Monday, 19 July 2021

தியாகத் திருநாள் குறிப்புகள் -8

 தியாகத் திருநாள் குறிப்பகள் -8

நபி ஸல் அவர்கள் பிறந்து வளர்ந்த மக்கமா நகரில் அவரைக் கொலை செய்ய எதிரிகள் முயற்சிக்க . இறைவன் ஆணைப்படி இரவோடு இரவாக அந்த ஊரை விட்டுக் கிளம்புகிறார்கள் . பல நாள் பயனத்துகுப்பின் அவர்கள் வந்து சேர்ந்த ஊர் மதீனாவகும்
ஒளிமயமான நகரம் எனப்பொருள் படும் அல் மதினா
அல் முனவ்வரா என்ற சொல்லே சுருக்கமாக் மதீனா என்று ஆனது
காபா ஆலயம் அமைந்துள்ள மக்கமா நகர் இசுலாமியர்களுக்கு மிகவும் புனிதமான நகராகப் போற்றப் படுகிறது . அதற்கு அடுத்த புனித நகர் மதினாவாகும்
இறைவன் அருள் பெற்ற இந்த நகருக்கு பல சிறப்புகள் சொல்லபடுகின்றன : அவற்றில் சில
கொள்ளை நோய்கள் அணுகாது
தீயவர்களை வெளியேற்றி விடும்
இங்கு உயிர் பிரிவது மிகவும் நன்மை பயக்கக் கூடியது
நபி ஸல் அவர்களுக்கு மிகவும் பிடிதமான இந்த நகரில் உள்ள அன்சாரிகள் எனப்படுவோர் மக்காவிலிருந்து சொத்து சுகம் வீடு வாசல் எல்லாவற்றையும் விட்டு தப்பி வந்த இசுலாமியர்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து, தங்கள் வணிகத்தில் ,விளை நிலத்தில் ,சொத்தில் பகுதியைக் கொடுத்து ஆதரித்தனர்
நபி ஸல் அவர்கள் அமைத்த மஸ்ஜித் நபவி என்ற பள்ளி இங்குதான் இருக்கிறது . நபி அவர்கள் உயிர் பிரிந்த நல்ல டக்கம் செய்யப்பட்டதும் மதினாவில் ரவ்லா என்ற இடத்தில்தான் .
உலகப் புகழ் பெற்ற இசுலாமியப் பல்கலைக்கழகம் மதினாவில் உள்ளது
நபி அவர்கள் வாழ்ந்த வீடும், அவர்கள் தொழுகையின் போது
உரையாற்றிய மேடையும் இன்றும் பழமை வடிவில் பாதுகாக்கப் படுகின்றன
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபித் தோழர்கள் (சகாபாக்கள்) நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட ஜன்னத்துல் பக்கி எனும் மைய வாடி மதினாவில் இருக்கிறது
இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்டது மதீனா . அதனால்தான் ஹஜ் கடமைகள் எல்லாம் மக்காவோடு நிறைவுற்றாலும் அங்கிருந்து நானூறு கி மீ தொலைவில் உள்ள மதினாவுக்கு பெரும்பாலான ஹாஜிகள் தவறுவதில்லை
மதீனாவில் நாற்பது வேளை தொழுகையை நிறைவேற்றுவதும். நபி அவர்கள் நல்ல டக்கம் செய்யப்பட்ட ரவ்லாவைப் பார்ப்பதும் மிகவும் சிறப்பான செயல்களாகும்
மக்காவில் இருக்கும் வரை ஹஜ்ஜை நல்லபடியாக நிறைவேற்ற வே ண்டும் என்ற ஒரு பரபரப்பு மனதில் இருக்கும் .
இறைவன் அருளால் அதை முழுமையாக நிறைவேற்றி விட்டு மதினா வருவதால் இங்கு அந்தப் பரபரப்பு நீங்கி மனம் அமைதியாக இருக்கும் .
நலம் மிக்க நகரம் என்று பொருள்படும் தாபா என்ற பெயரும் யத்ரீப் என்ற பெயரும் மதினாவுக்கு உண்டு
இறைவன் நாடினால் நாளை
ஹஜ் –உம்ரா பற்றிய சிறிய குறிப்புகளோடு சிந்திப்போம்
19072021mon
Sherfuddin P

No comments:

Post a Comment