Tuesday, 28 August 2018

நம் கடலூரை மீட்போமா ! 10





மீண்டும் சில நல்ல செய்திகள்
திருப்பாதிரிப்புலியூர் தொடரி நிலையம் சீரமைக்கப்படுகிறது .சுவருக்கு வண்ணம் பூசுதல், குடிநீர்க் குழாய்கள் அமைத்தல் , சாலையை சீரமைத்தல் போன்ற பணிகள் நடப்பதாக தமிழ் இந்துவில் செய்தி

நான் பலமுறை குறிப்பிட்டுச் சொன்னது  :
நடை மேடை முழுதும் மேற்குறை அமைத்து பயணிகள் வெய்யில் மழையில் வாடாமல் வண்டியில் ஏறும்படி செய்யவேண்டும்
பயணிகள் காத்திருப்பு அறை கழிவறை  இவை பயணிகளுக்குப் பயன்படும் வகையில் திறந்து வைக்கப்படவேண்டும்

அடுத்த நல்ல செய்தி  கோண்டுர் பகுதியில் விரைவில் புறக்காவல் நிலையம் அமையவுள்ளது .இப்பகுதியில் பெருகி வரும் குற்றங்களைத்  தடுக்க ஒரு நல்ல முயற்சி

தொடர்ந்து நல்ல செய்திகள் வர இறைவனை வேண்டுவோம், முயற்சிப்போம்

ஜோதி நகர் பகுதியில் பன்றிகள் நிறைய திரிவதால் விபத்துகள் நடப்பதாய் ஒரு தோழர் கடலூர் சிறகுகள் கட்செவியில் (வாட்சாப்) குறிப்பட்டிருந்தார்
அதற்கு இன்னொரு தோழர் புத்தர் கோயில் அருகில் இருக்கும் பன்றி இறைச்சி கடையில் சொன்னால் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள்  என்று சொல்லியிருந்தார்

 பிரச்சினையும் எளிதல்ல . சொல்லப்பட்ட தீர்வும் சரியில்லை
ஜோதி நகர் மட்டுமல்ல சாவடி , கோண்டூர் பகுதிகளில் மிக அதிக அளவில் பன்றிகள் தங்கு தடையின்றி உலாவுகின்றன .குட்டி போடும் பருவம் வந்தால் இன்னும் இது அதிகரிக்கும்

குழந்தைகளைத் தாக்கும் மூளைக்காய்ச்சலுக்கு பன்றி ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது . இது ஒரு மிகக்கொடிய நோயாகும்
இந்த வகையில் பன்றிகள் ஒரு மிகப்பெரிய நலவாழ்வுப் பிரச்சனையாகின்றன

பன்றிகறிக் கடையில் சொன்னால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று ஒரு தோழர் குறிப்பிட்டிருந்தார் .பன்றிகள் தெருவில் சுற்றித் திரிந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் இருப்பார்கள் . அவர்களுக்கு விலை கொடுக்காமல் பிடித்துப் போக முடியாது

பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக பன்றி வளர்ப்பு இருக்கிறது . எனவே இதில் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நகராட்சி எல்லாம் தலையிட்டு செயல்பட்டு  பன்றி வளர்ப்பை ஒழுங்கு படுத்தினால் பன்றித் தொல்லையில் இருந்து மீளலாம்
 
மின் வாரியம் கொடுத்த ஷாக்
நாலு ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாத மாவட்ட ஆட்சியர் அலுவலக மின் இணைப்பைத் துண்டித்தது மின் வாரியம் . துண்டித்தவுடன் நிலுவைத்தொகை பதினைந்து லட்சம் செலுத்தப்பட்டு மீண்டும் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது .

நோ கமெண்ட்ஸ்

இறைவன் நாடினால் மீண்டும் ச(சி)ந்திப்போம்

Blog Address
sherfuddinp.blogspot.com

B/FB 29082018



No comments:

Post a Comment