வந்த வழியை அறிவோம்
வினா விடை
13052023 அன்று தம்பி ஷகா வீட்டில் நடை பெற்றது
தொகுப்பு
சர்புதீன் பீ
S/ O Haji commissioner
Peer Muhammad and
Katheeja
My father is son of
Kader Ambalam (S/O Peer Muhammad and Syadha)
My. Mother is daughter of Peer Muhammad and Synambu
வினாக்கள்
1 ஊருக்கு நீதி வழங்கும் அவர் மேல் ஒரு குற்றச் சாட்டு
உடனே சிறிதும் தயங்காமல் தன் இருக்கையை விட்டு இறங்கி அங்கு வேறு ஒருவரை அமர்த்தி தன் மேல் குற்றம் ஏதும் இல்லை என உறுதிப் படுத்தப் பட்ட பிறகே மீண்டும் பதவி ஏற்றார்
அவர் யார் !
எங்கள் தந்தையின் தந்தை
காதர் அம்பலம் அவர்கள்
2. அவரின் பெற்றோர் யார் ?
பீர்முகம்மது
சையதா
3 அவரின் தாய் ஒரு மிகவும் மாறுபட்ட , எந்தத் தாயும் கேட்கத் தயங்கும் ஒரு வேண்டுகோளை இறைவனிடம் சமர்ப்பித்தார்
அது என்ன ,ஏன் ?
தன் மகன் காதர் அம்பலம் வாழ்நாள் முழுதும் தாயாகிய அவர் துணையாக இருக்க வேண்டும் என்பது
காரணம் காதர் அம்பலம் எதிர்பார்க்கும் சுத்தத்துக்கு ஈடு கொடுத்து அவரைக் கவனிக்க
குறிப்பாக சாப்பாடு பறிமாற அவர் தாயால் மட்டும்தான் முடியுமாம்
சுத்தத்தில் சற்று குறைவு இருந்தாலும் கோபம் கொண்டு சாப்பிடாமல் போய்விடுவாராம
அந்தத் தியாக உள்ளத்தின் கோரிக்கைக்கு இறைவன் செவிசாய்த்து நிறைவேற்றி வைக்கிறான்
எங்கள் தந்தையின் பட்ட நிறைவுத தேர்வு நடக்கையில் காதர் அம்பலம் மறைந்து விட்டார்
4 மாங்குடிக் கிழவன் என அறியப்பட்டவர் யார் ?
எங்கள் அம்மாவின் தந்தை. பீர்முகம்மது
5 சுபாஷ் சந்திர போசின் INA வில் பணி புரிந்தவர் ?
எங்கள் தாய்மாமா சுல்த்தான்
6 அந்தக் காலத்திலேயே வெளி நாட்டில் பணிபுரிந்து அந்த நாட்டு மொழியை பேசும் அளவுக்குக் கற்றவர் ?
எங்கள் மாமா (என் மாமனார்) பீ மூ என்ற பீ முகமது இப்ராஹிம்
7 கத்தியைக் காட்டி மிரட்டி சங்கிலியைப் பறிக்க வந்த திருடனை ஏதிர்த்துப் போராடி அவனை வெகு தூரம் துரத்தி மடக்கிப் பிடித்த வீர மங்கை ?
எங்கள் அமீர் (கோட்டை யிருப்பு)குப்பி
8 தன் பேரனை பள்ளியில் சேர்க்க யானை மேல் உட்கார வைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்றவர் ?
நைனா முகம்மது
தன் மகள் வயிற்றுப் பேரன்
அட்வகேட் க்ரீம் (எங்கள் முத்தக்காவின் துணைவர்) அவர்களை யானை மேல் உட்கார வைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தார்
6 உழைப்பை மட்டுமே மூலதானமாக வைத்து இறைவன் அருளால் வணிக நிறுவனங்கள் ,தொழிற்சாலை அமைத்து வெற்றி கண்டவர் யார் ?
இ னா என்ற எஸ். இப்ராஹிம் அவர்கள்
இவர் என் தாயின் ஒன்று விட்ட சகோதரர்
இவரின் ஒரு மகனும் எங்கள் சகோதரி
ஒருவரும் திருமண உறவில் இணைந்தனர்
இ னா வின் இன்னொரு மகன் என் தம்பியின் மாமனார்
எஸ் இப்ராஹிம்&கோ என்ற நிறுவனத்தை பல ஊர்களில் ஏற்படுத்தினார்
சிம்னி விளக்கின் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் துவங்கினார்
10 கலைத்துறையில் நெருங்கிய தொடர்பு உடையவர் ?
எங்கள் மைத்துனர் அப்துல் முத்தலிப் அவர்களின் தந்தை கே ஏ ரஹ்மான் அவர்கள்
11 பெரிய எழுத்தாளர் ?
ஆசிரியர் என்று அறியப்பட்ட
அப்துர் ரஹீம்
இவர் எங்கள் மைத்துனர் Prof MRP அப்துல் ரஹீமின் ஒன்று விட்ட சகோதரரும் மைத்துனரும் ஆவார்
Universal Publishers என்ற இவரது நிறுவனத்தின் மூலம் தன் நூல்கள் பலவற்றை வெளியிட்டார்
ஆற்றொழுக்கு போல் எளிய இனிய தமிழ் நடை இவரின் சிறப்பு
12 MLA?..
எங்கள் மைத்துனர்
பேரா. MRP அப்துல் ரஹீமின் பெரிய தந்தை
சையது முகமது அவர்கள்
13 வெளி நாட்டில் வசித்த தன் நண்பனின் குடும்பத்கை மிகப் பரிவுடன் கவனித்து நண்பர் வராமலேயே அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தியவர் ?
எங்கள் மைத்துனர் ராஜா ரஹ்மத் அலியின் தந்தை சின்னதுரை அவர்கள்
வெளிநாட்டு நண்பர் வள்ளல் ரெங்கசாமி என்ற ரெ னா பிள்ளை
14 அதிகம் பள்ளிப் படிப்பில்லா விட்டாலும்ஞானம் மிக்கவர்
வயது வித்தியாசம் பார்க்காமல் அடுத்த தலை முறையிடம் ஹிந்தி கற்றுக்கொண்டவர் ?
ஜெமிலா குப்பி (என் துணைவியின் தாய்)
கற்றுக் கொடுத்தவர் எங்கள் சகோதரி முத்து அவர்கள்
சரியான விடை சொல்லி பரிசு பெற்றோர்
சகோ
மும்தாஜ்
முதல் பரிசு ரூ 200/
(40 புள்ளிகள்)
சகோ
சுராஜ்
இரண்டாம் பரிசு ரூ 150/(23)
சகோ
ஜோதி
மூன்றாம் பரிசு ரூ 100/(20)
நான்காம் பரிசு ரூ 50/ each
சகோ
ஷேக்பீர்(12.5)&
முத்து (10)
ஐந்தாம் பரிசு ரூ 20/each
சிட்டு(8)
பாப்டி(7.5)
நௌசாத் (3)
கதீஜா(2.5)
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி
இப்படி ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
13052025 சனிக்கிழமை
சர்புதீன் பீ
இந்தப் பதிவு
என் உடன் பிறப்புகளுக்கு மட்டும் அனுப்பப்படுகிறது
தங்கள் பிள்ளைகளுக்கும் சுற்றத்துக்கும் அனுப்பி வைக்கவும்
No comments:
Post a Comment