தியாகத் திருநாள் –குறிப்புகள் 1
இசுலாமிய ஹிஜ்ரி ஆண்டை நிறைவு செய்வது துல்ஹஜ் மாதம்.
இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்களாகும்
இந்தப்பத்து நாட்களில் புனித ஹஜ் பயணம் நிறைவேற்றப்படுகிறது. பத்தாம் நாள் தியாகத் திருநாள் எனும் ஈதுல் அல்ஹா அனுசரிக்கபடுகிறது
துல்ஹஜ் மாதம் , புனிதப்பயணம் , தியாகத் திருநாள் , மிகப் பெரிய தியாகம் செய்த நபி இப்ராகிம் இவை பற்றி சுருக்கமாக இந்த பத்து நாட்களும் எழுத எண்ணுகிறேன், இன்று துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள்
எப்படி எழுதுவது , என்ன எழுதுவது என்று தெளிவில்லை . வழக்கம்போல் இறைவன் மேல் பொறுப்பை சுமத்தி விட்டு எழுதத் துவங்குகிறேன் எல்லாம் வல்ல இறைவன் வழி காட்டுவன்
முதலில் நபி இப்ராஹீம அவர்களின் சிறப்புளைப் பார்ப்போம்
.
“நிச்சயமாக இப்ராகிம் மிகவும் சகிப்புத் தன்மை உடையவராகவும் , மென்மையானவராகவும் , இறைவனை நோக்கி இறைஞ்சுபுபவராகவும் இருந்தார் “
என இறைவன் சொல்கிறான் (குரான் 11:75)
இன்னும் பல நற்குணங்களும் சிறப்புகளும் கொண்ட இபுராஹிம் அவர்களை
இஎறைவன் நண்பனாக ஏற்றுக்கொண்டான் (குரான் 4:125)
இசுலாம் , இப்ராஹிமின் மார்க்கம் என்றே அழைகப்படுகிறது (குரான் 2:135)
இப்ராகிம் மகன் இஷ்ஹாக், அவர் மகன் யாகூப் , வர மகன் யூசுப் என நான்கு தலைமுறை நபி என்ற சிறப்பும் இப்ராகிம் நபிக்கு உண்டு
ஒவொரு தொழுகையிலும் இப்ர்ராஹீம் நபி அவர்கள் பெயர் உச்சரிக்கப்பட்டு இப்ராகிம் நபிக்கு அருளியது போல் ஆசியையும் அபிவிருத்தியையும் இறைவன்முகமது நபி ஸல் அவர்களுக்க் வழங்க இறைவனிடம் வேண்டுகிறோம்
இன்னும் பல சிறப்புகளையும் இறைவன் நபி இப்ராகிம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறான்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் இப்ராகிம் நபியின் சிறப்புகளை சிந்திப்போம் ;
12072021mon
SherfuddinP
No comments:
Post a Comment