Friday, 16 July 2021

தியாகத் திருநாள் குறிப்புகள் -5

 தியாகத் திருநாள் குரிப்புகள் 5

புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் போக வேண்டிய இடங்கள் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்
புனித காபா
உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள இறைவனை வழிபடும்போது தங்கள் பார்வையை மக்கமாநகரில் உள்ள காபாவை நோக்கி செலுத்துகிறார்கள்
ஒன்றைத் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் . .வழிபடுவது , வணங்குவது இறைவனை மட்டுமே, காபாவை அல்ல
ஒரு ஒழுங்கு, ஓற்றுமைக்காக காபாவை நோக்கித் தொழுகிறார்கள்
“நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை புனித
ஆலயத்தை நோக்கித் திருப்பிக் கொள்ளுங்கள் “(குரான் 2:144)
இப்படி உலக மக்களின் தொழுகை அனைத்திலும் நினைவு கூறப்படும் காபா எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி பல செய்திகள் சொல்லப்படுகின்றன
மனிதகுலம் குலம் உலகில் தோன்று முன்பே மலக்குமார்கள் எனப்படும் இறை தூதர்களால் கட்டப்பட்டது, முதல் மனிதர் ஆதமே காபாவில் வழிபட்டார் என்றும் சொல்லப்படுகிறது
இறைவன் ஆணைப்படி நபி இப்ராஹிமும் அவர் மகன் இஸ்மாயிலும் காபாவுக்கு அடித்தளம் கட்டியதாக குரான் வசனம் சொல்கிறது (2:127)
ஹஜ் பயணத்தின் முக்கியக் கடமைகளில் ஓன்று காபாவைச் சுற்றி எதிர் கடிகாரச் சுற்றாக ஏழு முறை வலம் வரும் தவாப்
காபாவின் கிழக்கு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல் அஸ்வத் என்று அழைக்கப்படுகிறது .இந்தக்
கல் நபி இப்ராஹீம் காபாவை கட்டிக்கொண்டிருக்கையில் இறைவனால் அனுப்பப் பட்டது என்றும் இது இவ்வுலகையும் மறுமை உலகையும் இணைக்கும் ஒரு அடையாளம் என்றும் நம்பப் படுகிறது
இந்தக் கல்லை தொட்டு முத்தமிடுவது கடமை அல்ல . இருந்தாலும் ஹஜ் பயணிகள் அதற்கு பெரிதும் முயற்சி செய்வார்கள் . லட்சக் கணக்கில் மக்கள் கூடும் இடத்தில் இரு சிறிய கல்லைத் தொட முயற்சிப்பது மிகக் கடினமான ஆபத்தான ஓன்று
அது போல நபி இப்ராகிம் தொழுகை நடத்திய இடத்தில் உள்ள மக்கமே இப்ராகிம் என்ற கல்லும் இறைவனால் அனுப்பப்பட்டது என்று ஒரு நம்பிக்கை
பல முறை திருப்பிக் கட்டப்பட்ட காபாவில் மாறாமல் முதலில் இருந்தபடியே இருப்பது அஸ்வத் கல்லும் , மக்கமே இப்ராஹிமும்தான்
முதல் முறையாகக் காபாவைப் பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும் . மனம் உருகி நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும்
லட்சக் கணக்கான மக்கள் இஹ்ராம் உடையில் லப்பைக் கல்லாஹும்ம லப்பைக் ( உன் அழைப்புக் கட்டுப்பட்டு வந்து விட்டேன் இறைவா ) என்ற முழக்கத்துடன் காபாவை வலம் வருவது நெஞ்சில் நிலைத்து நிற்கும் ஒரு காட்சி
ஆண்களும் பெண்களும் ஒன்றாக நின்று தொழுகை நடத்தும் ஒரே இடம் காபா மட்டுமே
இசுலாமிய புனிதத் தலங்களில் காபாவைத் தவிர வேறு எங்கும் சுற்றி வலம் வர அனுமதி இல்லை
காபாவைப் பற்றி சுருக்கமாக சில குறிப்புகளைக் கொடுத்திருக்கிறேன்
இனி வரும் பகுதிகளில் ஹஜ்ஜுப் பயணத்தில் போகும் மற்ற சில இடங்கள் பற்றிப்பார்ப்போம்
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
16072021fri
SherfuddinP
.
Like
Comment
Share

No comments:

Post a Comment