Tuesday, 6 July 2021

தமிழ் - நானொரு சிந்து - விடுகதை

 நானொரு சிந்து

உங்கள் சிந்தனைக்கு சில எளிய விடுகதைகள்
உணவை எடுப்பாள்
உண்ணாமல் வைத்திடுவாள்
உடல் மெலிந்த பெண்
அவள் யார் ?
குளம் குட்டைக்குளம்
பாம்பு ரெட்டைப்பாம்பு
குருவி மஞ்சள் குருவி
குளம் வத்திப்போச்சு
பாம்பு செத்துப்போச்சு
குருவி பறந்து போச்சு
அது ஏன்ன ?
இறைவன் நாடினால் விடைகளுடன் நாளை தமிழில் சிந்திப்போம்
விடை
முதல் விடுகதை – அகப்பை
இரண்டாவது – விளக்கு
அகப்பை என்பது கொட்டாங்கச்சி (தேங்காய் ஓடு)) யினால் செய்யப்படும் கரண்டி போன்ற ஓன்று .அகப்பை பார்க்காதவர்கள் படத்தைப் பார்க்கவும்
விடைக்கு விளக்கம் தேவையில்லை .
விளக்கு
குளம்- விளக்கு
பாம்பு – திரி
குருவி- தீப ஒளி
எண்ணெய் தீர்ந்து போனவுடன் விளக்கு அணைந்து விடும்
Spoon கரண்டி என முதல். விடுகதைக்கு ஓரளவு சரியான விடை அனுப்பிய சகோ அஷ்ரப் ஹமீதா. ஜோதி க்கு வாழ்த்துகள்

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
07072121wed
SherfuddinP
Like
Comment
Share

No comments:

Post a Comment