தியாகத் திருநாள் குறிப்புகள் -9
உம்ரா
சிறிய ஹஜ் எனப்படும் உம்ராவும் ஒரு புனிதச் செயலாகும்
ஹஜ் பயணம் ஆண்டின் குறிப்பிட்ட (துல்ஹஜ்) மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும்
உம்ரா பெரும்பாலும் ஆண்டு முழுதும் செய்யலாம் .ஹஜ்ஜை நிறைவேற்ற சில நாட்கள் ஆகும் . உம்ரா சில மணி நேரத்தில் முடிந்து விடும்
ஹஜ்ஜைப்போல உம்ராவுக்கும் உடல் சுத்தம் ,புலனடக்கம் அவசியம் . இஹ்ராம் உடையும் அணிய வேண்டும் மனதில் உம்ரா செய்ய உறுதி கொள்ள வேண்டும்
நிய்யத் எனும் இந்த மன உறுதி இசுலாத்தில் ஒரு மிக அவசியமான செயலாகும்
Thought is deed என்பது ஒரு கோட்பாடு
தொழுகை, நோன்பு , ஹஜ், உம்ரா சக்காத் எனும் தருமம் போன்ற முக்கிய மதக் கடமைகளுக்கு நிய்யத் எனும் மன உறுதி மிக அவசியமான ஓன்று .
நிய்யத் செய்யாமல் தொழுதாலோ , நோன்பு வைத்தாலோ , ஹஜ் உம்ரா செய்தாலோ தருமம் கொடுத்தாலோ அது நிறைவுறாது,
நிய்யத் என்பது மிக எளிதான ஓன்று
எடுத்துக்காட்டாக காலை (சுபுஹு ) தொழுகையின் காட்டாய (பரல் ) தொழுகை இரண்டு ரக்கத் என்றால்
சுபுஹு தொழுகையின் பர்லான இரண்டு ரக்கத்தை இறைவனுக்காக மேற்கு (கிப்லாவை ) நோக்கித் தொழுகிறேன்
இறைவன் மிகப் பெரியவன் ( அல்லாஹு அக்பர்)
ஏன்று அரபு மொழியில் அல்லது தமிழில் மெதுவான குரலில் சொல்லிக் கொள்ள வேண்டும் . அவ்வளவுதான் .
இந்த எளிய சொற்களை மனதில் நினைத்து சொல்லாவிட்டால் தொழுகை நிறைவேறாது
தொழுகை என்பது வெறும் உடல் சார்ந்த செயலாக இல்லாமல் மனம் ஒன்றிச் செய்யவேண்டும் என்பதே இதன் நோக்கம்
இதே போல்தான் மற்ற எல்லா மதம் சார்ந்த செயல்களுக்கும் நிய்யத் செய்ய வேண்டும்
இஹ்ராம் உடையுடன் காபாவை ஏழுமுறை வலம் வரும் தவாப் ,ஸபா , மர்வாவுக்கு இடையே சயி என்னும் நடை ஓட்டம் எழு முறை , செய்து தலை முடியைக்களைந்து விட்டால் உம்ரா நிறைவேறி விடுகிறது
காபாவின் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் வாகனங்களி ல் இஹ்ராம் உடை வைத்திருப்பர்கள்
காபாவுக்குப் போகும் வாய்ப்புக் கிடைக்கும்போது முடிந்தால் உம்ரா செய்து விடுவார்கள்
ஹஜ் செய்பவர்கள் பெரும்பாலும் உம்ராவும் சேர்த்தே செய்து விடுவார்கள்
உம்ரா என்பது ஹஜ் போல் கட்டாயக் கடமை இல்லை
புனித ரமலான் மாதத்தில் உம்ரா செய்து ஹஜ் செய்வதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது
குரான் வசனங்கள் (2:158) (2:196) இரண்டிலும் ஹஜ் , உம்ரா பற்றி வருகிறது
இறைவன் நாடினால் நாளை எங்கள் ஹஜ் பயணம் பற்றிய பதிவுடன் சிந்திப்போம்
20072021tue
Sherfuddin P
No comments:
Post a Comment