தியாகத் திருநாள் – குறிப்புகள் -3
சென்ற இரு பகுதிகளில் நபி இப்ராஹீன் சிறப்புகள் பற்றிப் பார்த்தோம் .இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம் .இருந்தாலும் ஒரு அளவோடு அதை நிறுத்திக் கொண்டு நபி இப்ராஹீமின் நீண்ட வரலாறை –சில வரலாற்றுக் குறிப்புகளை - மிகச் சுருக்கமாகப் பாப்போம்
நபி மூசா போல் இவருக்கும் பிறக்கும்போதே அந்த நாட்டு மன்னருக்கு இவரால் ஆபத்து என்ற அறிவிப்பால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது . எனவே .மறைவாகவே வாழ்நதார் .அவருக்கு மிக சிறிய வயதிலேயே இறைவன் ஞானத்தை அளித்தான்
“-------முன்னரே இப்ராஹிமுக்கு நாம் நேர் வழியைக் காண்பித்தோம் ;அவரைபப்ற்றி நாம் அறிந்திருந்தோம் “(குரான் 21:51)
பெற்ற ஞானத்தை மேலும் திடப்படுத்த நீண்ட தொலைவு பயணித்து பலதலைமுறைக்கு முந்திய நுஹ் நபியிட மிகப்பல ஆண்டுகள் கல்வி கற்றார்
தோன்றி மறையும் ஞாயிறோ ,நிலவோ,விண் மீன்களோ இறைவன் அல்ல ..இவற்றையும் , இன்னும் வானையும் மண்ணையும் அவற்றுற்கு இடையில் உள்ள அனைவற்றையும் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் வல்லமை பெற்ற ஒருவனே உண்மையான இறைவன் என்று உணர்ந்தார்
தான் அறிந்து உணர்ந்தவற்றை அவர் எடுத்துச் சொலும்போது மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது ,.சொந்தத் தந்தையே மகனை கல்லால் அடித்துக் கொல்ல முயற்சித்தார்
இன்னும் தீவிரமாக் தன ஏக இறைக் கொள்கையை பரப்பும்போது அவரை நெருப்புக் குண்டத்தில் தூக்கிப் போட்டனர் எதிரிகள் . இறைவன் நிகழ்த்திய அற்புதத்தால் அதிலிருந்து தப்பித்தார்
புனித இறை இல்லமான கபாவை புனரமைக்குமாறு இறைவன் இட்ட கட்டளையை மேற்கொண்டு நபி இபுராஹிம் அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள்
பிறகு இறைவன் :’இப்ராஹீமே உலக மக்களை புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுங்கள் “ என்கிறான்
“உலக மக்களுக்கு என் குரல் எப்படி எட்டும் ?” என்று இப்ராகிம் கேட்க , அழைப்பு விடுப்பது மட்டுமே உமது பணி .மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் “ என்கிறான்
அரபாத் மலையில் ஏறி உரத்த குரலில் “ இறைவன் உங்களுக்கு கடமை ஆக்கி உள்ள புனித ஹஜ் பயணத்தை நிரிவேற்றுங்கள் “ என்று இப்ராகிம் அழைகிறார் (குரான் 22:27)
அன்றிலிருந்து இன்று வரை இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஆண்டு தோறும் உலகெங்கிலிருந்தும் லட்சக் கணக்கான மக்கள் புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்
நபி இப்ராஹீமையும் அவரது உறவினர் லூத் நபியையும் இறைவன் புண்ணிய பூமியான பாலஸ்தீனத்துக்கு அனுப்பி வைக்கிறான் (குரான் 21:71)
நபி இப்ராகிம் 175 வயது வரை வாழ்ந்தார் ,அவரது உடல் ஹெப்ரான் என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்கிறது வரலாறு
நான் சொனது நபியின் வரலாறு அல்ல . சில குறிப்புகள் மட்டுமே
ஏற்கனவே நபி வரலாறு முழுதாக தலை முறை இடைவெளி என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
14072021wed
SherfuddinP
No comments:
Post a Comment