Saturday, 17 July 2021

தியாகத் திருநாள் குறிப்புகள் -6

 தியாகத் திருநாள் குறிப்புகள் -6

நேற்றைய பதிவில் புனித ஆலயம் காபா பற்றி சில குறிப்புகள் பார்த்தோம் வேறு சில புனிதத் தலங்கள் பற்றி இன்று பார்ப்போம்
ஸபா மர்வா , ஜம் ஜம் ஊற்று
நபி இப்ராகிம்இறைவன் கட்டளைப்படி தன் மனைவி ஹாஜரையும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் பாலை வனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறார் . அவர் கொடுத்து விட்டுப்போன உணவும் நீரும் தீர்ந்து விட குழந்தையின் தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தேடி ஹாஜர் அங்கும் இங்கும் அலைகிறார் .
ஒரு பக்கம் ஸபா இன்னொரு பக்கம் மர்வா என சிறு குன்றுகள் . ஒரு குன்றின் உச்சியில் ஏறி தண்ணீர் எங்காவது இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஒன்றும் கிடைக்காத்தால் மறு குன்றின் உச்சியில் எறிப்பார்க்கிறார்.
இப்படி எழு முறை இரு குன்றுகளுக்கும் இடையே ஓடுகிறார் . இதற்கிடையே மகன் பாதுகாப்பாக இருக்கிறாரர என்பதையும் பார்த்துக்கொள்கிறார் .
மகன் கண்ணில் படும்போது சற்று நிதானமாகவும்
கண்ணில் படாத இடங்களில் வேகமாகவும் ஓடுகிறார்
இதற்கிடையே இறைவன் கட்டளைப்படி இறைத் தூதர் ஜிப்ரில் அலை அவர்கள் குழந்தைக்கு அருகே ஒரு நீரூற்றை உண்டாக்க அதிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரை பெருக்கெடுக்காமல் நிற்கும்படி அன்னை ஹாஜர் ஜம் ஜம் என்று சொல்ல அதுவே அந்த நீருற்றுக்குப் பெயராகி விட்டது
அன்று துவங்கி இன்று வரை, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக் தண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருக்கிறது . காபாவுக்கு வரும் லட்சக்கணக்கானோர் பயன் படுத்தும் அளவுக்கு வந்து கொண்டே இருக்கிறது மேலும் அந்தப்பகுதியில் பல கி மீ தொலைவுக்கு எந்த நீர் ஆதாரமும் கிடையாது
பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த நீருற்று யாரும் போக முடியாத அளவுக்கு மூடப்பட்டு தண்ணீர் மட்டும் இறைத்து விநியோகிக்கப்படுகிறது
ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரின் தரம், தூய்மை மிக நவீன முறைகளில் பரிசோதிக்கப்படுகிறது . மிக அதிகம் கூட்டம் கூடும் புனித ரமலான் மாதத்தில் ஒரு நாளைக்கு நூறு முறை பரிசோதிக்கப்படுகிறது .
ஜம் ஜம் நீர் உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ எங்கும் விலைக்கு விற்கப்படுவதில்லை
நிறம், மனமற்ற இந்த நீர், பல ஆண்டுகளாக அப்படியே கெட்டுப்போகாமல் இருக்கும்
அன்னை ஹாஜர் ஸபா மர்வாகுன்றுகளுக்கு இடையே ஓடியதை நினைவு கொள்ளும் வகையில் இன்றும் ஹஜ் பயணிகள் ஸபா , மர்வாவுக்கு இடையே எழு முறை ஓட வேண்டும் .
அன்று அன்னை ஹாஜர் ஓடியது கடும் வெய்யிலில் கொதிக்கும் பாலை வன மணலில்
இன்றோ வழுவழு தரை , குளிர்பதன வசதி , அன்னை ஹாஜர் போல் வேகமாக மெதுவாக ஓட வேண்டிய இடங்களைக் குறிக்கும் வண்ண விளக்குகள் .ஆங்காங்கே உட்கார்ந்து ஒய்வு எடுக்க இடங்கள்,
நடக்க முடியாதவட்களுக்கு சக்கர நாற்காலிகள் , இருசக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர் ) என பல வசதிகள்
ஒரு முறைக்கு அரை கி மீ யாக மொத்தம் மூன்றரை கி மீ வரும்
ஸபா மலைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு
அண்ணல் நபி ஸல் அவர்கள் முதன் முதலில் இசுலாம் பற்றி பரப்புரை செய்தது இந்த மலை மேலிருந்துதான் . எவ்வளவு எதிர்ப்பு , எத்தனை வசை மொழிகள் ! அது ஒரு தனிக்கதை
அதற்கு நேர் மாறாக அண்ணல் நபி ஸல் அவர்கள் வெற்றி வீரராக மக்காவில் நுழைந்து மக்களிடம் உரையாற்றியதும் இதே மலை மேலிருந்துதான் . எதிர்த்தவர்கள் , வசை பாடியவர்கள் எல்லோரும் மிகுந்த பணிவுடன் , ஒரு வகை அச்சத்துடன் அவர் உரையைக் கேட்டனர்
“ நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் இறைவனின் அடையாளங்கள் . புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள் இவற்றிற்கு இடையே ஓடுவது தவறு கிடையாது ---------“(குரான் 2:158)
இரண்டு குன்றுகளுக்கு இடையே ஓடுவது தவறு , பாவம் என்றொரு கருத்து உலவ ஆரம்பித்த காலத்தில் அதைத் தெளிவு படுத்தவே “ தவறு இல்லை , பாவம் இல்லை “ போன்ற சொற்கள் . மற்றபடி ஸயி எனப்படும் இந்த ஓட்டம் புனிதப் பயணத்தில் கட்டாயக் கடமையாகும்
இறைவன் நாடினால் மீஎண்டும் நாளை சிந்திப்போம்
17072021sat
SherfuddinP

No comments:

Post a Comment