சாவித்திரி கணேசன்
சாவித்திரி அம்மாளுக்கு ஒன்பது பிள்ளைகள். ஒன்பதிலே ஓன்று கூட
உருப்படி இல்லை என்று சொல்ல முடியாது
வெளிநாட்டில் வேலைக்கு
ஏற்பாடு செய்வதாய் தெரிந்தவர் ஒருவர் சொல்ல போன வேகத்தில் திரும்பி வந்து விட்டார்
ஒருவர் .பாஸ்போர்ட்எல்லாம் கேக்குறாங்க
என்று எரிச்சலாகச் சொன்னார்
இன்னொருவர் கடவுச்சீட்டு எல்லாம் வைத்திருந்தார் . அறுபது வயதில் வெளி
நாட்டில் வேலைக்குப் போக முடியாது என்று அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்
இன்னொருவர் சற்றுக் கொள்கைப் பிடிப்பானவர் . என் திறமையை மதித்து
யாராவது முன்வந்து அவர்கள் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு வெளிநாடு
அழைத்துச்சென்றால் போவேன்
இல்லையேல் மத்திய மாநில அரசுகள் நடத்தும் உயர் நிலைத் தேர்வுகளை எழுதி
பெரிய பதவிக்குப்போவேன்
என்று சொல்லித்திரிவார்
என்ன செய்வது அவர் திறமையை அறியும் திறன் யாருக்கும் இல்லை
.அரசு உயர் பதவிகளுக்கான கல்வித்தகுதியை அவர் அடைவதற்குள் வயது வரம்பு
தாண்டி விட்டது
எப்படியோ அவர் மக்கள் எல்லாம் படித்து பட்டம் பெற்று வெளிநாட்டிலும்
உள்நாட்டிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
இவர்களில் எல்லாம் மாறுபட்ட இன்னொருவர் . நல்ல ஊதியத்தில் வெளி நாட்டில்
பணியாற்றிய அவர் அதை விட குறைந்த ஊதியத்தில் இந்திய அரசுப்பணி கிடைக்க துணிந்து
வெளி நாட்டு வேலையை விட்டு விட்டு அரசுப்பணியில் சேர்ந்தார். அவரை பார்த்து பலரும்
கிண்டலாகப் பேசினார்கள்
அவர்கள் வாயடைத்துப்போகும் அளவுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெற்று
தன் முடிவு சரி என்று மெய்ப்பித்தார்
மற்றவர்களும் ஒன்றும் சோடை போகவில்லை ..அவர்களுக்குத் தெரிந்த,
அவர்களால் முடிந்த வணிகம், தொழில், பணி எதாவது செய்து தங்கள் குடும்பங்களை
(மட்டும்) நல்ல முறையில் பார்த்துக் கொண்டார்கள்
ஆல் போல் தழைத்து கிளை பரப்பிய இந்தக் குடும்பத்துக்கு ஆணிவேராக
இருந்தவர் கணேசன் – சாவித்திரியின் துணைவர்
.
பெரிய பதவி , பின்புலம் ஏதும் இல்லை. வணிகவியல்பட்டதாரி . பல நிறுவனங்களுக்கு கணக்கெழுதுவது அவர் வேலை .
கடும் உழைப்பு , நேர்மை ,உண்மை இவற்றால் பகட்டு இல்லாமல் உயர்ந்தவர் .
கணினி மூலம் கணக்குப் பதிவை அந்த ஊரில் அவர்தான் அறிமுகப்படுத்தினார்
. கணினி பற்றி நன்கு கற்றுத் தேர்ந்ததால் பல நிறுவனங்களின் பணியை அங்கு போகாமலே
செய்ய முடிந்தது
வாடகை வீட்டிலும் மிதி வண்டியிலும் வாழ்க்கையைத் துவங்கியவர் சிறிதும்
பெரிதுமாக நான்கு வீடுகள், ஒரு மகிழுந்து
வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்டார்
.
பிள்ளைகளை அவர்கள் எந்த அளவுக்குப் படிக்கமுடியுமோ அந்த அளவுக்கு
சலிக்காமல் படிக்க வைத்தார். தன பிள்ளைகள் எல்லாம் குறைந்தது பட்டப் படிப்பாவது
நிறைவு செய்யவேண்டும் என்பது அவர் விருப்பம் .பெரும்பாலும் அது நிறைவேறியது
நேரப்பகுப்பு அவரது தனிச்சிறப்பு. காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு
வரை கடும் உழைப்பு . மாலை ஆறு மணிக்குமேல் குடும்பம் , நண்பர்கள், சுற்றம்
இவர்களுடன்தான் . அதே போல் ஞாயிற்றுக் கிழமையும் ஓய்வு நாள் .ஆண்டுக்கு ஒருமுறை
ஒரு வாரம் சுற்றுப்பயணம் என்று திட்டமிட்ட மகிழ்ச்சியான வாழ்க்கை
ஐந்து பெண்கள் பெற்றும் ஆண்டி ஆகாமல் நல்ல விதத்தில் திருமணம் நடத்தி
அவர்கள் சீரும் சிறப்புமாய் வாழ்கிறார்கள்
சாவித்திரி அம்மாவைப்பார்த்தால் எப்போதுமே ஓய்வாக இருப்பதுபோல்
தோன்றும் . உடை உடல் எல்லாம் சுத்தமாக
வைத்திருப்பார். ஆனால் அவரும் தன் துணைவரைப்போல் நல்ல உழைப்பாளி.. திட்டமிட்டு
காலம் போற்றி செயல் படுபவர் ...அலட்டிக்கொள்ளாமல் வேலை செய்வார்
ஆடு மாடு கோழி செடி கொடி என்று வளர்த்து பணம் பண்ணுபவர் ,. சிக்கனவாதி
நல்லவிதமாக வாழ்ந்து, தன குடும்பப்பணிகள் அனைத்தையும் செவ்வனே
நிறைவேற்றி பழுத்த வயதில் தீர்க்க சும்ஙகலனாகப் போய்ச் சேர்ந்தார் கணேசன்
துக்கத்தில் ஒரு வாரம் அமைதியாக இருந்த துணைவி பின்
சுதாகரித்துக்கொண்டு செயலில் இறங்கினார் ..ஆடு மாடு கோழியெல்லாம் விற்றுக்
காசாக்கினார் . மகிழுந்தை வருமானம் வரும்படி வாடகை வண்டியாக்கி ஒரு பொறுப்பான
நம்பிக்கைக்குரிய ஓட்டுனரிடம் ஒப்படைத்தார்.
வீடு வாசல் எல்லாம் சாவித்திரி பேரில்தான் இருந்தன .. குடியிருந்த
வீட்டையும் வாடகைக்கு விடச் செய்தார்
ஒரு மகனிடம் நான் இனிமேல் உன் வீட்டில்தான் இருப்பேன் .உனக்குப்
பாராமாக இல்லாமல் வாடகைப்பணத்தில் இருந்து மாதா மாதம் பணம் கொடுத்து விடுவேன் .இதுவரை
எனக்குப்பெரிய மருத்துவச் செலவு ஏதும் வந்ததில்லை .அப்படியே வந்தாலும் போதுமான
அளவுக்கு மருத்துவக்காப்பீடு எனக்கு இருக்கிறது
எனத் தெளிவாகப்பேசி மகன் வீட்டுக்குப் போய் விட்டார்.
கோயில் ,குளம், சமய உரைகள் ,திருத்தலச் சுற்றுலாக்கள் என்று வாழ்க்கை
முறையை இனிதாக அமைத்துக்கொண்டார் ..முடிந்த அளவுக்கு மருமகளுக்கு ,பேரன்
பேத்திகளுக்கு உறு துணையாக இருந்தார் . அக்கம் பக்கத்தில் நல்ல நட்பு வட்டமும்
உருவாகியது
மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் சென்று உடலாலும் மனதாலும் பொருளாலும்
நலிவுற்ற மூத்த குடிமக்களுக்கு ஆறுதல் சொல்லி
முடிந்த உதவியும் செய்து வருவார்
என்னதான் சுறுசுறுப்பாக இருந்தாலும் காலம் தன் கடமையில்
தவறுவதில்லையே.
அதை உணர்ந்த சாவித்திரி அம்மாள் மக்கள் அனைவரையும் ஒரு நாள் வரச்
சொன்னார் ..தன் நகைகள் அனைத்தையும் சரியாக ஒன்பது சம பங்குகளாகப் பிரித்து
பிள்ளைகளிடம் ஒப்படைத்தார்
வங்கியில் ,இருக்கும் தொகையில் தன் இறுதிச்சடங்கு செலவு போக
மிச்சமிருப்பதை முதியோர் இல்லத்தில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில்
இருக்கும் மூன்று பேருக்குப் பிரித்துக் கொடுக்கச்சொல்லி விட்டார்
மகிழுந்தை ஒரு மகனிடம் ஒப்படைத்தார்
அடுத்து வீடு
பெரிய வீட்டை ஆண்மக்கள் சம பங்காகப் பிரித்துக் கொள்ளவேண்டும்
சிறிய வீடு இரண்டை நான்கு பெண்மக்களும் மிகச்சிறிய வீட்டை ஒரு மகளும்
எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று கருத்துத் தெரிவித்தார் . எல்லோருக்கும் அளவிலும் சொத்து
மதிப்பிலும் ஏறத்தாழ சம பங்கு கிடைத்ததால் எல்லோரும் இந்த பிரிவினைக்கு
ஒப்புக்கொண்டார்கள்
நன்கு தெரிந்த ஒரு வழக்கறிஞரை அழைத்து இதை எழுதி
ஆவணமாக்க எண்ணினார்
வழக்கறிஞர் குடும்பத்துடன் சுற்றுலா போயிருந்தார் .அவர் வருவதற்குள்
சாவித்திரியின் உயிர் பிரிந்ததால் அந்த ஆவணம் எழுத முயாமல் போய்விட்டது
சாவித்திரியின் மறைவுக்கு வந்த கூட்டம் அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியது
மக்கள் மருமக்கள் பேரன் பேத்திகள் அவர்கள் துணைகள், பிள்ளைகள்,
சம்பந்திகள இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் அதையும் மீறி நட்புக்கூட்டம், முதியோர்
இல்லம் முழுதும், , பல மருத்துவ மனை நோயாளிகள் மருத்துவர்கள் , சிறார்
இல்லத்திலிருந்து குழந்தைகள்,
காப்பாளர்கள் என்று எண்ணிலடங்காத கூட்டம்
முதியோர் இல்லம் போனது மட்டும்தான் எல்லருக்கும்தெரியும் அதையும்
தாண்டி பல இடங்களுக்கு சென்று வந்தது இப்போதுதான் தெரிந்தது
மொத்தத்தில் ஒரு விழாக்கூட்டம் போல் மக்கள் திரண்டு வழியனுப்பி
வைத்தனர்
சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் முறைப்படி நடந்து வந்த உறவினர்கள்
எல்லாம் கலைந்து போய்விட்டார்கள்
அடுத்தென்ன சொத்தை பிரித்து பங்கு போட வேண்டியதுதானே .அதற்காக மக்கள்
மருமக்கள் கூடினர்.
சாவிதித்ரி அம்மா எல்லாவற்றையும் தெளிவாச் சொல்லி விட்டுப்
போய்விட்டதால் பிரச்சினை எதுவும் எழ வழி இல்லை .
இதுதான் எல்லோர் எண்ணமும் விருப்பமும் ஆனால் இந்த எண்ணம் விருப்பம்
நிறைவேறவில்லை
என்ன நடந்தது எப்படி நடந்தது ஏன் நடந்தது ?
அடுத்த வாரம் பார்ப்போமே
இ(க)டைச்செருகல்
மிக அரிதாகவே கற்பனைக்கதைகள் எழுதுவேன் . கற்பனைக் குதிரை வேகமாய் ஓடியவரை எழுதினேன் . குதிரை சற்று இடக்குப் பண்ணியதால்
தொடரும் போட்டுவிடடேன்
மூளைக்கு வேலை
சென்ற வாரம் உலகில் மிக அதிக பொருட்செலவில் நடத்தப்பட்ட திருமணம் எது
என்று கேட்டிருந்தேன்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இளவரசி டயானா – இவர்களுக்கு 1981ல் நடந்த
திருமணம்தான் இன்றளவும் உலகில் அதிகப் பொருட்செலவில் நடந்த திருமணமாகக்
கருதப்படுகிறது
110 மில்லியன் டாலர் அதாவது எண்பது கோடி ரூபாய் .
மணப்பெண் உடையை பத்தாயிரம் முத்துகள் அலங்கரித்தன..அவரை அழைத்து வர
கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு வண்டி தயாரிக்கபட்டது
இந்த ஆடம்பர அரச குடும்ப திருமணத்தை உலகெங்கும் ஏழரைகோடி மக்கள் கண்டு
களித்தார்கள்
(நம் நாட்டு ஊழல் தொகைகளோடு ஒப்பிடுகையில் இது ஓன்றும் பெரிய தொகை
இல்லை என்கிறீகளா )
சரியான விடையை தெரிவித்த
சேக் பீருக்கு
பாராட்டுக்கள்
இனி இந்த வாரப் புதிர்
ஒரு கட்செவி குழுவில் எத்தனை
உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம் ?
(What is the
maximum number of members in a Whatsapp group?)
மிக எளிதான புதிர் .
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment