஆனால் இளைய தலை முறை – எனது மூன்றாவது தலைமுறை–அதிலும் குறிப்பாக பெருநகரில்( cities) அடுக்ககங்களில்(apartments) வாழும் குழந்தைகள் தமிழை விட்டு மிகவும் விலகி இருப்பது உண்மை இது அவர்கள் தவறல்ல .காலத்தின் கட்டாயம்

இவர்களுக்கு எனக்குத் தெரிந்த தமிழை சொல்வதே என் நோக்கம். அதனால்தான்  கூடிய மட்டும் தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் எழுதுகிறேன்

இந்த வாரம் பனை மரம் பற்றி எழுதவிருந்தேன் . ஆனால்அதை மாற்றி அரிசி நெல் தவிடு பற்றி எழுதத்தூண்டியது ஒரு சிறிய நிகழ்வு .சென்ற தலை முறை ஆசிரியர் ஒருவர் இந்தத் தலைமுறை மாணவரிடம் பேசும்போது அரிசி, தவிடு இவற்றின் பயன்கள், ஊட்டச்சத்து பற்றிப் பேச மாணவர் அரிசி தெரியும் அது என்ன தவிடு என்று கேட்டார் .இது பற்றி கேள்விப்பட்ட நான் தலைப்பை அரிசி நெல்லுக்கு மாற்றி விட்டேன்

அரிசி – எல்லோருக்கும் தெரியும் என நினக்கிறேன் , நாடு முழுதும் அடிப்படை உணவாக அரிசி இருக்கிறது

.Rice  எனபது அரிசி, சோறு இரண்டையும் குறிக்கும் பொதுச் சொல்
சமையல் நிகழ்ச்சிகளில் சமைத்த அரிசி என்று ஒலிக்கும்போது காது வலிக்கிறது

சோறு என்பது ஒரு இழிவான சொல்போல் சாதம் என்ற சொல் அதிகம் பயன்பாட்டில் வருகிறது

அரிசி ஒரு ஊட்டச்சத்தில்லாத உணவுப்பொருள் அரிசி சோறு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றொரு கருத்து பரவி வருகிறது. அரிசியைத் தவிர்த்து கோதுமை, ஓட்ஸ் பயன்படுத்துவது நாகரீகமாகவும் நல வாழ்வுக்கு உகந்ததாகவும் பேசப்படுகிறது. . இவை மிக மிக தவறான கருத்துக்கள்

அரிசி, சோறு நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிக மிக தேவையான உணவாகும் 

அரிசி நெல்லில்(Paddy)  இருந்து வருகிறது . நெல், வயலில் நெல்பயிரில் வளர்வது .முதலில் பச்சை நிறத்தில் இருக்கும் நெல் மணிகள் முற்றி பொன் நிறத்துக்கு வரும்போது பயிரை அறுவடை( harvest (அறுத்து))  நெல்லை செடியின் மற்ற பகுதியில் இருந்து பிரித்து எடுப்பார்கள் .நெல் போக மற்ற பகுதி வைக்கோல் (straw) . மாட்டுக்கு தீனியாகும் (cattle feed)
நெல்லின் உள்ளே இருக்கும் விதை போன்ற பகுதிதான் அரிசி . அரிசி போக நெல்லில் தவிடு (Bran)என்ற தோல் போன்ற பகுதியும் உமி(Husk) என்ற சிறிய பகுதியும் இருக்கும்

தவிடு மாடு கோழிக்கு நல்ல உணவாகும். உமியில் தீ மூட்டி எரித்து வரும் உமிக்கருக்கு(Charred Husk) உப்புடன்(salt) சேர்த்து பல் பொடியாகப் (tooth powder) பயன்பட்டது . உப்பு, கரி போன்ற கரகரப்பான (Rough) பொருட்கள் பல்லுக்குத் ஊறு செய்யக்கூடியவை (Harmful to teeth enamel) என்று   இடைவிடாமல் சொல்லி பற்பசைக்கு (Tooth Paste) பழக்கப்படுத்தினார்கள் 
.
.இப்போது அவர்களே உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா, கரியிருக்கா  எங்கள் பேஸ்டில் அதெல்லாம் இருக்கு என்று பெருமை பேசுகிறார்கள்

நெல் அரிசி பற்றி இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன் .பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் பிள்ளைகளை வயலுக்கு அழைத்து சென்று நெல் பயிரை அறிமுகப்படுத்தி வைக்கலாம் .

இதெல்லாம் தெரியாவிட்டால் என்ன என்று கேட்கிறீர்களா ? இப்டியே விட்டால் நாளை பிள்ளைகளுக்கு பெற்றோரைத் தெரியாமல் போகலாம்

அடுத்த வாரம் அடுத்த பகுதியில் சந்திப்போம்

Blog address
sherfuddinp.blogspot.com

B/FB 30082018




No comments:

Post a Comment