தியாகத் திருநாள் குறிப்புகள் -4
புனித ஹஜ் பயணம்
இறைவன் ஒருவனே ,நபி ஸல் இறைவனின் தூதர் என உறுதியாக நம்புவது, இறைவணக்கம் , புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் , சக்காத் எனும் தருமம் , புனித ஹஜ் பயணம் என ஐந்து கடமைகளை இசுலாம் வலியுறுத்துகிறது இசுலாத்தின் ஐந்து தூண்கள் எனப்படும்
இவற்றில் முதல் மூன்றும் எல்லோர் மீதும் கட்டாயக் கடமை
சக்காத் எனும் தருமம் ஒரு அளவுக்கு மேல் பொருளாதார் வசதி உள்ளவர்களுக்கு கடமை .
புனித ஹஜ் பயணம் பொருள் வசதியும் உடல் நலமும் உள்ளவர்களுக்கு கட்டாயக் கடமை
வசதி என்பது பணத்தை விட அவரவர் மன நிலையைப் பொறுத்தது . அதற்கெல்லாம் மேல் இறைவன் நாட வேண்டும்
வசதிக் குறைவான பலர் ஹஜ் பயணத்தை நிறைவேற்றுகிறார்கள் .மிகப் பெரும் செல்வந்தர் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை
இந்த ஹஜ் பயணம் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்
அரபு நாட்டில் உள்ள மக்கமாநகரில் அமைந்துள்ள காபா எனும் இறை இல்லம் ஏக இறைவனுக்காக முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம் .
இசுலாமியி ஆண்டின் நிறைவு மாதமான துல்ஹஜ் மாதத்தின் முதல் எட்டு முதல் ப்நிரெண்டு /பதின்மூன்று தேதிகளில் புனித ஆலயம் காபா, அதைச் சுற்றியுள்ள சில புனித இடங்களுக்குப் போய் சில கடமைகளை நிறைவேற்றுவதே புனித ஹஜ் பயணம் எனப்படுகிறது
இதில் நிறைவேற்றவேண்டிய சில முக்கிய செயல்கள்
முதலில் புனித ஹஜ் பயணம் செய்ய மனதில் உறுதி கொள்ள வேண்டும் .மக்க மாநகரின் எல்லைக்குள் நுழையுமுன் இஹ்ராம் எனும் தையல் இல்லாத இரண்டு துணிகளால் ஆன ஆடையை ஆண்கள் அணிய வேண்டும்,. புனித காபா ஆலயத்தை எதிர் கடிகாரச் சுற்றாக ஏழு முறை வலம் வர வேண்டும். இது தவாப் எனப்படும்
ஸபா மர்வா எனும் குன்றுகளுக்கிடையே நடந்தும் ஓடியும் எழு முறை கடக்க வேண்டும் .இது சயி என்று சொல்லப்படும் புனித ஜம் ஜம் நீரை அருந்த வேண்டும் மினா என்ற இடத்தில் கூடாரத்தில் பின் முஸ்தலிபா என்ற இடத்திலும் தங்க வேண்டும் ,ஷைத்தான் மேல் கல் எரிய வேண்டும் .
மிக முக்கியமாக அரபாத் எனும் பெரிய திடலில் தங்க வேண்டும் . ஒரு ஆட்டைப்பலி கொடுத்து ஆண்கள் தலை முடியைக் களைய வேண்டும் .பெண்கள் தங்கள் தலை முடியில் சிறிது வெட்டிக்கொள்ள வேண்டும்
இஹ்ராம் ஆடையில் இருக்கும்போது சோப்பு , நறுமணப் பொருட்கள், பற்பசை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் .புலனடக்கம் பொறுமை காத்தல் மிக அவசியம்
ஹஜ்ஜின் நன்மைகள் , சிறப்புகள்
ஹஜ் செய்வதனால் ஒரு கடமை நிறைவேற்றப்படுகிறது . மற்ற கடமைகள் போலால்லாமல் வாழ்வில் ஒரு முறை ஹஜ் செய்தாலே கடமை நிறைவேறுகிறது
வசதி வாய்ப்பும் உடல் நலமும் இருந்தும் தகுந்த காரணம் இல்லாமல் ஹஜ் செய்யாமல் இருப்பது தவறு .
ஹஜ் செய்வதனால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
இஹ்ராம் உடை என்பது உடலத்துக்குப் போடப்படும் உடையை நினைவு படுத்தும் . அந்த உடையை அணிந்த உடனே மனதில் உள்ள செருக்கு,ஆணவம் தொலைந்து ஒரு துறவு நிலை ,இறையருளை வேண்டி கையேந்தி நிற்கும் ஒரு யாசகன் நிலைக்கு மனம் போய்விடும்
பொதுவாக பன்னாட்டு விமான பயணம் மேற்கொள்பவர்கள் நல்ல மிடுக்காக உடை அணிந்து செல்வார்கள் . ஆனால் ஹஜ் பயணிகள் இஹ்ராம் உடையில்தான் பயணிப்பார்கள்
பலநாடு, மொழி, கலாசாரம் ,நிறம் கொண்ட மனிதர்கள் ஒரே இடத்தில் கூடும்போது மனித உணர்வுகள், சமத்துவம், ஒற்றுமை மேம்படுகிறது
பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹஜ் செய்தவர்கள் ஹாஜி என்று அழைக்கப்படுவது ஒரு சமூக உயர்வை அளிக்கிறது
புனித திருமறை குர்ஆனில் ஹஜ் பற்றி குறிப்பிடும் வசனங்கள்
2: 125158 189 196 197 198 200 201 203
3: 96, 97 5:1 2 94 95 96 9: 2, 36, 37
22: 26 27 28 29 33 36 48:27
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
15072021thu
SherfuddinP
)
No comments:
Post a Comment