Sunday, 18 July 2021

தியாகத் திருநாள் குறிப்புகள் -7

 தியாகத் திருநாள் குறிப்பு கள் – 7

ஹஜ் பயணிகள் செலவேண்டிய இடங்களில் சில
மினா ,,அரபா ,முஸ்தலிபா ஆகும்
இதில் அரபா திடலில் ஒரு மதியம் முதல் பொழுது அடையும் வரை தங்குவது ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான கடமை ஆகும் .
அப்படிச் செய்யாவிட்டால் புனித ஹஜ் பயணம் நிறைவேறாமல் போய் விடும்
அதனால்தான் ஹஜ் பயணிகள் எங்கிருந்தாலும், --சிலர் வழி தவறி தொலைந்து போயிருக்கலாம் , இன்னும் சிலர் நோயுற்று மருத்துவ மனையில் இருக்கலாம் – அவர்களை எல்லாம் தகுந்த வாகன வசதி செய்து அரபா மைதனத்தில் கொண்டு வந்து விட்டு விட சவூதி அரசு ஏற்பாடு செய்யுமாம் .
அரபா மைதானத்தில் சிறப்புத் தொழுகை ஏதும் இல்லை . ஆனால் அங்கு இருக்கும் நேரத்தில் ஒவ்வொரு நொடியும் இறைவனை நினைத்து பாவ மன்னிப்புக் கோர வேண்டும் . .
ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள அரபா ஜபல் அற்ரஹமத் (பாவங்களை மன்னிக்கும் மலை) எனும் சிறப்புப் பெயரால் அழைக்கபடுகிறது.
இசுலாமிய ஆண்டின் மிகப் புனிதமான நாளாக அரபாவில் தாங்கும் அரபா தினம் அழைககப்ப டுகிறது . ஹஜ் பயணிகள் அனைவரும் (2019 -2500000-இருபத்தி ஐந்து லட்சம் ) அரபா மைதானம் எனும் ஒரே இடத்தில் கூடுகிறார்கள் .
அந்த அரபா நாள் தவிர ஆண்டின் மற்ற எல்லா நாளும் அந்த பரந்த வெளி எந்த விதத்திலும் பயன்படுத்தப் படுவதில்லை
நபி பெருமான் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் பேருரை நிகழ்த்தியது இந்த அரபா வெளியில்தான்
“மக்களே மிகக் கவனமாக கேளுங்கள், ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது.” என்று துவங்கி இசுலாத்தின் விதிகள், கடமைகள் என பலவற்றையும் பற்றிப் பேசி
“உங்கள் இறைவன் ஒருவனே,--மொழியாலோ ,இனத்தாலோ நிறத்தாலோ யாரும் உயர்ந்தவரும் இல்லை , தாழ்ந்தவரும் இல்லை . இறையச்சம் ஒன்றே உங்களை மேன்மைப்படுத்திக்காட்டும் “என்று சொல்லி நிறைவு செய்கிறார்கல்
கூடியிருந்த மக்கள் “ நீங்கள் நல்லதை எடுத்துரைத்து, நன்மை செய்து உங்கள் பணியை நிறைவேற்றி விட்டீர்கள் “ என சான்று சொல்கிறார்கள்
நபி அவர்கள் உரையை நிறைவு செயதவுடன்
“-------இன்று நாம் உங்களுக்கு உங்கள் மார்கத்தையும் ,உங்கள் மீது என் அருளையும் முழுமையாக்கி வைத்து விட்டோம்----- “ என்ற இறை வசனம் இறங்குகிறது (குரான் 5:3)
மார்க்கம் முழுமை ஆக்கப்பட்ட வசனம் பொருளில் “இக்மல் அத் தின் “ என இந்த வசனம் அழைக்கப்படுகிறது
அரபா பெரு வெளிக்கு வரு முன் மினா என்ற இடத்தில் உள்ள கூடாரங்களில் ஹஜ்ஜுப் பயணிகள் தங்க வேண்டும் . மிக வசதியான, குளிரூட்டப்பட்ட கூடாரங்கள்
. ஒரே மாதிரி தோற்றமளிக்கும் எண்ணற்ற கூடாரங்களின் உச்சியில் அடையாளம் காண்பதற்காக அந்த அந்த நாட்டுக் கொடி இருக்கும் . காட்சி உலகத்தையே ஒரே இடத்தில் காண்பது போல் தோன்றும்
அரபாவிலிருந்து முஸ்தலிபா என்ற இடத்துக்குப் போய் திறந்த வெளியில் இரவு தங்க வேண்டும் . அங்கு மினாவில் ஷைத்தான் மேல் எறிவதற்குத் தேவையான கற்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும்
நபி இப்ராகிம் அவர்கள் இறைவன் கட்டளைப்படி தன மகனை பலி கொடுக்க்கச் செல்லும்போது சைத்தான் அவரை மூன்று முறை தடுக்க முயற்சிக்கிறான் . எனவே அந்த சைத்தான் மேல் ஹஜ் பயணிகள் கல்லெறிவது ஒரு கடமையாகும் .
கல்லெறியும் இடம் ஜம்ரத்துல் உலா என்று பெயர் . கூட்ட நெரிசல் தாங்க முடியாதவர்கள் கற்களை பிறரிடம் கொடுத்து விட்டு ஏறியச் செய்யலாம் .
இதற்குப்பின் விலங்குகள் பலி கொடுத்து தலை முடியைக் களைந்து விட்டால் ஹஜ் கடமை நிறைவேறி விடுகிறது .இஹ்ராம் உடையைக் களைந்து வேறு உடை அணிந்து கொள்ளலாம்
பக்ரித் என்பது ஆடு அறுத்து பிரியாணி ஆக்கிக் கொண்டாடும் திருவிழா , பண்டிகை என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது .
இசுலாத்தில் முக்கிய இரண்டு திரு நாட்கள் – ஓன்று ரம்ஜான் எனப்படும் ஈகைத் திருநாள் – இதில் தருமம் செய்வது மூலம் செல்வம் பகிர்ந்தளிப்பது வலியுறுத்தபடுகிறது
அடுத்து பக்ரித் எனப்படும் தியாகத் திருநாள் – இப்ராகிம் நபியின் தியாகத்தை , இறையச்சத்தை நினவு கொள்ளவே ஆடு அறுக்கப்படுகிறது . அதிலும் மூன்றில் ஒரு பங்கு வசதி குறைந்தவர்க்ளுகுக் கொடுத்து விடவேண்டும் என்று தியாகமும் ஈகையும் ஒருங்கே வலியுறுத்தப்படுகிறது
“ பலியிடும் விலங்கின் சதையோ குருதியோ என்னை வந்தடைவதிலை .உங்கள் இறையச்சம் மட்டுமே என்னை வநதடையும் “ என இறைவன் தெளிவாக்குகிறான் (குரான் 22:37)
ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்கள் ஹாஜி என அழைக்கப்படுவார்கள் . இன்னும் சில முறை காபாவை வலம் வந்து (தவாப்) செய்து கண்ணீர் மல்க காபவிடமிருந்து விடை பெற்றுகொள்வார்கள்
ஹஜ் பற்றி முழுமையாக சொல்லவில்லை . குறிப்புகள் மட்டுமே கொடுத்திருக்கிறேன் .
சொல்லும் செய்திகளில் தவறுகள் வந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன்
அதையும் மீறி தவறுகள் வந்திருந்தாள் கருணையே உருவான இறைவன் மன்னிப்பானாக
பொருளாலும் உடலாலும் தகுதி உடைய அனைவருக்கும் ஹஜ்ஜை நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவனாக
இறைவன் நாடினால் நாளை மதீனாவில் சிந்திப்போம்
18072021sun
SherfuddinP
.

No comments:

Post a Comment