Tuesday, 13 July 2021

தியாகத் திருநாள் குறிப்புகள் -2

 தியாகத் திருநாள் குறிப்புகள் 2

தொடர்ந்து நபி இப்ராகிம் அவர்களின் சிறப்புகள் சில :
இசுலாமியர்களாலும் , கிறித்தவர்களாலும் ,யூதர்களாலும் நபியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்
இறைவனிடமே கேள்வி கேட்கத் த்துணிந்த பகுத்தறிவாளர்
“இறைவனே , மரணித்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறீர்கள் என்பதை செய்து காண்பியுங்கள் “ (குரான் 2:260)
இறைவனும் இந்த நல்லடியானின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நான்கு பறவைகளை அறுத்து,ஒவ்வொரு பகுதியையும் வேறு வேறு மலைகளில் வைத்து விடுங்கள். பிறகு அவற்றை கூப்பிடுங்கள் . இறைவன் அருளால் அவை உயிர் பெற்று வரும் என சொல்கிறான் அதன் படி அவை உயிர் பெற்று வர நபி இப்ராஹிமுக்கு மனத் தெளிவு உண்டாகிறது
இறைவன் கட்டளைப்படி புனித இறை இல்லம் காபாவை புனரமைத்த சிறப்பும் இப்ராகிம் நபிக்கு உரியது
முதுமை அடைந்த இப்ராஹிமுக்கு இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது
அந்தக் குழந்தை நடக்கும் பருவத்தை அடைந்தபோது ஈப்ராஹீம் நபிக்கு வந்த கனவில் குழந்தையை பலி கொடுக்குமாறு இறைவன் சொல்கிறான்
தந்தை மகனிடம் கேட்கிறார் “ இப்படி ஒரு கனவு கண்டேன் , இது பற்றி உன் கருத்து என்ன” என்று . மகன் சிறிதும் தயங்காமல் “ இறைவன் கட்டளை அப்படி என்றால் அதை உடனே நிறைவேற்றுங்கள் என்கிறார்
நிறைவேற்றப் போகும் நேரத்தில் இறைவன் இப்ராஹிமை அழைத்து பலியைத் தடுத்து விடுகிறான் . உம்மை சோதிக்கவே இவ்வாறு செய்தோம்.உம் புகழ் நிலைத்து நிற்கும் என ஆசி கூறுகிறான் (குரான் 37:102 106)
மேலும் இறைவனே ஒரு பெரிய ஆட்டை அனுப்பி அதை பலி கொடுக்கச் சொல்கிறான்
மிகப் பெரிய இந்தத் தியாகத்தின் நினைவாகவே தியாகத் திரு நாள் அன்று ஒரு ஆட்டை (அல்லது மாட்டை, ஒட்டகத்தை) பலியுடும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது ,
அதிலும்மூன்றில் ஒரு பகுதி ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது
“ நீங்கள் பலியிடும் விலங்கின் சதையோ இரத்தமோ இறைவனை அடைவதில்லை . உங்கள் தியாகம் , இறையச்சமே இறைவனை சென்றடையும் “ என இறைவன் தெளிவு படுத்துகிறான் (குரான் 22:37)
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
13072921tue
SherfuddinP
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment