இயற்கை எனும்........
அழகான செடிகொடிகள் அவற்றில் அழகான வண்ண வண்ண மலர்கள் .இந்த மலர்கள்
வெறும் அழகு மட்டும் அல்ல .இயற்கையின் அற்புதங்களையும் உள்ளடக்கி இருப்பவை
கலப்புத் திருமணங்களை நாம் ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ இயற்கை
விரும்புவது கலப்புத்திருமணமான அயல் மகரந்தச் சேர்க்கையை மட்டுமே .
இந்த அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்க இயற்கை செய்யும் வழிமுறைகள்
பற்றி அறிந்தால் ஏற்படும் மலைப்பும் திகைப்பும் சொல்ல முடியாது .
ஆர்ப்பரிக்கும் அலைகடலையம் வானுயர்ந்த மலைகளையும் காணும்போது ஏற்படும் வியப்பையும் மலைப்பையும்
இயற்கையின் சின்னஞ்சிறு படைப்புகளிலும் காண முடிகிறது
செம்பருத்திப்பூ – எல்லோருக்கும் தெரியும் . நல்ல மருத்துவ குணமுடைய
அழகான பூ.
செடியையும் மலரையும் இணைக்கும் ஒரு காம்பு இருக்கும். அதற்குக் மேல்
பச்சை நிறத்தில் புற இதழ்கள் அதற்கு மேல்
பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் பெரிதாக இருப்பவை இதழ்கள்
இதழ்களுக்கு நடுவில் மெல்லிய குழாய் போன்று ஓன்று இருக்கும் .அதன்
உச்சியில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும் சூல் முடிக்குக்கீழ் மெலிதாக இருப்பவை
மகரந்தத்தூளுடன் மகரந்தத் தாள்கள் .
மகரந்தத் தாள்கள் ஆண் உறுப்பு . சூல் முடி பெண் உறுப்பு
.
அந்த மெல்லிய குழாயை உற்றுப் பார்த்தல் ஒரு அற்புதம் புலப்படும் .
சூல் முடி உயரத்திலும் மகரந்தம் அதற்குக் கீழும் இருக்கும் . எந்த சூழ்நிலையிலும்
தன் மகரந்தச் சேர்க்கை ஏற்பட முடியாத ஒரு வடிவமைப்பு
குழாயின் அடிப்பக்கத்தில் ஒரு துளி தேன் இருக்கும்- இளமை நினைவுகள் .
இதே போல்தான் அவரைப்பூவின் மேடை போன்ற அமைப்பும் ஒரு அற்புதம் பூசணி
போன்ற செடிகளில் ஆண் பூ பெண் பூ தனித்தனியாக இருப்பதும் அயல் மகரந்தச் சேர்க்கையை
ஊக்குவிக்கவே .
இவற்றையெல்லாம் விவரித்தால் தாவரவியல் பாடம் போலாகிவிடும் .எனவே இதை
இத்தோடு விட்டு விட்டு இன்னொரு அற்புதம் பற்றிப் பார்ப்போம் .
நூறு கண்கள்
நாற்பத்தியெட்டு பற்கள்
மூன்று இதயங்கள்
ஆறு இறக்கைகள்
சின்னஞ்சிறு , அற்பமான கொசுவுக்குத்தன் இவ்வளவும் இயற்கை வாரி
வழங்கியிருக்கிறது .நம்ப முடிகிறதா ?
இவை மட்டுமா
கொசுவின் தும்பிக்கையில் ஆறு ஊசிகள் .ஒவ்வொன்றிற்கும் சிறப்பான தனி
அலுவல்கள்
அந்த ஆறில் ஒன்றின் மூலம்தான்
பிசுபிசுப்பான குருதியை எளிதில் குடிக்கிறது
கொசுவின் உடலில் உள்ள நுண்கதிர் (எக்ஸ் ரே) கருவி போன்ற ஒரு
மிகச்சிறிய சிவப்பு நிறக்கருவி கொசு மனித உடம்பில் வந்து அமரும்போது யாரும்
கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கொசுவின் நிறத்தை மனிதனின் நிறத்திற்கு ஒப்ப
மாற்றுகிறது
கொசுவுக்கு மோப்ப சக்தி மிக அதிகம் . மனிதக்குருதியின் மணத்தை
அறுபது கி மீ தொலைவில் இருந்து அறிந்து கொள்ளுமாம்
கொசுக்கள் குருதி குடித்து
விட்டு மனித உடலை விட்டு எழும்போது கால்களால் உடலை அழுத்தாமல் உலங்குவானூர்தி
(ஹெலிகாப்டர்) போல் தங்கள் சிறகுகளை வேகமாக அடித்து அலக்காக எழும்புகின்றன
(திருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழில் வெளியானது)
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்.
கொசுவைக்கண்டு உலங்கூர்தி படைத்தானா ?
அற்பக்கொசு பற்றி இவ்வளவு போதும்
அத்தி பூத்தாற்போல
அத்திப்பழத்தைப் பிய்த்துப்பார்த்தால் அத்தனையும் சொத்தை
இந்தப் பழமொழிகள் எல்லாம் சரியா தவறா என்ற ஆராய்ச்சிக்கு நான்
போகவில்லை
ஆனால் அத்திப்பூ - அதன் வடிவமைப்பு,, பழமாகும் முறை எல்லாம்
இயற்கையின் அற்புதத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு
அத்திப்பழ வண்டு என்ற சிறிய குழவி வகை வண்டின் வாழ்க்கைச் சுழற்சியும்
அத்தி மரத்தின் வாழ்க்கைச் சுழற்சியும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை .அது
இல்லாமல் இது இல்லை இது இல்லாமல் அது இல்லை
அத்திக்காய் என்று நாம் குறிப்பிடுவது உள்பக்கமாய் வளர்ந்த பூக்களின்
தொகுப்புத்தான்
அந்தத்தொகுப்பில்(பூவில்) இருக்கும்
ஒரு நுண் துளை வழியாக அத்திவண்டு உள்நுழைந்து முட்டை இடும் . அப்போது
அத்திபூவில் மகரந்தச் சேர்க்கை ஏற்படும் முட்டைகள் பொறித்து புழுவாகி அத்தி
விதையின் சதைபற்றான பகுதியை உண்டு வளரும்
பெண் பூச்சிகள் வளர்ந்து வெளியே வந்து முட்டையிட இன்னொரு அத்திக்காயை தேடிச் செல்லும்
ஆண் பூச்சிகள் –தியாகச் செம்மல்கள்
- இனப்பெருக்கப் கடமையை நிறைவேற்றி பெண்
பூச்சிகள் வெளியே செல்ல வழியமைத்துக் கொடுத்துவிட்டு உயிரை விட்டு விடும்
இந்தச் சுழற்சி ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளாக இடைவிடாமல் நடப்பதாய்
அறிஞர்கள் சொல்கிறார்கள்
கொஞ்சம் தலை சுற்றுகிறது அதனால் மிக விரிவாக எழுதவில்லை
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமல்
இருக்கும் அந்த ஏக இறைவனுக்கே எல்லாப்புகழும்
நிறைவாக ஒரு எளிய அற்புதச்
செய்தி
வேர்க்கடலை- கடலை- ground nut எல்லோருக்கும் தெரிந்த ஒரு சுவை .இதன் பூக்கள் மற்ற செடிகளைப்போல்
தரைக்கு மேல்தான் பூக்கும். .மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்தபூக்கள் கருவுற்றபின் உண்டாகும் ஒரு
காம்பு மூலம் பூமிக்குள் சென்று அங்கே காயாகும்
இ(க)டைச்செருகல்
“நிச்சயமாக ஏக இறைவன் கொசுவையோ அதற்கு மேலுள்ளதையோ உவமானமாகக் காட்ட
வெட்கப்படுவதில்லை” – திருக்குர்ஆன் 2;26
“அத்தியின் மீதும்------------------------------சத்தியமாக நாம் மனிதனை
மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம்”
திருக்குர்ஆன் அத்தீன் (அத்திப்பழம்) 95: 1-4
மூளைக்கு வேலை
முந்திய புதிர்
போர் பைவ் போர் நான்கு ஐந்து நான்கு இது வரை கண்டுபிடித்தும் சரியான
விடை யாரும் சொல்லவில்லை
இது பற்றி நான் ஏற்கனவே பொள்ளாச்சி பற்றிய பதிவில் அம்மாவின்
நினைவுத்திறனுக்கு சான்றாகச் சொல்லியிருந்தேன்
பொள்ளாச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரரின் கடைக்கு
தொலைபேசியில் பேச எங்கள் வீட்டுக்கு வந்த பெண் கடை எண்ணை மறந்துவிட யாருக்கும்
நினைவில் இல்லாத எண்ணை அம்மா போர் பைவ் போரா என்று கேட்டு தன் நினைவுத்திறனையும்
கூர்ந்து கவனிக்கும் திறனையும் வெளிப்படுத்தியது
இந்த வார வினா
மிக எளிய ஓன்று
மக்காவில் உள்ள புனித ஆலயமான காபாவை உருவாக்கியது யார் ?
இறைவன்
நாடினால்
மீண்டும் சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment