வீடும் வீடுகளும் காரைக்குடி
10052023
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற உறவினர் ஒருவர்
அவர் மட்டும் ஒரு மாதம் முன்தாகவே திரும்பி வந்து விட்டார்
என்னால் வீட்டை விட்டு இருக்க முடியவில்லை
அதனால்தான் வந்து விட்டேன் என்றார்
அவர் வீடு என்று சொன்னது குடும்பத்தை அல்ல
, குடியிருக்கும் வீட்டை
பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு
பரிவோடு வளர்த்த தோட்டம் இதை எல்லாம்
பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றார்
எனக்கு இந்த மாதிரி எண்ணங்கள் , உணர்சிகள்
வந்ததே இல்லை
ஒன்றா இரண்டா , 30 க்கும் மேற்பட்ட வீடுகளில்
வாழ்க்கை ஓடி விட்டது . இதில் எந்த வீட்டின் மேல் பாசம் , ஆசை எல்லாம் வரும் ?
எல்லாமே வாடகை வீடுகள்தான்
இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிற்கும் வேறுபட்ட
குணங்கள் அதற்கேற்றார் போல் மன நிலைகள் , நிகழ்வுகள் எல்லாம் நினைவில்
நிலைத்திருக்கின்றன
அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
மிக இனிமையாக நினைவில் நிற்கும் வீடுகளில்
ஓன்று காரைக்குடி வீடு
செட்டிநாட்டுப் பாணியில் மிகப் பெரிய வீடு
கேட் எனப்படும் வெளி வாசலுக்கும்
வீட்டுக்கும் இடையே ஒரு நீண்ட அகன்ற பகுதி ,
கேட்டுக்கு கோட்டை வாசல் போல் பெரிய
கதவுகள் அதில் ஆட்கள் போக வர ஒரு சிறிய கதவு
இந்த இடைவெளியில் ஒரு ஓரத்தில மாட்டுக் கொட்டகை இரண்டு பசுக்களுடன்
அதற்கப்புறம் கிணற்றடி .அதில் அப்படி ஒரு
சுவையான தண்ணீர் .
குளிக்க, குடிக்க, சமைக்க, பாத்திரம் கழுவ
என்று எல்லாவற்றிற்கும் அதேதான்
தண்ணீர் இறைக்க கயிறும் இராட்டினமும் தான்
. மோட்டார் கிடையாது
குளியல் அறை பற்றி நினைவு இல்லை நான்
குளிப்பதெல்லாம் கிணற்றில் நீர் இறைத்து கிணற்றடியில்தான்
கிணற்றடிக்கு நிழல் தருவது போல் ஒரு பெரிய
வலுவான கொய்யா மரம் .வீட்டுக்குள்ளே
இருந்ததை விட கொய்யா மரத்தில் இருந்தது அதிக நேரம்
ஒன்றிரண்டு தென்னை மரங்கள் , பலா மரம்
ஓன்று
இரண்டு பகுதியாக இருந்த வீட்டை முழுதாக
எடுத்திருந்தோம்
இரண்டு வீட்டுக்கும் இடையில் தடுப்பு போல்
ஐந்தாறு கொடுக்காப்புளி மரங்கள்
அப்புறம் மகிழுந்து கொட்டகை
அதெல்லாம் போக நிறைய வெற்றிடம்
வீட்டுக்குப் பின்புறம் கோழிக்கூடு – 50,
60 கோழிகள் ,
காரைக்குடி வாழ்க்கை பற்றி முன்பே விரிவாக
எழுதி விட்டேன்
எனவே வீடு பற்றி மட்டும்தான் எழுத எண்ணினேன்
ஆனால் எண்ண அலைகளுக்கு தடை போட முடியவில்லை
எண்ணங்கள் , நிகழ்வுகளின் தொகுப்புதான்
ஒரு வீட்டை அழகாகவும் இனிமையாகவும் நினைவில் நிறுத்துவது
மற்றபடி வீட்டின் அழகோ ,அளவோ இல்லை
மிகச் சுருக்கமாக சில நிகழ்வுகள்
எங்கள் குடும்பத்தின் முதல் பேரக்குழந்தை
சாகுல் பிறந்தது இந்த வீட்டில் தான்
இரண்டு திருமணங்கள்
ஓன்று ஜென்னத் அக்காவுக்கு சென்னையில் மிகச்
சிறப்பாக நடந்ந்தேறியது
மற்றொன்று மும்தாஜ் அக்காவுக்கு
எங்கள் வீட்டுத் திருமணங்கள் எல்லாமே
மிகக் சிறப்பாக நிறைவேறும் . மண்டபம் கிடையாது , விடுதி அறை கிடையாது இருந்தாலும்
யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது
பாஸ்மதி அரிசி பிரியாணியை அத்தா அறிமுகப்
படுத்தியது மும்தாஜ் அக்கா திருமணத்தில் மேலும் ஒரு சிறப்பு
திருப்பத்தூருக்கு அருகில் என்பதால் விருந்தாளிகள்
அடிக்கடி வந்து போக , வீடு கல கல வென்றிருக்கும்
மொத்தத்தில்
அது
ஒரு அழகிய நிலாக் காலம்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்த பொற்காலம்
இறைவன்
நாடினால் மீண்டும் ஒரு பொற்காலக் கனவில் சிந்திப்போம்
10052023
புதன்
No comments:
Post a Comment